ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த படம் ஆஸ்கர்விருதுக்குப் பரிந்துரை | a.r.rahman Movie Gets Repercent Oscar!

வெளியிடப்பட்ட நேரம்: 17:39 (29/09/2015)

கடைசி தொடர்பு:17:49 (29/09/2015)

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த படம் ஆஸ்கர்விருதுக்குப் பரிந்துரை

சில்ரன் ஆப் ஹெவன் படத்தை இயக்கி உலகப்புகழ்பெற்ற, மஜித்மஜிதி இயக்கியுள்ள படம், முஹம்மத்: மெஸென்ஜர் ஆஃப் காட்'.  இரானிய மொழிப் படமான இதற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

இந்தப் படம் இரானிய நாட்டின் சார்பாக சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அண்மையில் இந்தப் படத்துக்கு  எதிர்ப்பு கிளம்பியது படத்தில் பணியாற்றிய ஏ.ஆர். ரகுமான், இயக்குநர் மஜித் மஜிதி உள்ளிட்டோருக்கு இஸ்லாமிய அமைப்பு ஒன்று ஃபத்வா (மார்க்கத்தீர்ப்பு) விதித்தது.

இதற்குப் பதிலளித்த ரகுமான் ‘அல்லாவை சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தால், மனித இனத்துக்குச் சேவை செய்வது குறித்த கொள்கையை விளக்கும் முகம்மதின் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என்று கேட்டால் நான் என்ன செய்வேன்? நல்லெண்ணத்தில் தான் இரானியப் படத்துக்கு இசையமைத்துள்ளேன். இந்தப் படம் மனித நேயத்தை வலியுறுத்துகிறது’ என்றார்.

இப்போது அந்தப்படம் ஆஸ்கர்விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்