Published:Updated:

``அன்புலாம் ஓகே. ஆனா, கமென்ட்லகூட அப்படியே சொல்றது...ப்ச்!'' - `முல்லை' சித்ரா #2019ViralCelebs

சித்ரா
சித்ரா

`` கமென்ட்ஸ்லகூட `ஐ லவ் யூ அக்கா'னுதான் சொல்றாங்க. `லவ் யூ சித்ரானு சொல்ல மாட்றாங்க.’’

முல்லை மாதிரி ஒரு மருமகள் வரவேண்டுமென்கிற இமேஜை தமிழ்நாட்டு மாமியார்கள் மனதில் விதைத்துவிட்டார், `முல்லை’ சித்ரா. இந்த ஆண்டு சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிக பாசிட்டிவ் கமென்ட்ஸ் பெற்ற சீரியல் நாயகிகளில் இவரும் ஒருவர். அவருடன் சின்ன உரையாடல்.

சித்ரா
சித்ரா

2019-ல் உங்களுக்கு மிகவும் சந்தோஷமளித்த ஒரு விஷயம்?

``எனக்கு ஹிட் கொடுத்த வருஷம் இது. என்னுடைய நான்கு வருட உழைப்புக்கு 2019-ல்தான் சரியான இடம் கிடைச்சிருக்கு. `பாண்டியன் ஸ்டோர்ஸ்', என்னுடைய 7-வது சீரியல். `முல்லை’ கதாபாத்திரம் மூலமா உலக அளவில் ஒரு ரீச் கிடைச்சிருக்கு. ஜப்பான், சீனானு சில நாடுகளுக்கு போகணும்னு கனவு இருந்தது. அதெல்லாம் இந்த வருஷம்தான் நிறைவேறுச்சு. இதுவரைக்கும் கோவை, திருச்சி, ஈரோடுனு உள்ளூர்ல மட்டும்தான் நிகழ்ச்சிகள் பண்ணிட்டிருந்தேன். ஆனா இந்த ஆண்டு, குவைத், மலேசியா, சிங்கப்பூர்னு வெளிநாடுகளுக்கும் பறக்க ஆரம்பிச்சிட்டேன். ரொம்ப சாதாரண குடும்பத்துல பிறந்தவ நான். இப்போ, ரசிகர்கள் எனக்குக் கொடுக்கிற அன்பைப் பார்க்கிறதுக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு. ஸோ, 2019 எனக்கு பெஸ்ட்டா அமைஞ்சிருக்கு."

நெகிழ்ந்த விஷயம்?

சித்ரா
சித்ரா

``பெரும்பாலும் நடிகைனாலே வேறு ஒரு கண்ணோட்டத்துலதான் பார்ப்பாங்க. ஆனா, ரசிகர்கள் என்னை அவங்க வீட்டுப் பொண்ணா பார்க்குறாங்க. நான் இன்ஸ்டாவுல போட்டோ ஷேர் பண்ணா, `இந்த மாதிரி டிரெஸ் பண்றது முல்லைக்கு செட் ஆகலை'னு உரிமையோட சொல்றாங்க. நான், அப்பா, அம்மானு குட்டி உலகத்துல வாழ்ந்திட்டிருந்த எனக்கு, 2019 நிறைய குடும்பங்களைக் கொடுத்திருக்கு. இதைவிட வேற என்ன வேணும்..."

2019-ல் உங்களுக்கு மிகவும் வேதனையளித்த சம்பவம்?

சித்ரா
சித்ரா

``ஒரு சம்பவம்னு குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. நிறைய கஷ்டப்பட்டிருக்கேன். ஒரு பக்கம் என்னுடைய வளர்ச்சி சந்தோஷத்தைக் கொடுத்தாலும், என்னைச் சுற்றி இருக்கிற சிலர் தப்பா பேசுறாங்க. `நீயெல்லாம் ஒரு ஆளா'னு என்னை அசிங்கப்படுத்தியிருக்காங்க. `உன் இன்ஸ்டா ரசிகர்களுக்கு நீயே காசு கொடுத்து கமென்ட் போடச் சொல்வியா'னுலாம் கேட்பாங்க. இதெல்லாம் பார்க்குறப்போ கஷ்டமாதான் இருந்தது. ஆனா, இப்போ பழகிடுச்சு."

சித்ரா
சித்ரா

``அடி வாங்கிய லெஜென்ட்ஸ் சில பேர் எனக்கு அட்வைஸ் பண்ணாங்க. குறிப்பா, `இதையெல்லாம் கண்டுக்கக்கூடாது'னு கவின் சொன்ன அட்வைஸ் பிடிச்சிருந்தது. `நான் லைஃப்ல ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கேன். நிறைய தோல்விகளை சந்திச்சிருக்கேன், அவமானப்பட்டிருக்கேன். இப்படியெல்லாம் அசிங்கப்பட்டாதான் மனதளவுள ஸ்ட்ராங்கா இருக்க முடியும்'னு சொன்னார். இது எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணுச்சு."

லவ் புரப்போசல்ஸ்?

சித்ரா
சித்ரா

``நீங்க வேற... எனக்கு புரப்போசல்ஸ் வரவே மாடேங்குதேன்னு வருத்தமா இருக்கு. நான் கண்டிப்பா காதல் திருமணம்தான் பண்ணுவேன். என்னை எல்லோரும் அவங்க வீட்டுப் பொண்ணா பார்க்குறாங்க. கமென்ட்ஸ்லகூட `ஐ லவ் யூ அக்கா'னுதான் சொல்றாங்க. `லவ் யூ சித்ரானு சொல்ல மாட்றாங்க. இப்படி புரப்போசல்ஸ் வந்தா நான் எப்போ லவ் பண்ணி... எப்போ கல்யாணம் பண்றது. ப்ச்‘’

பல்ப் மொமன்ட்?

``தினமும் என் அம்மாகிட்ட பல்ப் வாங்கிட்டுதான் இருக்கேன். மற்றபடி நான்தான் மத்தவங்களுக்கு பல்ப் கொடுப்பேன். எனக்கு யாரும் கொடுத்தது கிடையாது''

2020ல் உங்களுக்கு நீங்களே போட்டுக்கொண்ட தீர்மானம்?

சித்ரா
சித்ரா

``உறவினர்கள், நண்பர்கள், வேலைபார்க்கிறவங்கன்னு எல்லார்கிட்டயும் ரொம்ப அனுசரிச்சு நடந்துப்பேன். அவங்க பண்றது பிடிக்கலைன்னாகூட,  அதை முகத்துல காட்டிக்க மாட்டேன். கஷ்டப்படுத்தினாகூட லேசான சிரிப்போட கடந்துட்டு, பாத்ரூம்ல உட்கார்ந்து அழுவேன். இனி அப்படி இருக்கக் கூடாதுனு தீர்மானம் எடுத்திருக்கேன். எதுவா இருந்தாலும் நேருக்கு நேர் சொல்லிடப்போறேன். அதனால அந்த உறவு பாதிச்சாக்கூட பரவாயில்ல. இதுதான் என்னுடைய `New Year Resolution'. 2020ல் இன்னும் நிறைய சாதிக்கணும்’’ என்றார் க்யூட் புன்னகையுடன்.

`நேசமணி', `அதிசயம் அற்புதம்', `அதுதான் நெசம்' - 2019-ன் டாப் டிரெண்டிங் வார்த்தைகள் #2019Rewind
அடுத்த கட்டுரைக்கு