மழையால் அவதிப்படுவோருக்கு ஆறுதல் தரும் குறும்படம்

மழை எப்போது பெய்யும் என்று காத்திருந்த நாம் இன்றைக்கு மழை எப்போது நிற்கும் என்று வேண்டுகிற நிலைக்கு வந்துவிட்டோம். சில நாட்களாக பெய்த கடும் மழையால் சென்னையின் முக்கிய இடங்களில் இருக்கும் பல வீடுகள் கடலின் நடுவில் மாட்டிக்கொண்ட சிறு சிறு  தீவுகளைப் போல காட்சி அளிக்கிறது.

எங்கு பார்த்தாலும் தண்ணீரில்  மாட்டிக் கொண்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.  மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்ட இன்றைய நாளில் thi song cu chay (Down the stream ) என்ற  இந்தக் குறும்படத்தைப் பார்ப்போம் . 

வியட்நாமின் தென்மேற்குப் பகுதியிலுள்ள ஒரு டெல்டாவில் ஆற்றில் மிதந்து கொண்டிருக்கும்  படகு இல்லத்தில் வாழ்கின்ற  சிறு குழந்தைகளின்  துயரம் மிகுந்த  அன்றாட வாழ்க்கையை, அவர்களின் கனவை, ஆசைகளைச் சித்தரிக்கிறது இந்தக் குறும்படம். 

நம்மால் ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ கூட நீருக்கு நடுவில், நீரில்  வாழ முடிவதில்லை. ஆனால் இந்தக் குழந்தைகளின் பெரும்பகுதி வாழ்க்கை நீரிலேயே தான். மீன் பிடிப்பது, லாட்டரி  விற்பது  மூலமாக வருகின்ற வருமானத்தை  வைத்து அவர்களின் வாழ்க்கைப் படகு சென்று கொண்டிருக்கிறது .

உண்மையில் அந்தக் குழந்தைகளுக்கு அங்கு வாழ்வதில் விருப்பமே இல்லை. அவர்களின் பெரிய கனவே கொஞ்ச நாளாவது நிலப் பகுதியில் போய் வாழவேண்டும், பள்ளிக்குப் போக வேண்டும், அங்கே கிடைக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும்  என்பது மட்டுமே.

நம்மைவிட அதிக கஷ்டங்களில் வாழ்கின்ற மனிதர்களைப் பார்க்கும் போது நம் கஷ்டங்களை மறப்பதைப் போல வியட்நாமின் இந்தக் குழந்தைகளின் வாழ்க்கை நிச்சயம் சென்னையின் இன்றைய வாழ்க்கைச் சூழலுக்கு ஆறுதலாக இருக்கும். அதே நேரத்தில் அந்தக் குழந்தைகளின் ஆசைகளும் கனவுகளும் நிறைவேற பிரார்த்தனையும் செய்வோம்.

மழைக்காக, மழையில் அவதிபடும் மக்களின் ஆறுதலுக்காக ஒரு குறும்பட பதிவு வீடியோவிற்கு:

-சக்திவேல்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!