ஆபாசப் படத்தில் இருப்பது நான் தான் ஈழத்துநடிகையின் துணிச்சலான பேச்சு | Srilanka Actress Divya shocking answers for her abuse video

வெளியிடப்பட்ட நேரம்: 12:04 (26/08/2015)

கடைசி தொடர்பு:13:01 (26/08/2015)

ஆபாசப் படத்தில் இருப்பது நான் தான் ஈழத்துநடிகையின் துணிச்சலான பேச்சு

ஒரு நடிகைக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டுமானால் அந்நடிகையின் அந்தரங்க  புகைப்படங்களையோ  அல்லது போலியான வீடியோவையோ பரப்பி அவர்களைப் பற்றியான தவறான சித்தரிப்புகளை வெளியிடுகின்றனர் பல இணைய விஷமிகள்.  அவர்கள் பிடியில் தற்பொழுது சிக்கியிருக்கிறார் ஈழத்து நடிகை திவ்யா.

திவ்யாவின் அந்தரங்க காணொளி சில தினங்களுக்கு முன்பு இணையத்திலும், வாட்ஸ் ஆஃபிலும் வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து, இவருடைய போட்டி நடிகையான மிதுனா திட்டமிட்டு வெளிநாட்டவர்களின் உதவியின் மூலம் இவ்வீடியோவைப் பரப்பியதாகவும்  தகவல்கள் வெளியானது.

இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக திவ்யா பதிலளித்துள்ளார். அந்த அந்தரங்க வீடியோவில் இருப்பது நான் தான் என்று ஒப்புக் கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

மேலும் பேசும் போது, “  என்னுடைய செல்ஃபோன் பழுதடைந்துவிட்டதால் திருத்தக் கடையில் கொடுத்திருந்தேன். அப்போது தவறுதலாக என்னை விரும்பாத விஷமிகள் வெளியிட்டிருக்கிறார்கள். இதை வைத்துக் கொண்டு என்னைப் பற்றி தவறாகப் பேசாதீர்கள்” என்று கொதித்தெழுந்துள்ளார். 

மேலும் நடிகை மிதுனா திட்டமிட்டு இவ்வீடியோவை வெளியிட்டார் என்று கூறியது அனைத்துமே பொய்யான செய்தி. இந்தமாதிரியான தவறான செய்திகளை பரப்பி உங்கள் நேரத்தை தான் செலவழிக்கிறீகள். எனக்கு இதனால் எந்த பிரச்னையும் கிடையாது என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் பல நடிகைகளின் ஆபாச படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஆனால் எந்த பிரபலமும் உண்மையை ஒப்புக்கொண்டு பேசியது கிடையாது.  நேர்மையாக ஒப்புக் கொண்டு இதைப் பற்றி பேசுவதை விடுங்கள் என்று கொதித்திருக்கிறார் நடிகை திவ்யா என்பது குறிப்பிடத்தக்கது.

தவறுக்கு மன்னிப்புக் கேட்ட நடிகை திவ்யாவின் காணெளி காட்சி! (இணையம் மெதுவாக இருந்தால் விடியோ ப்ளே ஆவதற்கு காத்திருக்கவும்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close