சென்சார் பார்வையில் கொம்பன். வலியவனுக்கு u சான்றிதழ் ! | valiyavan, komban, karthi, jay, d imman, studio green, கொம்பன், வலியவன், கார்த்தி

வெளியிடப்பட்ட நேரம்: 17:33 (23/03/2015)

கடைசி தொடர்பு:18:10 (25/03/2015)

சென்சார் பார்வையில் கொம்பன். வலியவனுக்கு u சான்றிதழ் !

ஜெய் நடிப்பில் “வலியவன்” மற்றும் கார்த்தி நடிப்பில் “கொம்பன்” உள்ளிட்ட இரு படங்களும் இன்று சென்சார் போர்டு பார்வைக்கு சென்றுள்ளது.

“எங்கேயும் எப்பொழுதும்”,“இவன் வேற மாதிரி” படங்களைத் தொடர்ந்து சரவணன் இயக்கும் “வலியவன்” படம் தணிக்கைக்குட்பட்டு U சான்றிதழுடன் வரும் மார்ச் 27ல் வெளியாகவிருக்கிறது. ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

“குட்டிப்புலி” படத்தை இயக்கிய முத்தையா இயக்கும் படம் கார்த்தி நடிக்கும் ’கொம்பன்’. இப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தப் படம் என்பதால் தணிக்கைக் குழுவினர் பார்வையில் இருக்கிறது. மேலும் கொம்பன் ஏப்ரல் 2ல் வெளியிட ஸ்டூடியோ க்ரீன் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

360க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ’கொம்பன்’ வெளிவரயிருக்கிறது. எனினும் ஏப்ரல் 2ல் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட ‘கொம்பன்’ பட ரிலீஸ் தேதியில் சற்றே மாற்றங்கள் நிகழலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்