Published:Updated:

`தவழும் தலைவி’, `கடைசி தாமரை’, `ஆமைக்கறியும் ஆதித்தமிழனும்’ - அரசியல் டைட்டில் பரிதாபங்கள்!

அரசியல் டைட்டில் பரிதாபங்கள்
Listicle
அரசியல் டைட்டில் பரிதாபங்கள்

டைட்டில் பஞ்சத்தில் தவித்துக்கொண்டிருந்தது தமிழ் சினிமா. எல்லா பிரச்னைகளுக்கும் அரசியல்வாதிகளிடம் தீர்வு கேட்கும் நாம், இந்த டைட்டில் பிரச்னைகளுக்கும் தீர்வு கேட்டு நாடினால் என்னவாகும்?!


1
தீபாம்மா

தீபாம்மா:

`என் காதலி சீன் போடுறா', `ஒங்களைப் போடணும் சார்' என்றெல்லாம் படத்திற்குப் பெயர் வைத்து, இந்த ஆண்டும் டைட்டில் பஞ்சத்தில் தவித்துக்கொண்டிருந்தது தமிழ் சினிமா. எல்லாப் பிரச்னைகளுக்கும் அரசியல்வாதிகளிடம் தீர்வு கேட்கும் நாம், இந்த டைட்டில் பிரச்னைகளுக்குத் தீர்வு கேட்டால் என்னவாகும், எப்படி புதுப்புது டைட்டில்களை வாரி வழங்குவார்கள் என உட்கார்ந்து சிந்தித்ததில்...

தீவிர அரசியலிலிருந்து விலகியிருந்தாலும், தீபாம்மா என்றுமே நமக்கு அரசியல்வாதிதான். எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் நிறுவனர் குட்டிமா (எ) பேபிம்மா (எ) தீபாம்மாவிடம் புதிதாய் டைட்டில் சொல்லுங்கள் எனக் கேட்டால் நிச்சயமாக, `அதை நீங்கள்தான் கூற வேண்டும்' என பதிலைத் திருப்பிவிடுவார்.

`குயின்', `தலைவி' என ஜெயலலிதா பயோபிக்குகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், ஜெயலலிதாவுடன் 70% உருவ ஒற்றுமை கொண்டுள்ள தீபாம்மா, நிச்சயம் சினிமாவுக்கு வருவார். `குட்டி குயின்', `தவழும் தலைவி' போன்ற படங்களிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


2
அமித்ஷா

அமித் ஷா:

வியூகங்களையே புதிது புதிதாய் வகுத்து, கழித்து, கூட்டி, பெருக்கக்கூடிய வல்லமைகொண்டவர் அமித் ஷா. ஒரே நேஷன், ஒரே ரேஷன், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கன்ட்ரி, ஒரே மொழி என ஒன்வேயில் பறக்கும் இந்த ராசாளியிடம், படத்துக்கு பெயர் வைக்கும் பொறுப்பைக் கொடுத்தால், பழக்கதோஷத்தில், `ஒரே படம் ஒரே பெயர்' என எல்லாப் படத்துக்கும் ஒரே பெயரை வைத்துவிட்டு, அடுத்து எதை ஒற்றை ஆக்கலாம் எனச் சிந்திக்கச் சென்றுவிடுவார், இந்த ஒரே அமித் ஷா.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3
தமிழிசை செளந்தரராஜன்

தமிழிசை செளந்தரராஜன்:

இந்நாள் தெலுங்கானா ஆளுநரும், முன்னாள் தமிழக பா.ஜ.க தலைவருமான தமிழிசை, மீம் க்ரியேட்டர்களின் குலசாமி மட்டுமல்ல, சிறந்த கவிஞரும்கூட.

