Published:Updated:

`கஷ்டப்பட்டு சேர்த்துவச்ச பேருக்கு ஏற்பட்ட களங்கம் இது!’ - நாசர் சகோதரரின் விமர்சனத்துக்கு கமீலா நாசர் பதில்

அலாவுதின் ஹுசைன்
`கஷ்டப்பட்டு சேர்த்துவச்ச பேருக்கு ஏற்பட்ட களங்கம் இது!’ - நாசர் சகோதரரின் விமர்சனத்துக்கு கமீலா நாசர் பதில்
`கஷ்டப்பட்டு சேர்த்துவச்ச பேருக்கு ஏற்பட்ட களங்கம் இது!’ - நாசர் சகோதரரின் விமர்சனத்துக்கு கமீலா நாசர் பதில்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மத்திய சென்னை வேட்பாளராக லோக்சபா தேர்தலில் போட்டியிடுபவர் கமீலா நாசர். தயாரிப்பாளரும், நடிகர் நாசரின் மனைவியுமான இவர் சந்திக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இது. 

மக்கள் நீதி மய்யத்தின் மண்டல பொறுப்பாளராக இருக்கும் இவரை எதிர்த்து நாசரின் தம்பி ஜவஹர், தன் அண்ணன் நாசர் மற்றும் அண்ணி கமீலா நாசர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். செங்கல்பட்டில் தங்களது அம்மா அப்பா, மன வளர்ச்சி குன்றிய தம்பி ஜாஹீர் ஆகியோருடன் வசித்துவரும் ஜவஹர் அண்மையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

நாசருக்கு திருமணம் ஆனதிலிருந்து நாங்கள் அவரைச் சந்திக்கக்கூட அவரின் மனைவி கமீலா அனுமதிப்பதில்லை. கமீலா, எங்கள் குடும்பத்தை நாசமாக்கி விட்டார். சொந்தக் குடும்பத்தையே கவனிக்காத கமீலா எப்படி நாட்டைக் காப்பாற்றப் போகிறார் என விமர்சனத்தையும் எழுப்பி இருந்தார்.

இதுகுறித்து தேர்தல் பிரசாரத்தில் இருந்த கமீலா நாசரை தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர், ``குற்றச்சாட்டு வைக்குற நாசர் தம்பிக்கும், அந்த தெய்வத்துக்கும் நாங்க என்னென்ன பண்ணிருக்கோம்னு தெரியும். நான் தேர்தல், கட்சினு இன்னைக்கு பொதுவெளில வந்துட்டதால எங்களுடைய குடும்ப பிரச்னைகள் பொதுசபைக்கு வந்துடுச்சு. நாசர் கொஞ்ச கொஞ்சமா கஷ்டப்பட்டு ஒவ்வொரு படியா சேர்த்துவச்ச பேருக்கு ஒரு களங்கம் இது.முன்னாடி நடிகர் சங்கம் தேர்தல்ல நாசர் போட்டியிட்டப்போ நாசரைக் குற்றம் சொன்னார். இந்த தேர்தல்ல நான் போட்டியிடுறேனு என்மேல குற்றச்சாட்டு வைக்கிறார். நாங்க என்ன பண்ணியிருக்கோம்னு எங்க மனசாட்சிக்குத் தெரியும்" என்றார்.