Published:Updated:

`சித்ராவுடன் டான்ஸ் ஆட குமரன் சம்மதிக்கவே இல்லை!’- தீராத `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பஞ்சாயத்து

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

சேனல் இப்படியெல்லாம் வற்புறுத்தலாம்னு தெரிஞ்சு வச்சிருந்தாரோ என்னவோ, குமரன் அவரது மனைவி சுஹாசினியையும் ஷூட்டிங் செட்டுக்குக் கூடவே கூட்டி வந்திருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஜோடி முல்லை – கதிர் (சித்ரா – குமரன்) இடையில் பிரச்னை என முன்பு கூறியபோதெல்லாம், `வதந்தி’ சீரியல் விளம்பரத்திற்காகக் கிளப்பி விடுகின்றனர்’ என எதிர்வாதங்கள் கிளம்பின. ஆனால் இன்று (29/12/19) ஒளிபரப்பாக இருக்கும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் கொண்டாட்டம்’ நிகழ்ச்சியில் இந்த மோதலை சீரியல் ரசிகர்கள் கண்கூடாகப் பார்க்கலாம். என்கிறார்கள் விஷயம் தெரிந்த சிலர்.

குமரன்- சித்ரா
குமரன்- சித்ரா

இந்த நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் சில தினங்களுக்கு முன் சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது. அந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்ட சிலரிடம் பேசினோம்.

``ரெண்டு பேருக்குமிடையில் என்னதான் பிரச்னைன்னு ஒருத்தருக்குமே புரியல. சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கின புதுசுல நல்லாத்தான் பேசிட்டிருந்தாங்க. இவங்க கேரக்டர்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. பிறகு `ஜோடி’ ஷோவுல சேர்ந்து ஆடினாங்க. அந்த எபிசோடெல்லாமே செமயா இருந்தது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் இவங்க மத்தியில் இடைவெளி. அது நாளாக நாளாக அதிகரிச்சு, இப்ப ஷூட்டிங் நேரம் போக மத்த டைம்ல ஒருத்தருக்கொருத்தர் ஒரு வார்த்தை கூடப் பேசிக்கிடாத அளவுக்குப் போயிடுச்சு.

`சித்ராவுடன் டான்ஸ் ஆட குமரன் சம்மதிக்கவே இல்லை!’- தீராத `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பஞ்சாயத்து
சித்ரா, சுஜிதா

சேனல் தரப்புல இருந்து சமாதான முயற்சிகளை எடுத்துப் பார்த்தாங்க. எதுவும் ஒர்க் அவுட் ஆகலை. ‘சரி, விசேஷ நாள்கள்ல ஒளிபரப்பாகிற சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக சேர்ந்து ஸ்டேஜ் பெர்ஃபார்மன்ஸ் பண்ணுங்க, அது சீரியலுக்கு, விளம்பரமாகும்’னு கேட்டுப் பார்த்தாங்க. அப்பவும் சித்ரா தயாரா இருக்க, குமரன் சம்மதிக்கவே இல்லை. ஒரு கட்டத்துல சேனல்லயே கடுப்பாகிட்டாங்க. இந்தப் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் கொண்டாட்டம்’ நிகழ்ச்சி கூட அநேகமா இவங்க பஞ்சாயத்தைத் தீர்த்து வைக்க சேனல் எடுத்த கடைசி முயற்சினு கூடச் சொல்லலாம்’’ என்றவர்கள், அன்று நடந்தவற்றை இப்படி விவரித்தார்கள்..

சித்ரா - குமரன் ஜோடிக்கிடையே உரசல்... என்ன நடக்கிறது `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில்?!

``சீரியல்ல இருக்கிற மூணு ஜோடிகளுக்குமே சில டாஸ்க்குகள் வச்சிருந்தாங்க. அதுல ஒண்ணு, மூணு ஹீரோக்களும் தங்களுடைய ஜோடிகளைத் தூக்க, அவங்க, தங்களுக்கு மேலே கட்டித் தொங்க விடப்பட்டிருக்கிற பிரெட்டை வாயால் கடிக்கணும். சீரியல் டைரக்டர் உட்பட எல்லாருமே சீனியர்களான ஸ்டாலின் – சுஜிதா ஜோடிதான் இந்த டாஸ்க்கைச் செய்ய மாட்டாங்கன்னு எதிர்பார்த்தாங்க. ஆனா அவங்க உற்சாகத்துடன் வந்து டாஸ்க்கை முடிச்சாங்க. வெங்கட் – மீனா ஜோடியும் பண்ணினாங்க. ஆனா சித்ரா தயாரா இருக்க, குமரன் இந்த டாஸ்க்கை பண்ண மாட்டேன்னு சொல்லிட்டார். தயாரிப்பாளர், இயக்குநர் தரப்புல இருந்து எவ்வளவோ வற்புறுத்தியும் கடைசி வரை அவர் சம்மதிக்கவே இல்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

அடுத்ததா, ரெண்டு பேரையும் சேர்த்து டான்ஸ் ஆட வைக்கவும் சேனல் திட்டமிட்டிருந்தது. அதுவும் நடக்கலை. ‘சேனல் இப்படியெல்லாம் வற்புறுத்தலாம்னு தெரிஞ்சு வெச்சிருந்தாரோ என்னவோ, குமரன் அவரது மனைவி சுஹாசினியையும் ஷூட்டிங் செட்டுக்குக் கூடவே கூட்டி வந்திருந்தார். ‘வேணும்னா என் மனைவி கூடச் சேர்ந்து டான்ஸ் பண்றேன்’னு அவங்க கூடத்தான் ஆடினார்’!” என்கின்றனர். ’குமரனின் இந்தச் செயல்பாடுகளால் சித்ரா ரொம்பவே அப்செட்டில் இருப்பதாகத் தெரிகிறது. இவர்களின் பஞ்சாயத்து என்றைக்கு முடியுமோ தெரியவில்லை என்கிறார்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் உறவுகள்!

அடுத்த கட்டுரைக்கு