ரஜினிக்கு சொன்ன வாழ்த்தில், `` 'படையப்பா' பல சாதனைகளைப் படையப்பா' என படத்தின் தலைப்பை கலைத்துப்போட்டு கவிதையாய்ப் படைத்தவர். அவரிடம், பெயர் வைக்கச் சொல்லி போய் நின்றால், `தாமரை ராஜாவும் தாமரை ராணியும்', `இரண்டாம் உலகப்போரின் கடைசி தாமரை', `வந்தா தாமரையாத்தான் வருவேன்' என டைட்டில்களில் தாமரையை மலரவைத்துவிடுவார்.


4
எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிசாமி:

தர்மயுத்தம் நடத்தாமலேயே முதல்வர் நாற்காலியை அலேக்காகத் தூக்கியவரும், நமது அண்ணனும் புன்னகை மன்னனுமாகிய எடப்படியார் அவர்களிடம் இன்றைய தேதிக்கு டைட்டில் வைக்கச்சொல்லி கேட்டால், ``உலகம் சுற்றும் வாலிபன் 2.0' வெச்சுக்கோங்க' என சிரிப்பைப் போட்டு அனுப்பிவிடுவார். அந்த டைட்டிலையும் வைத்து படம் ஓடவில்லையென்றால், நஷ்டஈடாகவோ, நிவாரணத் தொகையாகவோ பணத்தையும் கொடுத்துவிடுவார்னா பார்த்துக்கோங்களேன்.


5
ஸ்டாலின்

ஸ்டாலின்:

அடிமட்டத் தொண்டனில் ஆரம்பித்து செயல் தலைவர் வரை, முதல்வர் பதவியைத் தவிர்த்து மற்ற எல்லாப் பதவிகளையும் வகித்திருக்கும் ஸ்டாலினிடம், டைட்டில் வைக்கச் சொன்னால் செம கூத்து நடக்கும். `` 'மனிதன்' என்பதே தமிழ்ச் சொல் கிடையாது' என உதயநிதிக்கு நடந்த கொடுமையெல்லாம் அவர் கண்முன்னே வந்துபோகுமா இல்லையா. அதனால், தொன்மையான பழமொழிகளைத் திருப்பிப்போட்டு, இதுதான் டைட்டில் என துண்டுச்சீட்டில் எழுதிக் கொடுத்துவிடுவார்.


6
சீமான்:

சீமான்:

கொளுத்தும் வெயில், கொட்டும் மழை எனக் காலநிலை சூழ்நிலை மறந்து, பேச்சிலேயே சிலம்பம் சுற்றுபவரும், எதிரில் இருப்பவர்களுக்கு என்டர்ட்டெயினரும், தமிழகத் தம்பிகளுக்கு அண்ணனுமான சீமானிடம், 'நீங்க நம்பலைன்னாலும் இதான் படம்' என படத்திற்குப் பெயர் வைக்க லைனில் போய் நின்றால், 'வாய்ப்பில்ல ராஜா' எனத் தனது டிரேட் மார்க் `புவாஹ்ஹா...' சிரிப்புடன் நம்மைக் கடந்துசெல்வார். `ஆமைக்கறியும் ஆதித்தமிழனும்', `ஆஸ்திரேலிய கப்பலும் அரிசி மூட்டையும்' என டெரர் டைட்டில் வைக்கவும் வாய்ப்புண்டு.


7
துரைமுருகன்

துரைமுருகன்:

அகில உலக மீம்ஸ் பாய் சங்கத்தின் தக் லைஃப் தல, துரைமுருகன்! 'வட்டாட்சியாராவது...' என எதையும் அசால்ட்டாக லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்வதும், குலுங்கிக் குலுங்கிச் சிரித்து டென்ஷனாக வேண்டிய எதிராளியையும் குதூகலப்படுத்துவதும் என இவரது ப்ளஸ் பக்கங்கள் ஏராளம். அவரிடம் டைட்டில் வைக்கச்சொல்லி நின்றால், 'அழகான தமிழ்ப் பேரா வைங்கய்யா' என சிரிப்பார் பாருங்கள்... அதுதான் பேரா, இல்ல நம்மயே வைக்கச் சொல்கிறாரா எனக் குழம்பிக்கிடப்பான் சங்கத்தமிழன்.