இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு செல்கிறது ‘கோர்ட்’! | Court beats Baahubali, Bajrangi Bhaijaan in the Oscar race

வெளியிடப்பட்ட நேரம்: 19:04 (23/09/2015)

கடைசி தொடர்பு:19:10 (23/09/2015)

இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு செல்கிறது ‘கோர்ட்’!

சிறந்த பிறமொழிக்கான ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல் பரபரப்பு துவங்கிவிட்டது. இந்த வருடம் மாராத்திய மொழியில் வெளியாகி தேசிய விருது பெற்ற ’கோர்ட்’ படம் தேர்வாகியுள்ளது. இயக்குநர் அமோல் பலேகர் தலைமையில் 16 பேர் கொண்ட தேர்வு கமிட்டி இந்த படத்தைத் தேர்வு செய்துள்ளனர்.

சமுதாய அக்கறை கொண்ட ஒரு மூத்த கவிஞர் அவர் மீது தொடரப்படும் வழக்கு அதை சுற்றிய கதை மேலும் அதை அந்த கவிஞர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கோர்ட் படத்தின் கதை. இப்படம் ஆஸ்கரின் சிறந்த பிறமொழி படங்களுக்காக பரிந்துரைப் பட்டியலில் இந்திய சார்பில் தேர்வாகியுள்ளது.

இந்தப் பட்டியலில் காக்கா முட்டை, குற்றம் கடிதல், பாகுபலி, ஹைதர், பிகே, பஜ்ராங்கி பாய்ஜான்,  உள்ளிட்ட படங்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.சைதன்யா தம்ஹனே இயக்கத்தில் வீர சதிதார் நடிப்பில் கடந்த ஜூலை 15 , 2015ல் வெளியான படம் தான் கோர்ட். இந்தப் படம் வெளியாகி இந்தியா முழுவதும் பேசப்பட்டதோடு சிறந்த படத்திற்கான தேசிய விருதும் பெற்றப் படம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close