’முதல் பார்வையில் மலர்ந்த முதல் காதல்’ திரைப்படத்திற்காக பிரத்யேக ஆய்வு! | the best of me, தி பெஸ்ட் ஆஃப் மி, பிரிட்டன், britton movie

வெளியிடப்பட்ட நேரம்: 17:53 (09/02/2015)

கடைசி தொடர்பு:17:53 (09/02/2015)

’முதல் பார்வையில் மலர்ந்த முதல் காதல்’ திரைப்படத்திற்காக பிரத்யேக ஆய்வு!

தி பெஸ்ட் ஆஃப் மீ (the best of me) என்ற திரைப்படத்திற்காக பிரிட்டனில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு ஆண், பெண் இருபாலரும் சம விகிதத்தில் கலந்துகொண்டனர்.

சாதாரண மனிதன் தன்னுடைய முதல் காதலை மறந்து விட்டானா இல்லையா என்பதே ஆய்வு. ஆய்வு மேற்கொண்ட பலர் தங்களுடைய முதல் காதலை இன்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆய்வு மேற்கொண்ட 100ல் 40 பேராவது தங்களுக்கு திருமணம் நடந்திருந்தாலும், வேறு வாழ்க்கை ஏற்பட்டிருந்தாலும், சமுகவளை தளத்தின் மூலமாகவோ, சொல்போன் மூலமாகவோ இன்றும் பழைய காதலனுடனோ, காதலியுடனோ பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர் என்பது ஆய்வின் முடிவு.

தங்களுடைய “முதல் பார்வையில் மலர்ந்த முதல் காதல்” என்றும் மனதிலிருந்து அழியாது என்றும் கூறுகின்றனர் ஆய்வில் கலந்துகொண்டவர்கள். 80 வயதானாலும் தன்னுடைய முதல் காதலியோ / காதலனோ அவர்களின் மன ஓரத்தில் நினைவாக நிறைந்திருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. தமிழ் இலக்கியத்திலும், கதைகளிலும் முன்னமே பல்வேறு காலக்கட்டத்தில் சொல்லப்பட்ட பழைய செய்தி தான் இந்த ஆய்வு என்றாலும் பழைய காதல் என்று ஏதும் இல்லை. காதல் என்றும் புதுமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

காதலிக்கும் இருவர் பிரிந்து விடுகின்றனர். இருவரும் அவரவர்களுக்கான வாழ்க்கையைத் தேடிச் சென்றுவிடுகின்றனர். ஒரு சமயத்தில் இருவரும் சந்திக்க நேருகிறது. சந்தித்த இருவரும் தங்களுடைய முதல் காதலுக்கு இரண்டாம் வாய்ப்பு தருகிறார்களா இல்லையா என்பதே இப்படத்தின் கதை.

பலர் திருமணத்திற்குப் பிறகு தங்களுடைய முதல் காதலை நினைத்துப் பார்கின்றனர். “முதல் காதலியுடன் திருமணம் ஆயிருந்தா எப்பிடி இருக்கும்”, “ஏன் நாங்க பிரிஞ்சுட்டோம்?” “என்ன தான் எங்களுக்குள் நடந்தது” என்று பிரிந்த காதலர்கள் பலர் சிந்திக்கின்றனர். தங்களுக்குள் பல கேள்விகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை மையமாக வைத்தே இப்படம் உருவாகி வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close