இனி பேய் இணையம் வழியாக வரும் - டெரர் காட்டும் அலெக்ஸியா குறும்படம்!

அண்ட்ரெஸ் போர்கி இயக்கம் , கதையில் வெளியான படம் அலெக்ஸியா.  2013 நவம்பர் மாதம் நேரடியாக திரைப்பட விழாக்கள் பலவற்றில் வெளியிடப்பட்ட ஸ்பெயின் நாட்டு படம். அர்ஜெண்டினா, மெக்ஸிகோ, அமெரிக்கா , என பல நாடுகளிலும் நடந்த குறும்பட விழாக்களில் சிறந்த படத்திற்கான பல விருதுகளை பெற்றுள்ளது. 

இனி வளர்ந்து வரும் அறிவியலில் டிவி, மொபைல், லைட் என இவைகளைக் கடந்து பேய்கள் இணையம் மூலம் வரும் என்பதை ஒற்றைக் கான்செப்டாக எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம். ரிலீஸாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. இப்போது வரை படத்திற்கு விருதுகள் கிடைத்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

ஒரு இளைஞன் தனது முன்னால் காதலி இறந்து விட அந்த சோகத்தில் இருக்கிறான். இனியாவது அவள் இணைப்பும் நினைப்பும் வேண்டாம் என சமூக வலைதளத்தில் இருக்கும் அவளது கணக்கை அன்ஃப்ரண்ட் செய்ய முயல்கிறான். மேலும் இன்னொரு பெண்ணின் நட்பும் கிடைக்க இருவரும் அந்த நிமிடமே சந்திக்க நினைக்கிறார்கள்.

 அப்போது அவனது கணிணி ஏதோ பிரச்னைகளுக்கு ஆளாகி சிறிது நேரத்தில் அலெக்ஸியாவின் ஒரு புகைப்படம் மட்டும் தெளிவாக தெரிய ஆரம்பிக்கிறது. பயத்தின் உச்சத்தில் இருக்கும் இளைஞன் கணிணியின் மின் இணைப்பை துண்டித்தப் பிறகும் பிரச்னை நடக்கிறது. வெறும் 8.நிமிடங்கள் 54 நொடிகள் மட்டுமே ஓடும் இந்த குறும்படம் இப்போது ஹாலிவுட்டின் பேய் பட ரசிர்கள் லிஸ்டில் அபிமான படமாக இருக்கிறது. 

குறும்படத்தைக் காண:  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!