சினிமா
தொடர்கள்
Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்

காலேஜ் படிக்கும் டீனேஜ் இளைஞர்கள் என்கிற கதைக்களத்தை வைத்து ஜாலியாய் ஒரு படம் செய்வது ஹாலிவுட்டின் மினிமம் கியாரன்டி டெக்னிக்

OTT கார்னர்
OTT கார்னர்

Stranger Things - Season 4 Volume 1 - SERIES

நெட்ப்ளிக்ஸின் புகழ்வாய்ந்த தயாரிப்புகளில் ஒன்றான ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ தொடரின் 4வது சீசன் வெளியாகியுள்ளது. 3வது சீசன் முடிவில் நண்பர்கள் குழு இரண்டாகப் பிரிந்து தங்களின் குடும்பங்களுடன் இருவேறு நகரங்களில் வாழச் சென்றுவிடுகின்றனர். இறந்துவிட்டதாக நினைக்கப்பட்ட ஜிம் ஹாப்பர் ரஷ்யாவில் கைதியாக அடைக்கப்பட்டிருக்கிறார். இப்படியான சூழ்நிலையில் ஹாக்கின்ஸ் நகரத்தில் தொடர் கொலைகள் நிகழ்கின்றன. வழக்கம்போல துப்புத்துலக்குகிறது டஸ்டின், ஸ்டீவ், மேக்ஸ், நான்ஸி உள்ளிட்ட சிறுவர்கள் படை. கொலைகளைச் செய்வது யார், தன் சக்திகளை முழுவதுமாக இழந்துவிட்ட எல் என்னும் லெவன் அதை மீட்டெடுக்க என்னவெல்லாம் செய்கிறாள், ஹாப்பர் தப்பித்தாரா என்பதுதான் இந்த முதல் வால்யூமின் கதை. வழக்கத்துக்கு மாறாக அதீத நீளம் கொண்ட சீசன் என்பதால் முதல் இரண்டு எபிசோடுகளில் கதை சற்று பொறுமையாகவே நகர்கிறது. யார் கொலையாளி என்ற அந்த ட்விஸ்ட், யாரும் எதிர்பார்க்காத ஒன்று. புதிதாக இணைக்கப்பட்ட கதாபாத்திரங்களும், அவர்களின் பின்னணிகளும் சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கின்றன. மீண்டும் வெற்றி முத்திரையைப் பதிக்கிறார்கள் சீரிஸின் கிரியேட்டர்களான தி டஃபர் பிரதர்ஸ்.

OTT கார்னர்
OTT கார்னர்

Pre-Historic Planet - MOVIE

இன்றைய உலகில் டைனோசர்கள் இருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே ‘ஜுராசிக் பார்க்’ மற்றும் அது தொடர்பான படங்கள். இப்படியில்லாமல் நம்மை டைனோசர்கள் வாழ்ந்த உலகத்துக்கே கூட்டிச்செல்கிறது ஆப்பிள் டி.வி-யில் வெளிவந்திருக்கும் ‘ப்ரீ-ஹிஸ்டாரிக் பிளானட்’ டாக்குமென்டரி தொடர். வெள்ளித்திரையில் நம்மை மிரளவைத்த டீ-ரெக்ஸ் போன்ற டைனோசர்களின் வாழ்வு எப்படியிருந்தது என்பதை ஐந்து எபிசோடுகளில் சொல்கிறது இந்தத் தொடர். வைல்டு லைஃப் டாக்குமென்டரிதான், ஆனால் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பான உலகத்தில் எடுக்கப்பட்டதுபோல தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கி அந்த பூமியைக் கண்முன் நிறுத்தியிருக்கிறது பி.பி.சி குழு. டைனோசர் ரசிகர்கள் மிஸ் பண்ணக்கூடாத தொடர் இது.

OTT கார்னர்
OTT கார்னர்

Emergency - MOVIE

காலேஜ் படிக்கும் டீனேஜ் இளைஞர்கள் என்கிற கதைக்களத்தை வைத்து ஜாலியாய் ஒரு படம் செய்வது ஹாலிவுட்டின் மினிமம் கியாரன்டி டெக்னிக். இந்தமுறை காமெடியோடு கொஞ்சம் அரசியலும் பேசியிருக்கிறார்கள் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் இந்த ‘எமர்ஜென்ஸி’ படம் வழியே. குன்லே, ஷான் ஆகிய இரண்டு ஆப்ரோ அமெரிக்க இளைஞர்கள் தங்கள் கல்லூரியின் கடைசி ஆண்டில் இருக்கிறார்கள். இன்னும் சில நாள்களில் படிப்பு முடிந்துவிடும் என்பதால் பார்ட்டி செய்ய நினைத்து அதற்குத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் திட்டத்தில் அழையா விருந்தாளியாய் ஒருவர் புக, அதன்பின் நடக்கும் களேபரங்கள்தான் கதை. முதல் 60 நிமிடங்கள் கலகலப்பாய்ச் சென்றாலும் கடைசி 30 நிமிடங்கள் அழுத்தமான, காலத்திற்கேற்ற அரசியல் பேசியிருக்கிறார்கள். நிறவெறி காரணமாய் பலியான ஜார்ஜ் ப்ளாயிட் தொடங்கி ஏகப்பட்ட முகங்கள் படம் பார்க்கும்போது நம் நினைவிற்கு வந்து மனதைக் கனமாக்குவதே இந்தப் படத்தின் வெற்றி. படம் வயது வந்தவர்களுக்கு மட்டும்!

OTT கார்னர்
OTT கார்னர்

ரமணி வெர்சஸ் ரமணி 3.0 - SERIES

ரமணி & ரமணி வீட்டில் நடக்கும் காமெடி சம்பவங்களே இந்த மூன்றாவது சீசனின் ஒன்லைனும். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த மூன்றாவது சீசன் ஆஹா ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது. முதல் சீசனிலிருந்து வாசுகியையும், இரண்டாவது சீசனிலிருந்து ராம்ஜியையும் இதில் ஜோடியாக்கியிருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளுடன் தங்கள் புதிய வீட்டில் குடியேறியிருக்கும் ரமணிகளில், ராம்ஜி வெளி வேலைக்கு விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு வீட்டிலேயே இல்லத்தரசராக மாறிவிடுகிறார். வீட்டுக்கு வரும் நபர்கள் செய்யும் அக்கப்போர்களும், குழந்தைகள் செய்யும் லூட்டிகளும் சில இடங்களில் சிரிக்க வைக்கின்றன. இக்கால டீனேஜ் பெண்களைப் பிரதிபலிக்கும் பொன்னி சுரேஷின் கதாபாத்திரம் கவனிக்க வைக்கிறது. முந்தைய பாகங்களில் இருந்த சுவாரஸ்யம் கொஞ்சம் மிஸ்ஸிங் என்றாலும், ஒரு நாஸ்டால்ஜிய அனுபவத்தைத் தருகிறது தொடர்.