Published:Updated:

வேட்பாள பெருமக்களே...

வேட்பாள பெருமக்களே...
பிரீமியம் ஸ்டோரி
வேட்பாள பெருமக்களே...

லிட்டில் ஜான்

வேட்பாள பெருமக்களே...

லிட்டில் ஜான்

Published:Updated:
வேட்பாள பெருமக்களே...
பிரீமியம் ஸ்டோரி
வேட்பாள பெருமக்களே...

து, ‘அடிச்சிவிடு உம்பாட்டுக்கு’ சீஸன் 17. செய்றோமோ இல்லையோ, முடியுமோ முடியாதோ, எப்படியும் எவனும் திரும்பக் கேக்கப்போறதில்லை என்கிற தில்லோடு கெத்தாக, கட்சிகள் தேர்தல் அறிக்கைகளைப் பக்கம் பக்கமாக அச்சடித்து விநியோகிக்கத் தொடங்கியுள்ளன. இந்த அறிக்கைகளில் அதே நதிநீர் இணைப்பு, விவசாயக்கடன் தள்ளுபடி, ஊழல் ஒழிப்பு எனப் பழைய பஜனைகளாக இருக்கின்றன... இணைய காலத்தில் இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் இப்படி வெளியிடலாமே தேர்தல் அறிக்கை!

வேட்பாள பெருமக்களே...

லைக் பச்சாவோ ஷேர் பத்தாவோ
வே
லையில்லாத் திண்டாட்டத்தைவிடப் பெரிய கவலையாக உருவெடுத்திருக்கிற நாடுதழுவிய பிரச்னை லைக் ஷேர் பஞ்சம். இளைஞர்கள் என்னதான் மாங்கு மாங்கு என்று கஷ்டப்பட்டு ஸ்டேட்டஸ் போட்டாலும், வீடியோ வைத்தாலும் வந்து விழுகிற லைக்குகள் என்னவோ அஞ்சு பத்துதான். இதில் ஆண் வாக்காளர்களே இந்தியா முழுக்கப் பேரளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் போடுகிற வாத்துமுகி வாய்கோணி கீர்த்திசுரேஷிச செல்பிகள் சுமாராக இருந்தாலும்கூட ஆயிரம் லைக்குக்குக் குறையாமல் விழ, அதில் பத்து சதவிகிதம்கூட திறமையான பையன்களுக்கு விழுவதில்லை என்று நாசா ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை ஒழிக்கும் நடவடிக்கையாக ஒவ்வொரு இளைஞருக்கும் மாதந்தோறும் இரண்டாயிரம் லைக்குகளும் ஷேர்களும் இலவசமாக வழங்க வலியுறுத்தப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேட்பாள பெருமக்களே...

சிவகுமார் செல்போன் ரக்‌ஷா மிஷன்
ம்பர் லாக், பிங்கர் பிரின்ட் லாக், பேட்டர்ன் லாக் என என்னமாதிரியான புதுவிதமான பூட்டு போட்டுவைத்தாலும் குழந்தைகளிடமிருந்து செல்போன்களைக் காப்பாற்றுவது சாமானியர்களுக்கான பெரிய சவாலாக மாறிவிட்டது. உலக ஹேக்கர்களுக்கெல்லாம் சவால் விட்டு செல்போன்களை ஆட்டையைப் போட்டு கேம் ஆடும் இந்த பட்சிராஜன்களின் அட்டூழியங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படவும், அப்பாவிகளின் செல்போன்கள் காப்பாற்றப்படவும் மத்திய அரசு சிறப்புப்படை அமைத்துக் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தப்படும்.

வேட்பாள பெருமக்களே...

