Published:Updated:

விளையாட்டு புள்ளிங்கோ!

தி.மு.க டேர்டெவில்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
தி.மு.க டேர்டெவில்ஸ்

ஐ.பி.எல், ஐ.எஸ்.எல், பி.கே.எல் என அட்லீ பட டைட்டில் போல வாரத்திற்கு ஒரு ஸ்போர்ட்ஸ் லீக் தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது.

விளையாட்டு புள்ளிங்கோ!

ஐ.பி.எல், ஐ.எஸ்.எல், பி.கே.எல் என அட்லீ பட டைட்டில் போல வாரத்திற்கு ஒரு ஸ்போர்ட்ஸ் லீக் தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது.

Published:Updated:
தி.மு.க டேர்டெவில்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
தி.மு.க டேர்டெவில்ஸ்

மறுபக்கம் ஐ.டி கம்பெனி ரேஞ்சுக்கு டி.டி.வி கட்சியில் ஆள்குறைப்பு, ஆளுங்கட்சியைப் பதற வைக்கும் இடைத்தேர்தல் அறிவிப்புகள் என அரசியல் ஆட்டமும் எகிடுதகிடாக இருக்கிறது. இரண்டு பக்கமும் இருப்பவர்களை வைத்து லீக் தொடர் நடத்தினால் டி.ஆர் முன்னாலிருக்கும் மைக் நிலைமைதான் டி.ஆர்.பி மீட்டருக்கும். `எப்படியாவது காப்பாத்திக் கூப்ட்டு போயிருங்கய்யா' எனக் கடைசி மூச்சு வரை கருணை மனு போட்டுக்கொண்டிருக்கும். ஒருவேளை அரசியல் கட்சிகள் நிஜமாகவே லீக் ஆடக் களமிறங்கினால்..?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அ.தி.மு.க வாரியர்ஸ்

பொதுவாக ஹாக்கி விளையாட 60லிருந்து 70 டிகிரிகள் உடல் வளைந்தால் போதும். ஆனால் விஞ்ஞானத்தோடே வீம்பாக வீடுகட்டி விளையாடுவது ஆதிகாலத்திலிருந்தே அ.தி.மு.க-வினரின் டி.என்.ஏ-க்களில் இருப்பதால் அவர்களுக்கு 20 டிகிரிக்கு வளைந்து பந்துக்குக் கும்பிடு போடுவதுகூடப் பெரிய கஷ்டமாக இருக்காது. சமயங்களில் ஹாக்கி மட்டையைத் தாண்டி மூக்கை வைத்தே கோல் போடுமளவிற்கு உருண்டு விளையாடுவார்கள்.

ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி
ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி

ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் வழிநடத்த, செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி அண்டு கோ விளையாட என முகாமே களைகட்டும். ஸ்டேடியத்திற்கு வெளியே ஜெயக்குமாரை வைத்துப் பாட்டுக் கச்சேரி நடத்தினால் அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் உயிருக்கு பயந்து கிரவுண்டிற்குள் தஞ்சம் புகுவார்கள். கூட்டமும் சேர்த்துவிடலாம்.

தி.மு.க டேர்டெவில்ஸ்

தி.மு.க தலைவர்கள் நிறைய பேருக்கு கிரிக்கெட்தான் பிடித்தமான விளையாட்டு. போக, கழகத்தின் எதிர்காலம் மூன்றாம் கலைஞர், இரண்டாம் ஸ்டாலின், முதலாம் உதய்ண்ணாவுக்கும் ஐ.பி.எல்-லுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

உதயநிதி, அன்பில் மகேஷ், கெளதம சிகாமணி
உதயநிதி, அன்பில் மகேஷ், கெளதம சிகாமணி

எனவே அந்தக் கட்சி ஐ.பி.எல்-லில் களமிறங்குவதுதான் கரெக்ட்டாக இருக்கும். கேப்டனாக உதயநிதி, வைஸ் கேப்டனாக அன்பில் மகேஷ், ஓபனிங் பேட்ஸ்மேனாக கெளதம சிகாமணி என டீமும் பக்காவாக அமைந்துவிடும். பக்கத்து முகாமிலிருந்து ஒருவர்விடாமல் ஆள் தேற்றி இழுத்துவரும் செந்தில் பாலாஜியை அணியின் பிரதான ஃபீல்டராக செட் செய்துவிட்டால் ஒரு பந்துகூடத் தப்பிப்போகாது. வழக்கம்போல சபரீசன்தான் டீம் கோச்! கழகத்தின் ஆஸ்தான அமுல்பேபி துரைமுருகனை மேனேஜராகப் போட்டுவிட்டால் எதிரணியை (சமயங்களில் சொந்த டீமையும்) கலாய்த்தே காலிசெய்துவிடுவார். விளையாடும் வேலை மிச்சம்!

