கொரியா திரைப்படவிழாவில் மரியாதை பெற்ற சத்யஜித்ரேவின் படம்!

கொரியாவில் நடைபெறவுள்ள 20 வது புசான் சர்வதேச திரைப்பட விழாவில்(BIFF) சத்யஜித் ரே வின் ' தி அப்பு ட்ரையாலஜி' என்ற பெங்காலிப் படம் டாப் 10 வரிசையில் 4வது இடத்தை பிடித்துள்ளது.

ஆசிய திரைப்படங்களின் தரத்தினை உலகறியச் செய்யும் நோக்கில் 1996 முதல் இன்று வரை கொரியாவில் நடத்தப்பட்டு வரும் புசான் சர்வதேச திரைப்பட விழா, இந்த வருடமும் துவங்கி நடந்து வருகிறது. இவ்விழாவில், சிறந்த 100 ஆசியத் திரைப்படங்களைத் திரையிட உள்ளனர்.

இதில் டாப் 10 லிஸ்டில் சத்யஜித் ரே இயக்கிய தி அப்பு ட்ரையாலஜி படம் இடம் பெற்றுள்ளது. 'டோக்யோ ஸ்டோரி முதல் இடத்தையும், ரஷோமோன், மூட் பார் லவ் போன்ற படங்கள் இரண்டாம், மூன்றாம் இடத்தையும், சத்யஜித் ரே வின் ' தி அப்பு ட்ரையாலஜி நான்காம் இடத்தையும், எ சிட்டி ஆப் ஸேட்னெஸ் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

அக்டோபர் 1ம் தேதி துவங்கிய இவ்விழா அக்டோபர் 10 வரை  நடைபெறவிருக்கிறது.

 

-பிரியாவாசு - 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!