டிக்டாக் புரட்சியாளர்கள் ஒழிப்புத் திட்டம்
டந்த சிலகாலமாக ஆடலும் பாடலுமாக இருந்த டிக்டாக்கில் சில சமூக விரோத சக்திகள் ஊடுருவி டிக்டாக்கை சமுத்திரக்கனி படம்போல மாற்றிவிட்டார்கள். டிக்டாக்கைத் திறந்தாலே இவர்கள் கண்ணீரும் கம்பலை யுமாக கேப்டன் போல நாக்கைச் சுருட்டிக்கொண்டு கொலை பண்ணிடுவேன், தூக்கிப்போட்டு மிதிச்சிருவேன், வேண்டாம் பிலிப்ஸே, ஷால் போடுங்க சகோதரி என்று கதறவைப்பதும் கருத்து சொல்வதும் அதிகரித்து வருகிறது. இது முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும். அதிலும் அழுதபடியே ஆவேசமாக பேட்வேர்ட்ஸ் பேசுகிற பெண்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் போடுகிற வீடியோக்களுக்கு லைக்குகள் ஷேர்கள் கிடைப்பது தடை செய்யப்படும். இனி டிக்டாக்கில் பாட்டு நடனம் மட்டுமே அனு மதிக்கப்படும் என்பதையும் அப்படிப்பட்ட பொறுப்புள்ள இளைஞர்களுக்கு உரிய மானியம் வழங்கி கௌர விக்கப்பட வலியுறுத்தப்படும்.

வேட்பாள பெருமக்களே...

சாய்சாய் அப்டேட் யோஜனா!
ண்டிராய்டு போனில் அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு அப்டேட் வந்துகொண்டிருக்கிற காலத்தில் கூட அஜித் பட அப்டேட் கிடைப்பது அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் இந்த வாரமாவது பர்ஸ்ட் லுக் வராதா, டீசரோ டிரெய்லரோ வராதா என ஏங்கி ஏங்கி ஏராளமான அஜித் ரசிகர்கள் வாடிவதங்கி வங்கொலையாகக் கிடக்கிறார்கள். இப்படி வாடிக்கொண்டிருக்கிற 50 லட்சம் தல ரசிகர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் பிரதி மாதம் வியாழக்கிழமை இரவு 12 மணிக்கு தல பட அப்டேட் ஒன்று இலவசமாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படும்.

வேட்பாள பெருமக்களே...

கேட்ச் மீ இப்யூகேன் விருது
ஹெச்
.ராஜா, எஸ்.வி.சேகர் மாதிரியான உலகின் தலைசிறந்த பேச்சாளர்கள் அவ்வப்போது எதையாவது சொல்லும்போது, அதனால் காண்டாகி அவர்களைப் பிடிக்கப் பிடிவாரண்டு போடுகிறது காவல்துறை. அப்போதும் சிக்காமல் சிட்டாகப் பறக்கும் இவர்களைப் பிடிக்க, தொடர்ந்து தனிப்படைகளும் அமைக்கின்றன. ஆனால் இன்றுவரை அந்தத் தனிப்படைகளுக்கெல்லாம் தண்ணி காட்டி சாதனைகள் செய்துகொண்டிருக்கிற இந்த உயர்ந்த மனிதர்களுக்கு உரிய கௌரவம் வழங்கப்படுவதில்லை. இனி வரும் காலங்களில் இந்தத் தலைமறைவுத் திலகங்களுக்கு வருடந்தோறும் கேட்ச் மீ இப்யூகேன் விருது வழங்கி கௌரவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படும்

வேட்பாள பெருமக்களே...

முரட்டுசிங்கிள்கள் மறுவாழ்வுத் திட்டம்
நா
டுதோறும் அதிகரித்துவரும் முரட்டு சிங்கிள்களின் எண்ணிக்கை கோடிக்கணக்காக உயர்ந்துவருகிறது. அவர்களுடைய வயித்தெரிச்சலால் குளோபல் வார்மிங்கில் இரண்டு டிகிரி கூடியிருப்பதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து வரும் நிலையில், இந்த முரட்டு சிங்கிள்களின் மனம்குளிர அவர்கள் வாழ்விலும் வசந்தம் வர சிறப்பு பப்ஜி குழுக்கள் நலவாரியம் அமைக்கப்படும்.

- ஓவியங்கள்: ரமணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism