Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

Published:Updated:
ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

பதமும் `சகலகலா வல்லவன்’ பாட்டும் இல்லாத புத்தாண்டு புத்தாண்டே கிடையாது. இனியாவது டைரி எழுதுவோம், ஜிம்முக்கு போவோம், பல் விளக்குவோம், பணியாரம் சுடுவோம்னு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு புத்தாண்டு சபதம் மனசுல இருக்கும். அப்படி, நம் அரசியல்வாதிகளின் மனசுக்குள்ளே என்ன சபதங்கள் இருக்கும்னு சத்தமில்லாம எட்டிப்பார்ப்போம், கமான் கய்ஸ்!

ஐடியா அய்யனாரு!

புத்தாண்டில் இருந்தாவது துண்டுச்சீட்டு இல்லாமல் உரையாற்றிட வேண்டும் என்பதுதான் ஸ்டாலினின் சபதம். ஆனால், இந்தமுறை துண்டுச்சீட்டைப் பார்த்துப் படித்தாலும், தப்புத்தப்பாகப் படிக்கக் கூடாதெனப் புது சபதம் எடுத்திருக்கிறார். கூடவே, கிராம சபைகளைக் கூட்டுவதற்குக் கட்சியினருக்கு உத்தரவிட்டிருப்பதால், இம்முறை அவரை அய்யனாரு அதிகம் கிண்டல் செய்யக்கூடாது என்று வாழ்த்தி வரவேற்கிறான்!

மைக்கறி, ஆஸ்திரேலியக் கப்பல், ஏகே 74 என எண்ணற்ற கதைகளை, கடந்த சில ஆண்டுகளாக அவிழ்த்துக்கொண்டிருக்கிறார் சீமான். அந்தக் கதைகள் எதையும் மறந்துவிடக் கூடாது என்றும் காண்டாமிருகத்தின் கறி, அண்டார்டிகா கப்பல் எனப் புதுக்கதைகளும் உருவாக்கிட வேண்டும் என்று சூடம் அடித்து சபதம் செய்திருக்கிறார்.

“செயற்கை மழையை வரச்செய்து மலரச்செய்வோம்”, “கரிசல் மண்ணை அகற்றி நீர் ஊற்றி மலரச்செய்வோம்”, “செவ்வாய் கிரகத்திலிருந்து நீர் கொண்டுவந்து செந்தாமரை வளர்ப்போம்” என இந்த ஆண்டும்  விதவிதமாக சபதம் எடுத்திருக்கிறார் தமிழிசை. தனது சபதத்தை நிறைவேற்ற புத்தாண்டுவரை காத்திருந்து நேரத்தை விரயமாக்காமல், விரைவாய் செல்லூர் ராஜுவிடம் அறிவியல் ஆலோசனைகள் கேட்பது சிறப்பு.

 “புத்தாண்டு சபதம் எடுக்கிறேன்” என மீண்டும் சமாதி முன் ஓ.பி.எஸ் தியானத்தில் அமராமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் ஈ.பி.எஸ்-ஸின் இந்தாண்டு புத்தாண்டு சபதம். “ஹெலிகாப்டரில் ஜன்னல் சீட்டில் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும், ஹெட்போனில் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் கேட்க வேண்டும். தவிர, ஹெட்போனில் மோடியின் மன் கி பாத் கேட்க வேண்டும் என்று குட்டி சபதம் ஒன்றும் அவர் மனதில் இருப்பதாக உளவுத் துறைத் தகவல்!