Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மனித கறியை விரும்பும் மக்கள்! பிஷ் & கேட்

னித கறியை சமைத்து உணவாக்கும் ஒரு ஹோட்டல், அந்த ஹோட்டலுக்கு குவியும் மக்கள் என்று நிஜக்கதையை மையமாக எடுக்கப்பட்ட ஃபிஷ் & கேட் திரைப்படம் மற்றும் ஒழுக்கமில்லாத குழந்தையை திருத்தும் கார்மெலா எனும் ஆசிரியை அவர்களுக்கு நடுவிலான குழந்தையின் உலகம் பற்றியான பிகேவியர் எனும் கியூபான் திரைப்படம். இரு மாறுபட்ட கதைகள் அவற்றின் ஊடாக சமுகத்தின் மீதான ஒரு பார்வை இதோ!

குழந்தைகளின் குரல் பேசும் “பிகேவியர்”

கியூபான் நாட்டு படம் . ஒரு குழந்தை வாழும் சூழல்தான் அவனை நல்லவனாகவும் தீயவனாகவும் மாற்றுகிறது என்ற கருவை மையமாக கொண்ட படம். வயது முதிர்ந்த ஆசிரியையாக வரும் கார்மெலா, குழந்தைகளின் பொக்கிஷாமான கார்மெலாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை 12 வயது சாலா மற்றும் யெனி என்னும் இரு ஒழுக்கமில்லா குழந்தைகளை கண்காணிக்கும் பொருப்பை தலையில் கட்டுகிறது.

பள்ளி பாட வேளை போக மீதி நேரம் கார்மெலாவின் வேலை சாலா , யெனியை கண்கானிப்பதே.யெனியின் விஷயம் அவளது வருகை பதிவேட்டு பிரச்னை மட்டுமே எனவும் மேலும் அது அவளது தந்தையால் மட்டுமே என கண்டறிந்து சரி செய்கிறார் கார்மெலா.  சாதரணமாக நினைக்கும் கார்மெலாவிற்கு படு இடைஞ்சலாக இருப்பவன் சாலா தான். இதற்கெல்லாம் பின்னனி அவனது குடும்பம் தான் என கண்டறிந்து அவனை சரி செய்கிறார். மேலும் அவன் மூலமாகவே அவனது தாயையும் மாற்றுகிறார். நாய் சண்டை, விலங்குகளை துன்புறுத்து குணம் என இப்படி இருக்கும் சாலாவை சிறிது சிறிதாக மாற்றுகிறார் கார்மெலா.

இந்நிலையில் கார்மெலாவை வயது அடிப்படையில் ஓய்வு பெற வைக்க முயல்கிறது பள்ளி நிர்வாகம். ஒரு கட்டத்தில் வெறுத்து போயி போங்கடா என வேலையை உதறி தள்ளிவிட்டு ஓய்வு அறிக்கையில் கையெழுத்து போட்டு விட்டு உடைந்த மனதுடன் நடந்து வரும் கார்மெல்லாவிற்கு  12 வயது சாலாவின் அழைப்பு குரல் கேட்கிறது. அதை கேட்டுவிட்டு புன்முறுவல் செய்யும் கார்மெலாவுடன் படம் முடிகிறது. எங்கிருந்தாலும் தனக்கு பிடித்த வேலையை தன்னால் செவ்வனே செய்ய முடியும் என கருத்து சொல்கிறது ’பிகேவியர்’.

எர்னெஸ்டோ டரனாஸ் இயக்கத்தில் வெளியான படம் சிகாகோ, ஹவானா, டொரெண்டோ, 5க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களை கடந்து வந்துள்ளது. எந்த பிரம்மாண்டமான செட்டுகளோ, காஸ்ட்யூம்களோ இல்லாமல் ஒரு மனிதனின் குணம் அவனது சூழ்நிலையைப் பொருத்தது என்பதை அழகாகவும் எளிமையாகவும் சொல்லிய படம்

மனித சதைக்காக ஹோட்டலில் குவிகிறது ஒரு கூட்டம்! - “ஃபிஷ் & கேட்”

டப்பாவிகளா இப்படியெல்லாமா பண்ணுவீங்க என்று உலகையே சற்று உலுக்கிய மனித கறி சமைத்த ஹோட்டல் கதையை பின்னனியில் வைத்து எடுக்கப்பட்ட ஈரானிய படம். பட்டம்விடும் திருவிழாவிற்காக ஒரு இளைஞர் கும்பல் கேம்ப் போட்டு தங்களது பட்டத்தை தயாரித்து கொண்டிருக்கும் தருணம். ஒவ்வொருவரின் வாழ்க்கை, குணங்கள், விருப்பங்கள் என ஒவ்வொருவர் பின்னனியிலும் படம் நகர்கிறது.

உண்மையில் படமே பின்னனியில்தான் நகர்கிறது. கிட்டத்தட்ட நம்மூர் மிஸ்கின் ஸ்டைலில் கேமரா பயணிக்கிறது. ஒரே தருணத்தில் நடக்கும் சம்பவத்தை பின்னனியாக கொண்டு நடக்கும் இக்கதையில் ஆரம்பமே ஒரு கொலை குறித்து பேசப்பட என்ன நடந்தது என செல்கிறது கதை. ஊருக்கு பக்கத்தில் மனிதகறி சமைத்து அதை விற்று வந்த ஹோட்டல் காரர்கள் இப்படி ஏரி அருகில் தங்கும் மனிதர்களை வேட்டையாடுகிறார்கள்.


படம் சற்றே என்னய்யா சொல்ல வராய்ங்க என அனைவரையும் கேட்க வைத்தாலும் படம் முழுக்க ஒரே டேக்கில் எடுக்கப்பட்டுள்ளதுதான் ஆச்சர்யம். சுமார் 10க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள், ஏரியை சுற்றியே என்றாலும் பல லோகேஷன்கள், மேலும் சுற்றி சுற்றி திரும்ப திரும்ப வரும் விளக்கங்கள் என ட்ரைகன் படமாக நம் தலையை சுற்ற வைத்துவிடும்.

கடைசியாக இசை வாசிப்பில் இங்கு ஒரு கொலை நடக்க , அங்கே விளக்குகளுடன் பட்டங்கள் பறக்க படம் முடிகிறது. ஒரே டேக்கில் என்ன நடக்கிறது என திரில்லிங்கில் உறைய வைத்த இயக்குநர் ஷாஹ்ரம் மோக்ரிக்கு ஒரு சபாஷ் போடலாம். அதிலும் 2 மணிநேரம் 14 நிமிடங்கள் வேறு வேறு லோகேஷன்கள், பலதரப்பட்ட காதாபாத்திரங்கள் என ஒரு டேக்கில் எடுப்பது அரிதான விஷயம் என்கையில் இயக்குநருக்கு சபாஷ் போடலாம். 15க்கும் மேலான திரைப்பட விழாக்களை சந்தித்த படம்.

-ஷாலினி நியூட்டன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்