பிரீமியம் ஸ்டோரி

ரசு அலுவலகங்களில் இப்போதைக்கு அதிகம் பிஸியாக இருப்பது வருமானவரித் துறை அலுவலகங்கள்தான். அதிலும், போரடித்தால் போர்டு கேம் விளையாடுவது போல, நான்கு நான்கு பேராகக் கிளம்பி ஏதாவது முக்கிய பிரமுகர் வீட்டுக்குச் சென்றுவிடுகிறார்கள். சரி, இத்தனை ரெய்டுகளில் சிக்கியவை என்னென்ன என்பதை அவர்கள் வெளிப்படையாகச் சொல்வதில்லை; சொல்ல முடிவதும் இல்லை. சில வீடுகளுக்கு ரெய்டு போனால், என்னென்ன சிக்கியதாகச் சொல்லலாம் என நாம் கொடுக்கும் ஐடியாக்கள் இவை:

ஐடியா அய்யனாரு!

அமைச்சர் விஜயபாஸ்கர்

சிக்கிய முக்கிய ஆவணங்கள்:
மூன்று பெரிய பெரிய டைரிகள், எடப்பாடி பழனிசாமியின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள்.

விவரம்: அந்த மூன்று டைரிகளிலும் பல முக்கியத் தகவல்கள் இருந்துள்ளன. அதாவது, எந்தெந்தத் தேதிகளில் எல்லாம் அவர் வீட்டில் ஐ.டி ரெய்டு நடந்தது, எவ்வளவு நேரம் நடந்தது, வந்தவர்கள் சாப்பிட்ட மெனு முதலான முக்கிய விவரங்கள் உள்ளன. தீபாவளிக்கு வரும் விருந்தினர் போலத் திரும்பத் திரும்ப ரெய்டு வருவதால் இந்த ஏற்பாடு. ஐ.டி ரெய்டு பற்றியே டைரி போட்ட முதல் ஆள் விஜயபாஸ்கர்தான் என அவர் வட்டாரம் பேசிக்கொள்கிறது.

சீமான்

சிக்கிய முக்கிய ஆவணங்கள்:
சங்க கால உண்மைப் போர்க்குறிப்புகள்: ஒரு புனைவு, வளர்ப்பு ஆமைகள்!

விவரம்: அடுத்தடுத்த மீட்டிங்குகளில் பேச பண்டைக்காலப் போர் முறைகள் பற்றிய குறிப்புகளை பக்கம்பக்கமாக எடுத்து வைத்திருக்கிறார் அவர். குஜிலிகும்பான் என்ற வரலாற்று ஆசிரியர் தொகுத்திருக்கும் அத்தகவல்கள், உலக சரித்திரத்தையே திருப்பிப்போடும் வல்லமை வாய்ந்தவை என்பதால், அடுத்ததாக தமிழ் வளர்ச்சித்துறை அங்கே ரெய்டு சென்றுள்ளது.

நடிகர் விசு

சிக்கிய முக்கிய ஆவணங்கள்:
ஒரு வீடியோ கேமரா, ஹெச்.ராஜா போட்டோக்கள்.

விவரம்: சிக்கிய வீடியோ கேமராவில், பி.ஜே.பி அரசு 2130-ம் ஆண்டில் செயல்படுத்தவுள்ள அரசுத் திட்டங்களின் பலன்களை விளக்கும் வீடியோக்கள் எக்கச்சக்கம் உள்ளன. மேலும், கல்லைத் தூக்கியபடி நிற்கும் ஹெர்குலிஸ் போல, இந்து மதத்தைத் தாங்கி நிற்கும் ஹெச்.ராஜா படங்களும் சுமாரான போட்டோஷாப்பில் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்


சிக்கிய முக்கிய ஆவணங்கள்: ஆன்மிக வழியில் அணைகளைப் பாதுகாப்பது எப்படி என்பது பற்றிய புத்தகங்கள், மந்திரித்த எலுமிச்சைகள், கயிறுகள்.

விவரம்:
அணைகள்மீது திருஷ்டி படாமல் காக்க பெரிய பெட்ஷீட் கொண்டு போர்த்திவிடுவது, வருபவர்கள் கண்ணைக் கட்டிவிடுவது போன்ற அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதற்கு, கெளரவ ஆலோசகராக செல்லூர் ராஜு இருக்கிறார். மேலும், பல கி.மீட்டர்கள் நீளமுள்ள அரைநாண் கயிறும் அணைகளின் இடுப்பில் கட்டுவதற்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு