பேலன்ஸ்: வாழ்க்கையின் உண்மையை எடுத்துச் சொல்லும் ஆஸ்கர் விருது பெற்ற அனிமேஷன் குறும்படம்!

வ்வொருவரும் விட்டுக்கொடுத்தும், நம்மை சேர்ந்தவர்களுக்காக கொஞ்சம் சகித்துக்கொண்டும், இப்படி  கொஞ்சம் அப்படி கொஞ்சம் என பேலன்ஸ் செய்துதான் வாழ்வை வாழ வேண்டும். மேலும் ஊரோடு ஒத்திருப்பதே சாலச் சிறந்தது என்பதை மிக எளிமையாக எடுத்துச் சொல்லும் படம் தான் ‘பேலன்ஸ்’. 

வுல்ஃப்கேங், கிறிஸ்டோஃப் லாயுன்ஸ்டீன் இயக்கத்தில் 1989ம் ஆண்டு வெளியான ஜெர்மன் நாட்டு அனிமேஷன் குறும்படம் ’பேலன்ஸ்’. ஐந்து தனிபட்ட நபர்கள் விண்வெளியில் மிதக்கும் ஒரு தளத்தின் நடுவில் நிற்கிறார்கள். ஒருவர் அசைந்தாலும் அனைவரும் கீழே விழுந்துவிடுவார்கள் என்ற நிலை. இப்படியாக ஆடிக்கொண்டிருக்கும் அந்த பரப்பில் முதலில் ஒருவர் நகர மற்றவர்கள் ஈடு கொடுத்துநகர்ந்து கீழே விழுவதை தடுத்து பேலன்ஸை சரி செய்கிறார்கள். 

 

இப்படியே ஐவரும் அந்த மிதக்கும் பரப்பின் நுனிக்கு சென்று மீன் பிடிக்கும் தூண்டிலை போட ஐவரில் ஒருவருக்கு கணமான ஏதோ ஒன்று கிடைக்க மற்றவர்கள் அந்த கணத்தை ஈடு செய்ய எதிர்பக்கம் சென்று கணத்தை சமன் செய்கிறார்கள். 

தூண்டிலில் சாவி கொடுத்தாலோ அல்லது காற்றடித்தாலோ சின்ன இசையை எழுப்பும் ஒரு மரப்பெட்டி கிடைக்கிறது . அந்த பெட்டியை ஒருவர் மாற்றி ஒருவர் என சோதித்து அந்த இசையைக் கேட்டு மகிழ்கிறார்கள். 

இப்படியாக ஒவ்வொரு நபராக இசையைக் கேட்டு மகிழ ஒரு கட்டத்தில் ஒருவன் மட்டும் அதை சொந்தம் கொண்டாட எண்ணி பெட்டியின் மீது ஏறி அமர்ந்துகொண்டு மிதக்கும் பரப்பின் மீது நகர்ந்துகொண்டே பேலன்ஸை சிதறடிக்கிறான். மற்றவர்கள் சமன் செய்ய வேண்டி ஓடி சென்று நிற்க பெட்டியுடன் இருப்பவனோ அவர்கள் அனைவரையும் தள்ளிவிட்டுக் கொண்டே இருக்கிறான். 

அனைவரையும் கீழே பிடித்து தள்ளிவிட்டு திரும்பி பார்க்கும் போது பெட்டியும் அவனும் மட்டுமே அந்த தளத்தில் இருக்கிறார்கள். எனினும் அவனால் நகரவோ , இசையைக் கேட்டு மகிழவோ, முடியாது. கடைசிவரை அவன் அதே இடைத்தில் நிற்க வேண்டும். அப்படியே படம் முடிகிறது.

உண்மையும் அதுவே அனைவரோடும் ஒற்றுமையாக இருந்து, வாழ்வை பேலன்ஸ் செய்து வாழ வேண்டும் என்பதையே சுட்டிக் காட்டுகிறது இந்த பேலன்ஸ் குறும்படம். 1989ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது பெற்ற படம். பலராலும் இதன் கான்செப்டுக்காக புகழப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு டீம் வொர்க்காக இருக்கும் வரை நன்றாகப் போகும் எந்த செயலும் ஒருவர் பிரச்னை செய்தாலும் அது மொத்த டீமையும் பாதிக்கும் என்பதையும் உணர்த்துகிறது இந்த படம். 

 

குறும்படத்தைக் காண: 

 

- ஷாலினி நியூட்டன் - 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!