வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (22/07/2015)

கடைசி தொடர்பு:10:33 (23/07/2015)

சில நிமிடங்களில் திகில் கொடுக்கும் குறும்படம்!

 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டமானியன் மெக் கார்தி கதை திரைக்கதையில் உருவான ஜெர்மன் நாட்டு குறும்படம் ‘ஹி டைஸ் அட் தி எண்ட்’(He Dies At The End). வசனங்களோ, பெரும் பொருட் செலவோ இல்லாமல், மேலும் ஒரே ஆளை வைத்து வெறும் 4 நிமிடங்களில் ஒரு குட்டி திகில் படத்தை எடுத்திருக்கிறார்கள். 

சிறந்த ஹாரர் , சிறந்த குறும்படம், சிறந்த இயக்குநர் என பல பரிந்துரைகளின் வரிசையில் அர்ஜெண்டினா, அமெரிக்கா, பாஃப்தா, சிஐஎஃப், பிஎக்ஸெம் உள்ளிட்ட பல விருதுகளை வென்று  இந்த படம் இப்போது வரை யூடியூபில் பலரையும் கவர்ந்துள்ளது. 

 

கதை இதுதான், நேரம் கடந்து இரவில் கணிணியில் வேலை செய்யும் ஒருவர். அவருக்கு தனக்கு பின்னால் இருக்கும் இருட்டுப் பகுதி அறையில் ஏதோ சத்தம் கேட்கிறது. எனினும் வேலை மும்முரத்தில் தொடர்ந்து பணி செய்கிறார். ஒரு கட்டத்தில் அவரது கணிணி அவரிடம் சில கேள்விகளை கேட்க ஆரம்பிக்கிறது. உங்கள் மரணம் எப்படி என தெரிய வேண்டுமா என ஆரம்பித்து, 

நீங்கள் நேர்மையானவரா, தனியாக இருக்கிறீர்களா, என பல கேள்விகள் வரிசையாக ஆம் , இல்லை பதில் கூறும்படி போக ஒரு கட்டத்தில் அவரது டேபிளில் இருக்கும் பொருட்கள், பொம்மை, செடி என கேள்விகள் எழ பயம் தொற்றிக் கொள்கிறது. ஒரு கட்டத்தில் மீண்டும் நீங்கள் நேர்மையானவரா, தனியாக இருக்கிறீர்களா, உங்கள் பின் பகுதியில் இருட்டாக இருக்கிறதா, உங்கள் பின்னார் இருக்கும் நபர் யார் என கேட்க அவ்வளவு தான் பயத்தின் உச்சத்திற்கு செல்கிறார் அந்த மனிதர். 

அப்படியே பின்னால் நகர ஒரு ஜந்து போன்ற உருவம் பக்கத்தில் நிற்க படம் முடிகிறது. நாயகனாக ஃபிண்டன் கோலின் நடித்திருக்கிறார். 

குறும்படத்தைக் காண: 

 

- ஷாலினி நியூட்டன் - 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்