கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு செல்லும் ஜிப்ரான்!

இசையமைப்பாளர் ஜிப்ரான் தன்னுடைய இசையுலகின் நடுவில் ஒரு குறும்படத்தினை தயாரித்துள்ளார். இந்த வருடத்திற்கான பிரான்ஸ் நாட்டில் நடக்கும் கேன்ஸ் திரைப்படவிழாவில் இவரின் குறும்படம் தேர்வாகியுள்ளது.

ஜிப்ரானின் நெருங்கிய நண்பரான ரத்திந்திரன் R.பிரசாத் இயக்கிய இப்படம் முழுக்க முழுக்க சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் படமாக்கப்பட்டுள்ளது. “ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்” என்ற குறும்படத்தை துருக்கி நாட்டை சேர்ந்த தயாரிப்பாளர்கள் பசாக் கேசிலர் பிரசாத் மற்றும் ஹக்கன் கண்டார்லி சார்பாக ஜிப்ரான் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“ ஒரு ரசாயன நிறுவன அதிகாரியை கொல்வதற்கு செல்லும் சுற்று சூழல் ஆர்வலரின் பயணம் தான் கதை. 30நிமிடம் ஓடக்கூடிய இந்த த்ரில்லர் கதையில் பாடலோ பின்னணி இசையோ கிடையாது என்பது கூடுதல் சிறப்பு.

ரத்திந்திரன் பல சர்வதேச திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் ஜெர்மனியில் இயக்கிய Frulling Erwachen என்ற படத் தொகுப்பு பெரும் வரவேற்பை பெற்றது. சினிமாவின் மீது ஈர்ப்பு கொண்டவர், அவருக்கு என் வாழ்த்துகள் என்று கூறினார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

ஜிப்ரான் மற்றும் ரத்திந்திரன் இருவருமே வரும் மே13 முதல் 23ஆம் தேதி வரை பிரான்சில் நடைபெறவிருக்கும்  கேன்ச் திரைப்பட விழாவிற்கும் அவர்களின் படத்தின் திரையிடலுக்கும் அழைக்கப்பட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!