உணர்வுகளை உரசிப் பார்க்கும் ‘ஹோம் ஸ்வீட் ஹோம்’ அனிமேஷன் குறும்படம்!

பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்த ராஜமௌலி தனது பேட்டியில் உணர்வுகளை உரசிப் பார்க்கும் படங்களுக்கு லாஜிக் தேவையில்லை எனக் கூறியது நாமறிந்ததே. அந்த பாணியில் உருவாகியிருக்கும் படம் தான் ‘ஹோம் ஸ்வீட் ஹோம்’. கேன்ஸ் திரைப்பட விழா, சிக்கர்ஃப், மெக்ஸிகோ திரைப்பட விழா, ASIF விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளது இந்த 10 நிமிட அனிமேஷன் படம்.

படத்தை பியர்ரி க்லினெட், அலிஜாண்ட்ரோ டையாஸ், ரோமெயின் மேஸ்வெட், பக்கோலாட் ஸ்டீபன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். சின்ன கதைதான் ஆனால் உணர்வுகளுக்கு ஆதித முக்கியத்துவம் நிறைந்த படம். வீடுகளுக்கும் நம்மை போல் உயிர் இருந்தால் எப்படி இருக்கும் என்ற அசாத்திய சிந்தனையின் விளைவே இந்த குறும்படம். 

 

ஒரு வீடு தனது விற்பனைக்கு என்ற போர்டை கீழே தள்ளிவிட்டுவிட்டு எல்லாவற்றையும் மறந்து ஒரு பயணம் செல்ல நினைத்து கிளம்புகிறது. அதனுடன் ஒரு பழைய வீடும் இணைந்துக் கொள்கிறது. தள்ளாத பழைய வீடும் , படத்தின் நாயகனான வீடும் பல ஊர்களை தாண்டி, நிலங்களை தாண்டி செல்கிறார்கள். அந்த வேளையில் பழைய வீட்டின் ஊன்றுகோல் குச்சி உடைந்துவிட அதற்காக இந்த நண்பன் வீடு, இன்னொரு வீட்டின் பால்கனி அலங்கார கட்டையை உடைத்துகொண்டு வந்து பழைய வீட்டிற்கு கொடுக்கிறது. 

இதை பார்த்து அந்த பெரிய வீட்டில் இருக்கும் நாய் வீடு நாயகனான வீட்டை துறத்திக் கொண்டு வர அப்படியே இவர்களுடன் இணைந்துக் கொண்டு தானும் நடக்கிறது. ஒரு கட்டத்தில் பழைய வீட்டின் காலம் முடிந்துவிட மறுநாள் சூரிய உதயத்தின் போது எழுந்திருக்காமல் போகவே , நண்பனுக்கும் , சின்ன நாய் வீட்டிற்கும் சோகம் தோற்றிக் கொள்கிறது. பின் பிரிய மனமின்றி இருவரும் அந்த பழைய வீட்டை அங்கேயே சோகம் தாங்கி விட்டுச் செல்கிறார்கள். அப்படியே படத்தை முடித்துவிடுகிறார்கள். 

இந்த படத்தின் பெரிய பலமே இசை தான். அதை சரியாக செய்திருக்கிறார் வேலண்டின் லஃபோர்ட். லாஜிக்கோ, வசனமோ, ஏதுமின்றி ஒரு அழகான நட்பை எடுத்துரைத்திற்க்கும் படம். கண்டிப்பாக முடிவு சின்னதொரு சோகத்தை நம் மனதில் நிறுத்தும் என்பதில் சந்தேகமில்லை. 

குறும்படத்தைக் காண: 

- ஷாலினி நியூட்டன் - 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!