ஐ.நா.வில் திரையிடப்பட்ட ஆவணப்படம்! | திரைப்பட இயக்குநரும், ஈழ ஆதரவாளருமான வ.கெளதமன் இப்போது குறும்பட, ஆவணப்பட இயக்குநராக ரொம்பவே பிஸி!

வெளியிடப்பட்ட நேரம்: 15:04 (28/03/2015)

கடைசி தொடர்பு:15:04 (28/03/2015)

ஐ.நா.வில் திரையிடப்பட்ட ஆவணப்படம்!

திரைப்பட இயக்குநரும், ஈழ ஆதரவாளருமான வ.கெளதமன் இப்போது குறும்பட, ஆவணப்பட இயக்குநராக ரொம்பவே பிஸி!

சமீபத்தில் நடந்துமுடிந்த  நார்வே சர்வதேச திரைப்பட விழாவில் 'அரசு மக்களுக்குக் கொடுக்கும் பரிசு மது. மக்கள் அரசுக்குக் கொடுக்கும் பரிசு உயிர்' என்ற வரிகளை மையமாகக்கொண்டு வ.கெளதமன் இயக்கிய 'புத்தாண்டு பரிசு' என்ற குறும்படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான விருதினைப் பெற்றிருந்தார்.  இப்போது 'Pursuit Of Justice' என்ற ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த ஆவணப்படம் ஐநா சபையில் திரையிடப்பட்டிருப்பது ஹைலைட்!

2009-ன் தமிழ் ஈழப் போருக்குப் பின்னரும், இன்றுவரை  ரகசியமாகத் தொடரப்படும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை உலகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறாராம் வ.கெளதமன். உலக நாடுகளின் பார்வையில் படாமல் சத்தமில்லாமல் நடந்துகொண்டிருக்கும் ஓர் இனப்படுகொலையை விவரிக்கிறது 'Pursuit Of Justice' ஆவணப்படம். 

ஏற்கெனவே கெளதமன் இயக்கி, நடித்த 'மகிழ்ச்சி' படத்தைத் தயாரித்த 'அதிர்வு திரைப்பட்டறை' த.மணிவண்ணனே இந்த ஆவணப்படத்தையும் தயாரித்திருக்கிறார்.  இந்த ஆவணப்படம் கடந்த மார்ச் 25 அன்று ஐ.நா.சபையில் திரையிடப்பட்டிருக்கிறது.  படத்தைப் பார்த்த ஐரோப்பிய, ஆப்பிரிக்க ஐ.நா பிரதிநிதிகள், ஈழப் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு காண தங்களுடைய நாட்டின் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைப்பதாக உறுதி அளித்திருக்கிறார்களாம்!

தமிழகத்தில் இருந்து ஈழம் சார்ந்த ஓர் ஆவணப்படம் ஐ.நாவில் திரையிடப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.  ஐ.நாவில் வரவேற்பைப் பெற்ற இந்த 'Pursuit Of Justice' ஆவணப்படத்தின் வெளியீடு சமீபத்தில் சென்னை ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது.

இந்த ஆவணப்படத்தைத் தொடர்ந்து வ.கெளதமன் தற்போது பழ.நெடுமாறன் எழுதிய 'பிரபாகரன் : எழுச்சியின் வடிவம்' புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டு பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கிக்கொண்டிருக்கிறார்!

- கே.ஜி.மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close