தமிழகத்துக்கு வாராது வந்த மாமணி அமித் ஷாவை மற்றவர்கள் வைத்துச் செய்ததைவிட சிறப்பாகச் செய்திருக்கிறார் ஹெச்.ராஜா! சும்மாவே பாலிவுட் வில்லனையும் கேரளத்து ஹீரோயினையும் மிக்ஸ் பண்ணிய ஸ்லாங்கில்தான் தலைவருக்குத் தமிழே வரும். இதில் மொழிபெயர்ப்பு பொறுப்பு வேறு! அவரின் இந்த அசாத்தியத் திறமை மேலும் சில பொறுப்புகளை அவருக்குக் கொண்டுவரும் என்பதில் சந்தேகமே இல்லை.

* முன்னொரு காலத்தில் அருமையான டப்பிங் படங்கள் வந்துகொண்டிருந்தன. ஜாக்கிசான் கூட ‘ஏய் தாய்க்கெழவி’ என பொன்னம்பலம் வாய்ஸில் பேசுவார். ஆனால், இப்போது அப்படியான படங்கள் மிஸ்ஸிங். இந்தக் குறையைப் போக்க ‘ஜுராஸிக் வேர்ல்டு’ முதல் டி.ராஜேந்தரின் இசைக் குறிப்புகள் வரை எல்லாவற்றுக்கும் ராஜா டப்பிங் செய்தால் சிறப்பாக இருக்கும்.

* பிளாக் ஹோலைப் புரிந்துகொண்ட ஸ்டீபன் ஹாக்கிங்காலேயே புரிந்துகொள்ளமுடியாதது, பி.ஜே.பி தலைவர்கள் மேடையில் பேசும் சில அறிவியல் உண்மைகள்தான். கூச்சமே இல்லாமல் அவர்கள் பேசுவதை சில பல குறிப்புகளோடு ராஜா விளக்கினால் போதும்... தாமரை மலரும்!

* ஃபாஸ்ட் ரேடியோ பெர்ஸ்ட்ஸ் - உலகப்புகழ் விஞ்ஞானிகளாலேயே புரிந்துகொள்ளமுடியாத வான்வெளி ரேடியோ சிக்னல்கள் இவை. ஆனால், அண்ணனுக்கு இவையெல்லாம் நீர்ப் பாசனத்திற்கு நிதி ஒதுக்குவது போன்ற சப்பையான வேலை. எனவே சட்டென அந்த சிக்னல்களை டீகோட் செய்து ஏலியன்களை இன்வைட் பண்ணுமாறு அண்ணனிடம் கேட்டுக்கொள்கிறோம்.

* இல்லவே இல்லாத ஜியோ இன்ஸ்டிட்யூட்டுக்கு சிறப்பு அந்துஸ்துகள் எல்லாம் வழங்கப்பட்டிருக்கின்றன. அதில் இல்லவே இல்லாத மொழிபெயர்ப்புத் துறையின் தலைவராக ராஜா நியமிக்கப்பட்டால், எதிர்காலச் சந்ததியினர் அந்தப்பக்கமே போகாமலிருக்க உதவியாக இருக்கும்.

* தமிழர்கள் இன்னும் சம்ஸ்கிருதத்தோடு ஒட்டமுடியாததற்குக் காரணம், அது புரியாமலிருப்பதே. எனவே சம்ஸ்கிருத இலக்கியங்களைத் தமிழ் மொழியில் ஹெச்.ராஜா சிறப்பாக மொழிபெயர்த்து வெளியிட்டால் அதன்மூலம் சம்ஸ்கிருதம் தமிழ்மக்கள் நாக்கில் தாண்டவமாடும்.

ஓவியம்: பிரேம் டாவின்ஸி