அகிரா சினிமா மேல் கொண்ட காதலை உணர்த்தும் அற்புதக் காட்சி! | Akira's dersu uzala Movie Scene!

வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (13/07/2015)

கடைசி தொடர்பு:17:47 (13/07/2015)

அகிரா சினிமா மேல் கொண்ட காதலை உணர்த்தும் அற்புதக் காட்சி!

உலக சினிமா பிரியர்கள் தூக்கிக் கொண்டாடும் அற்புத இயக்குநர் அகிரா குரோசவாவின் டாப் 10 படங்களில் ஒன்று “தெர்சு உசாலா”.இப்படத்தின் அத்தனைக் காட்சிகளுமே ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடிப்பவை. அதிலும் அற்புதமான காட்சி ஒன்றிருக்கிறது.

இப்படத்தில் கேப்டனும் ,அவரின் உயிர் நண்பனுமான தெர்சுவும் பனிப் புயலில் மாட்டிக்கொள்வார்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் யாருமே இருக்கமாட்டார்கள்.

அன்றைய இரவு அவர்கள் மாட்டிக்கொண்டே இடத்திலேயே தங்க நேரிடும்.அங்கே அடிக்கும் குளிரில் மனிதனால் ஒரு சில நிமிடங்கள் கூட உயிர்வாழ முடியாது. அப்போது தெர்சுவும் அவனின் நண்பனும் என்ன செய்தார்கள் என்பதே அந்த காட்சி.

ஒரு சில நிமிடங்களே ஓடக்கூடிய இந்தக் காட்சியில் பனிப்புற்களும் ஒரு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறது.  பனிப்புற்கள்  சரியான உயரம் வளர்வதற்காக  அகிரா ஒன்றரை வருடங்கள் காத்திருந்தார்.  பனிப்புற்கள் அவர் நினைத்த உயரத்திற்கு வளர்ந்த பிறகுதான் அந்த காட்சியை படமாக்கினார். அவரின் காத்திருப்பும் கலையின் மீதான காதலும் நம்மை பிரமிக்கவைக்கிறது. தெர்சு உசாலா படத்தின் அந்தக் காட்சி இதோ,

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்