Published:Updated:

ஹி ஹி சேலஞ்ச்!

ஹி ஹி சேலஞ்ச்!
பிரீமியம் ஸ்டோரி
ஹி ஹி சேலஞ்ச்!

ஆர்.சரண் - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

ஹி ஹி சேலஞ்ச்!

ஆர்.சரண் - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
ஹி ஹி சேலஞ்ச்!
பிரீமியம் ஸ்டோரி
ஹி ஹி சேலஞ்ச்!

லகமே சேலஞ்ச் ஃபீவர் பிடித்து அலைகிறது. ஐஸ் பக்கெட் சேலஞ்சில் ஆரம்பித்து, உலகம் சுற்றும் பிரதமர் மோடியையே பாதித்த `ஃபிட்னெஸ் சேலஞ்ச்’ வரை ரகம் ரகமான சேலஞ்சுகளை யாரோ கிளப்பிவிட செயின் ரியாக்‌ஷனாய் சுற்றி வருகிறது. லேட்டஸ்ட் புது வரவு... கிகி சேலஞ்ச்.  கனடாவைச் சேர்ந்த உலகின் நம்பர்1 பாடகர் டிரேக்கின் ‘கிகி டூ யூ லவ் மீ?’ என்ற பாடல் மியூஸிக்கல் சேனல்களின் சார்ட் பீட்டில் தெறி ஹிட்டானது கடந்தவாரம். இந்தவாரம் அந்தப் பாடலை மையமாக வைத்தே ‘கிகி சேலஞ்ச்’!  அதென்ன கிகி சேலஞ்ச்?  ஓடும் காரைவிட்டு ரன்னிங்கில் இறங்கி அந்தப் பாடலுக்கு ஆடிவிட்டு மீண்டும் ரன்னிங்கில் ஏறி சவாலை நிறைவேற்ற வேண்டும். இப்படி செத்துச் செத்து விளையாடும் சேலஞ்சுகளைப் போல நம் பிரபலங்களுக்கு என்னமாதிரியான சேலஞ்சுகளைக் கொடுக்கலாம் என அலாரம் வைத்து எழுந்து ஃப்ரெஷ்ஷாக யோசித்த போது தோன்றியவை இவை...

ஹி ஹி சேலஞ்ச்!

மோடி: நோ ஃபாரின் சேலஞ்ச்

ஒரு வருடம் எந்த வெளிநாட்டுக்கும் போகாமல் உள்நாட்டிலேயே இருக்க வேண்டும். அப்படியே ஆத்திர அவசரத்துக்கு ஃபாரின் போவதாக இருந்தால்கூட, சேலஞ்ச் ஆரம்பித்து 366-வது நாளில்தான் செல்ல வேண்டும். அப்போதும்கூட குடுகுடுவென ஏரோபிளேனில் ஓடிப்போய் ஏறி, திரும்பிப் பார்த்து டாட்டா காட்டாமல் போகவேண்டும் என்பது கட்டாயம்!

ரஜினி: கட்சி ஆரம்பிக்கிற சேலஞ்ச்

பின்ன என்னங்க.  `எப்ப வருவாரு. எப்படி வருவாரு?’னே தெரியாம முழி பிதுங்கி நிக்கிற தமிழகத்தின் வயதான ரசிகர்கூட்டம் பாவமில்லையா? அதுக்காகத்தான் இந்த சேலஞ்ச். சேலஞ்ச் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளில் அவர் கார்த்திக் சுப்புராஜுக்கு ‘வெவ்வெவ்வே’ காட்டிவிட்டு  கட்சிப்பெயரை அறிவித்து முழுநேர அரசியல்வாதியாக வேண்டும். அப்படிச் செய்தால் போயஸ் கார்டனுக்கு ஒரு லட்சம் பொக்கே அனுப்பி வைக்கப்படும்.

ஈ.பி.எஸ்: புக் அண்ட் ஆதர் சேலஞ்ச்

தினமும் ஒரு புக் படிக்க வேண்டும். அப்படி அவர் படித்த புத்தகத்தின் பெயரையும் அதன் ஆசிரியர் பெயரையும் சரியாகச் சொல்லிவிட்டால் போதும், அடுத்த புக் பரிசாக அனுப்பி வைக்கப்படும். 

ஓ.பி.எஸ்:  நான் ஸ்டாப் மெடிட்டேஷன் சேலஞ்ச்

 பீச்சில் ஷாமியானா பந்தல் போட்டு  ஒருநாள் முழுக்கக் கண்களை மூடி மெடிட்டேஷன் செய்ய வேண்டும். உடல்நலத்துக்குத் தியானம் நல்லது என்பதை வலியுறுத்தத்தான் இந்த ஏற்பாடு. இப்படிச் செய்தால் பன்னீருக்கு பாபா ராம் தேவின் யோகா சிடிக்கள் அனுப்பி வைக்கப்படும்.

டிடிவி: மூஞ்சிய சிரிச்சா மாதிரி வைக்காதீங்க சேலஞ்ச்

எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் மனிதராய் சிரித்தபடி பேட்டி கொடுக்கும் டிடிவி தினகரன் ஒருமுறையாவது முகத்தை இறுக்கமாக்கி சிரிக்காமல் பேட்டி கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் பிரஸ்டீஜ் குக்கர் ஐ.எஸ்.ஐ முத்திரையோடு அரை லோடு ஆர்.கே நகரில் இறக்கி வைக்கப்படும்!

ஹெச்.ராஜா: செல்ஃபி வித் அட்மின் சேலஞ்ச்

ரொம்ப சிம்பிள் சேலஞ்ச் இது. அவர் ட்விட்டர் பேஜின் அட்மினோடு செல்ஃபி பிடித்துப் போட்டால் போதும். தமிழ்நாட்டு மக்களின் சார்பாக அவருக்கு ‘நம்பிக்கை நாயகன்’ விருது வழங்கப்படும்!

எஸ்.வி.சேகர்: ஐஸ் பாய் முடிஞ்சிடுச்சி வெளியே வாங்க சேலஞ்ச்

வான்டடாக போலீஸ் ஜீப்பில் ஏறி கையைக் காட்டிச் செல்ல வேண்டும். அப்படிச் செய்தால் `இளைய சேகர்’ அஸ்வினின் அடுத்த படம்  திரையரங்குகளில் நூறுநாள் ஓட்டப்படும்.