Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காதலும் காலரா நோயும் ஒன்றுதான் - லவ் இன் த டைம் ஆப் காலரா திரைஅலசல்

நீங்கள் காதலிக்கும் பெண் உங்களின் காதலைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்வதற்காக எத்தனை ஆண்டுகள் காத்திருப்பீர்கள்? .தான் காதலித்த பெண் தன்னைவிட்டுப் பிரிந்துசென்று வேறு ஒருவனை திருமணம் செய்துகொண்ட பிறகும் கூட அந்தப் பெண்ணின் வருகைக்காக ஐம்பது வருடங்களுக்கு மேல் காத்திருந்தவனின் கதை தான் லவ் இன் த டைம் ஆப் காலரா.

இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் மார்குவசின் நாவலைத் தழுவி மைக் நியூவலால் இயக்கப்பட்டது இத்திரைப்படம். படத்தின் கதையைப் பார்ப்போம்.

ஒரு மத்தியானபொழுதில் மழை பெய்து கொண்டிருந்த வேளையில் பிளாரின்டினோ அரிசா என்ற இளைஞன் பெர்மினா என்ற பெண்ணை முதல் முறையாகச் சந்திக்கிறான்.அந்த முதல் பார்வையிலேயே அவள் மீது காதல் கொண்டு விடுகிறான் . பெர்மினாவை காதலிப்பது மட்டுமே தன் விதி என நினைக்கிறான்.
அரிசாவின் மனமோ காதலை வெளிப்படுத்தத் துடிக்கிறது ,பெர்மினாவோ அரிசாவை விட வசதியானவள் .அவளின் தந்தையோ தன் மகளின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய கனவுகளில் சஞ்சரித்துக் கொண்டிருப்பவர் .

அரிசா தனக்குள்ளே பேசிக்கொள்ளும் நிலைக்கு ஆளாகிறான். அவன் நிலையைப் புரிந்துகொண்ட அம்மாவின் ஆதரவோடு தன் காதலை கவிதைகளாக்கி பெர்மினாவிற்கு அனுப்புகிறான் .பெரிமினாவும் சம்மதம் தருகிறாள்.

அரிசாவின் ஏழ்மை காதலுக்கு முட்டுக்கட்டையாகிறது . காதல் விவகாரம் பெர்மினாவின் தந்தைக்கு தெரியவர அவளின் மனதை மாற்றி வேறு ஒரு ஊருக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார் .

காலரா பரவிக்கொண்டிருக்கும் காலம். அரிசா காதல் நோயினால் பீடிக்கப்படுகிறான் .பெர்மினாவின் நினைவுகள் அரிசாவை அலைக்கழிக்கிறது ,எதிர்பாராமல் விபத்து மாதிரி அரிசா விதவைப் பெண்ணுடன் உடலுறவு கொள்கிறான். காமம் அவனுக்குக் காதல் நோயிலிருந்து சில மணி நேரங்களாவது விடுதலை அளிக்கிறது .
தந்தையின் அறிவுரை பெர்மினாவின் மனதிற்குள் அரிசாவின் மீது கொண்டிருந்த காதல் வெறும் மாயை என்று உணர்த்துகிறது. பெர்மினாவும் அரிசாவை மறந்து தந்தையின் வேண்டுகோளின் படி காலாரவை குணப்படுத்த வந்த ஒரு மருத்துவரை திருமணம் செய்துகொள்கிறாள்.காலம் உருண்டோடுகிறது.
அரிசா 600 க்கும் மேலான பெண்களுடன் காமத்தைப் பகிர்ந்து கொண்டாலும் அவனால் பெர்மினாவை மறக்க முடிவதில்லை. காலராவைப் போல காதலும் அரிசாவை வாட்டுகிறது அரிசா எதற்காகக் காத்திருந்தானோ அது நிறைவேறுகிறது .

பெர்மினாவின் கணவன் இறந்துவிடுகிறான். இதை அறிந்த அரிசா பெர்மினாவை தேடிப்போகிறான். பெரிமினாவும் அரிசாவும் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் இணைந்து புதிய வாழ்க்கையை தொடங்குவதோடு படம் நிறைவடைகிறது.

பெர்மினாவின் தந்தை ஏழையான அரிசாவை திருமணம் செய்தால் தன் மகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது என்று எண்ணி வசதியான மருத்துவருக்கு தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கிறார். பெர்மினாவும் அப்பாவின் விருப்பப்படியே திருமணம் செய்து கொண்டு ஐம்பது ஆண்டுகள் கணவனைப் பிரியாமல் வாழ்ந்தாலும் அவளின் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் சுவடுகளைக் காண இயலவில்லை .இன்னொன்று அவளின் கணவனும் அன்பாகத் தான் இருக்கிறான்.ஆனால் அரிசாவின் காதலுக்கு இணையாக அதைச் சொல்ல முடியாது .

ஒரு பெண்ணின் மீதான உணர்வுப்பூர்வமான காதலை, பிரிவை அதன் வலியைச் சொல்கின்ற இந்தப் படம் காலரா உடலைத் தாக்கி மனதைச் சோர்வடைய வைப்பதைப் போல காதலும் மனதைத் தாக்கி உடலைச் சோர்வடைய வைக்கின்ற ஒருவிதமான நோய் என்பதையும் இப்படம் நமக்கு உணர்த்துகிறது.

சக்திவேல்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்