பி.ஜே.பி-யின் எப்.சி

தமிழக பா.ஜ.க-வுக்கும் கால்பந்து கிளப் டீமிற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். கால்பந்து டீமைப் பொறுத்தவரை 11 பேர் உள்ளேயும் ரசிகர் கூட்டம் ஆயிரக்கணக்கில் வெளியேவும் இருப்பார்கள். தமிழக பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை கூட்டம் எல்லாம் கிடையாது. மொத்தமாகவே கிரவுண்டுக்குள் இருக்கும் 11 பேர்தான். மற்றபடி நிமிடத்திற்கு ஒரு சேம்சைடு கோல் போட ஹெச்.ராஜா இருக்கிறார். `நான்தான் இருக்கேன்ல' எனக் குறுக்கும்மறுக்குமாக ஓட சி.பி.ராதாகிருஷ்ணனும் இல.கணேசனும் இருக்கிறார்கள்.

ஹெச்.ராஜா,  சி. பி. ராதாகிருஷ்ணன், Tamilisai Soundararajan
ஹெச்.ராஜா, சி. பி. ராதாகிருஷ்ணன், Tamilisai Soundararajan

`கால்பந்தைத் தலையை வெச்செல்லாம் முட்டுறாங்க' என டெல்லி கோச்சிடம் போட்டுக்கொடுக்க பொன்னார் இருக்கிறார். ஒரே பிரச்னை, சேம்சைடு கோல்களை எல்லாம் முடிந்தவரை தடுத்துக்கொண்டிருந்த கோல்கீப்பர் பக்கத்து ஸ்டேட்டுக்குப் போய்விட்டதுதான்.

ச.ம.க ஸ்மாஷர்ஸ்

பேட்மின்டன் விளையாட இரண்டே பேர்தான் தேவை. சில ஆண்டுகளுக்கு முன்வரை சுப்ரீம் ஸ்டாரும் எர்ணாவூர் நாராயணனும் மட்டுமே ஆடிக்கொண்டிருந்தார்கள். இப்போது அந்த இடத்திற்கு அண்ணியார் வந்திருக்கிறார். முக்கால்வாசி நேரம் சிங்கிள்ஸ் மட்டுமே ஆடும் இவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் எப்பாடுபட்டாவது டபுள்ஸ் ஆட டீம் சேர்த்துவிடுவார்கள்.

Vijayakanth
Vijayakanth

இந்த லோக்சபா தேர்தலில் பாவம் அதுவும் போய்விட, பங்களாவை விட்டு சோகமாய் வெளியேறும் சூரியவம்சத்து சின்ராசைப்போல கவலையோடு வலையை மடித்தபடி கோர்ட்டை விட்டு வெளியேறுகிறார் சுப்ரீம் ஸ்டார். பாவத்த!

டி.டி.வி தலைவாஸ்

தினகரனை 'தலைவா' எனக் கூப்பிட, கட்சியில் ஆள் இருக்காது போல! அதனால் டீம் பெயரையாவது அப்படி வைத்துக்கொள்ளலாம். அ.தி.மு.க-விலிருந்து லபக்கென ஆளைக் கவ்வி பாயின்ட் சேர்க்கும் வேலையை கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பார்த்துவருவதால் அவருக்குக் கபடி லீக்தான் சரியாக இருக்கும். ஆனால் இதில் சோகம் என்னவென்றால், எதிரணி ஏரியாவுக்குள் ரைடு போக வேண்டிய அவரின் டீம் ஆட்கள் சொந்த டீம் ஏரியாவிற்குள்ளேயே ரைடு போய் வெளியே போகும்போது கூட ஒருவரையும் இழுத்துப்போவது தான்.

T. T. V. Dhinakaran
T. T. V. Dhinakaran

கடைசியில் `கபடி லபடி' எனத் தனியாக கிரவுண்டைச் சுற்றி ஓடுவாரோ என்பதுதான் இப்போது கழக அபிமானிகளின் கவலை.

மய்யம் மேவரிக்ஸ்

பேஸ்கட்பாலுக்கென இந்தியாவில் ரசிகர் கூட்டமுண்டு. `ஹையா அப்ப பிசினஸ் இருக்கு' என அவர்களை குறிவைத்தே என்பிஏ-வும் இப்போது இந்தியாவில் களமிறங்குகிறது. ஆனால் பிராண்ட் அம்பாசிடர் வேண்டுமே? எப்படி பிக்பாஸுக்கு பிராண்ட் அம்பாசிடர் ஆனாரோ அதேபோல உலக நாயகன் இதற்கும் பிராண்ட் அம்பாசிடர் ஆகிவிடுவார்.

Kamal Haasan
Kamal Haasan

`நுண்துளை பின்னல்புழையின்பால் மேவிடும் பந்து உணர்த்திடுமே மய்யம் எதுவென்பதை'

எனத் தன் ஸ்டைலில் ட்விட்டர் புரோமோஷன் செய்தால் வந்த பிளேயர்கள் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அதே ஃப்ளைட்டில் ரிட்டர்ன் போய்விடுவார்கள். வழக்கம்போல நம்மவரே ஐந்து, ஐந்து பிளேயர்களாக வேஷம் போட்டு தசாவதார கூடைப்பந்து நிகழ்த்திக் காட்டுவார்.