மனதை உலுக்கும் வறுமையின் உச்சம் - 'சிக்கன் அ லா கார்டே' ஆவணப்படம்! | It'll Melt your Heart - Chicken a la Carte Short Film!

வெளியிடப்பட்ட நேரம்: 17:56 (27/07/2015)

கடைசி தொடர்பு:18:27 (27/07/2015)

மனதை உலுக்கும் வறுமையின் உச்சம் - 'சிக்கன் அ லா கார்டே' ஆவணப்படம்!

னக்கு பசி அடங்கிய பின் சாப்பிடும் ஒவ்வொரு இட்லியும் அடுத்தவருடையது’ என ‘கத்தி’ படத்தில் விஜய்யின் பிரபல வசனம் வரும். அதை அப்படியே அப்பட்டமாக பிரதிபலிக்கிறது இந்த சீன நாட்டின் ஆவணப்படம்.

’சிக்கன் அ லா கார்டே’ என்ற இந்த படம் வெறும் 6 நிமிடங்களில் நம் மனதை அசைத்துப் பார்க்கிறது. ஹாயாக ரெஸ்ட்டாரண்டில் தினம் சிக்கன் மட்டன், பீசுகளையோ, அல்லது சாப்பாட்டை அப்படியேவோ வேண்டாம் என தட்டு நிறைய வைத்து விட்டு ஸ்டைலாக எழும் பழக்கம் உடையவர்களாக மாறி வருகிறோம் இக்கால இளைஞர்கள். 

ஆனால் ஒரு நேரம் ஒரு இட்லி கூட கிடைக்காமல் வாடும் எத்தனையோ மக்கள் இந்த உலகில் இருக்கிறார்கள், அப்படி நாம் வேண்டாம் என கீழே போடும் சாப்பாடுகளை கொஞ்சம் யோசித்தால் நல்ல முறையில் இல்லாதவர்களுக்கு கொடுக்கலாம். ஆனால் செய்ய மாட்டோம். இந்த படம் அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.மீதம் வைக்கப் போகிறோம் என்பது கண்டிப்பாக நமக்கு இரண்டு துண்டுகளையோ, அல்லது ஆரம்பித்த சில நிமிடங்களிலேயோ நிச்சயம் தெரிந்துவிடும். அப்படி மீதம் வைக்கும் சாப்பாடுகளை கொஞ்சம் முன்னரே யோசித்து தனியாக பிரித்துவைத்துவிட்டு சாப்பிடலாம். பிறகு அதை பேக் செய்து போற வழியில் இருக்கும் இல்லாத மக்களுக்கு கொடுக்கலாம். ஆனால் அவ்வளவு சிந்திப்போமா என்பதே இங்கே முதல் கேள்வி தான். 

சரி இந்த ’சிக்கன் அ லா கார்டே’ படத்தின் கதை இதுதான், சீனாவின் கேஎஃப்சி சிக்கன் கடையில் படம் ஆரம்பிக்கிறது. இரண்டு மேல் தட்டு இளம்பெண்கள் சிக்கனை ஆர்டர் கொடுத்துவிட்டு வங்கி வைத்து கொஞ்சம் சாப்பிட்டு விட்டு அப்படியே தட்டு நிறைய வைத்துவிட்டு கிளம்புகிறார்கள். இப்படி முதல் பாதி முழுக்க மேல் தட்டு வாழ்வை பிரதிபலிக்கிறது. இருட்டும் வேளையில் ஒரு மனிதர் அந்தக் கடைக்கு பெரிய வாளியைக் கொண்டு வருகிறார்.அதில் கடையின் ஒரு டப்பாவில் குவித்து வைக்கப்பட்டுள்ள மீதமான சாப்பாட்டுப் பொருட்களை எடுத்துக்கொள்கிறார். மேலும் தனியாக வைக்கப்பட்ட இன்னொரு சின்ன வாளியில் மீந்த சிக்கன், மட்டன் துண்டுகள் உள்ளிட்டவைகளையும் பார்த்து நல்லவைகளை தனியாக பிரித்து எடுத்துக்கொள்கிறார். 

சந்தோஷமாக உணவுகளை தனது வாளியில் நிரப்பிக் கொள்ளும் அந்த மனிதர் அதை எடுத்துக் கொண்டு ஒரு புறநகர் பகுதிக்கு செல்ல அங்கே உள்ள ஏழை சிறுவர்கள், சிறுமிகள் என அந்த வாளியை மொய்த்துத் தள்ளுகிறார்கள். சாப்பாட்டிற்கு ஏங்கும் சிறுவர்கள் சிக்கன் நூடுல்ஸ் என கிடைக்க ருசித்து சாப்பிடுகிறார்கள். 

அந்த பெரிய வாளியை தன் ஏரியா குழந்தைகளுக்கு கொடுக்கும் மனிதர் சின்ன பையில் தனக்கும் தன் குடும்பத்தாருக்குமான உணவை மனைவியிடம் கொடுக்கிறார். அவரது குழந்தைகள் ஆர்வமாக தட்டுகளுடன் காத்திருக்கிறார்கள். கிடைக்கும் ஒருவேளை உணவையும் மனைவி பகிர்ந்து வைத்தவுடன் குடும்பமே கடவுளுக்கு நன்றிகளைக் கூறிவிட்டு உண்கிறார்கள். கண்டிப்பாக இது ஒரு பக்கம் பார்க்கையில் அந்த கடையின் மனிதாபிமானத்தை பாராட்டத்தான் வேண்டும். 

ஒவ்வொரு உணவுக் கடைகளும், ரெஸ்டாரண்டுகளும் இது போன்ற விஷயங்களை செய்தாலே ஓரளவு பசியை போக்கலாம் என்பதை மிக அழகாக எடுத்துரைக்கிறது இந்த ஆவணப்படம். சீனாவின் ஃபெர்டினெண்ட் டிமாடுரா  இயக்கத்தில் உருவான இப்படம் உலகின் பல விழாக்களில் விருதுகளை பெற்றதோடு வருத்தமும் அடையச் செய்துள்ளது. 2005ஆம் ஆண்டு வெளியான இந்த படம் உலகின் வறுமைகோட்டிற்கு கீழே உள்ள வாழ்வை மனதை கணமாக்கி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. 

படத்தைக் காண:  

 

- ஷாலினி நியூட்டன் - 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்