ஆரம்பமாகிறது தனுஷின் அடுத்தப் படம்! | dhanush, தனுஷ், வேல்ராஜ், அனிருத், aniruth, samantha, amy jacson,

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (20/03/2015)

கடைசி தொடர்பு:12:30 (20/03/2015)

ஆரம்பமாகிறது தனுஷின் அடுத்தப் படம்!

தனுஷின் அடுத்தப் படம் இன்றிலிருந்து ஆரம்பமாகிறது என்பதை தனுஷ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். 'வேலையில்லா பட்டதாரி' குழு மீண்டும் இணைந்து சென்னையில் படப்பிடிப்பை தொடங்கவிருக்கிறார்கள்.

பெயரிடப்படாத தனுஷ் நடிக்கவிருக்கும் இப்படத்தினை 'வேலையில்லா பட்டதாரி' பட இயக்குநர் வேல்ராஜ் இயக்கவிருக்கிறார். மேலும் அனிருத் இசையமைக்கிறார். சமந்தா மற்றும் எமிஜாக்சன் கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தினை தனுஷின் சொந்த நிறுவனமான ஒண்டர் பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

எமிஜாக்சன் தற்பொழுது விடுமுறை பயணத்தில் இருக்கிறார். விரைவில் சென்னையில் நடைபெறவிருக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

’விஐபி டீமுடைய அடுத்த ப்ராஜெக்ட் இன்றிலிருந்து தொடங்குகிறது. ரசிகர்கள் ஆசீர்வதித்து, ஆதரிக்கவும் வேண்டும் மேலும் இந்த படம் வி.ஐ.பி. பார்ட்- 2 அல்ல’,  எனவும் தெளிவுபடுத்தி தன்னுடை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் தனுஷ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்