Published:Updated:

``நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தயாராகுங்கள்!” - நடிகர் விஜய்யின் புதிய சிக்னல்?

விஜய்
News
விஜய்

தமிழகம் முழுக்க நடக்கவிருக்கும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனிக்கட்சி முத்திரையுடன் போட்டியிட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்கள். அதையும் அமைதியாக கேட்டுக்கொண்டாராம் விஜய்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றவர்களை சென்னைக்கு வரச் சொல்லி, பனையூரிலுள்ள தனது ரசிகர் மன்ற அலுவலகத்தில் சந்தித்தார் நடிகர் விஜய். இதற்காக பந்தல், மேடை போட்டு அமர்களப்படுத்தியிருந்தார் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த். வடை, பாயசத்துடன் விருந்தும் பரிமாறப்பட்டது. தேர்தலில் ஜெயித்த ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேசினார் நடிகர் விஜய். பிறகு குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டார். தேர்தலில் ஜெயித்தவர்கள் தங்களது ஒரிஜினல் சான்றிதழுடன் வந்திருந்தனர். அவற்றை வாங்கிப் பார்த்துத்தான் உள்ளே அனுமதித்தனர். அந்த வகையில், 129 பேர் தேர்வாகியிருந்தனர். வார்டு உறுப்பினர்கள் 115 பேர், துணைத் தலைவர்களாக 12 பேர், ஊராட்சி மன்றத் தலைவர்கள் இருவர்... என ஒன்பது மாவட்டங்களில் ஜெயித்திருக்கிறார்கள். ஆனால் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுக்கப் போட்டியிட்டு 128 பேர் மட்டுமே ஜெயித்திருந்தனர். இந்தப் புள்ளிவிவரங்களை கேட்டுத் தெரிந்துகொண்டாராம் விஜய். ஒவ்வொருவருக்கும் சால்வை அணிவித்து கைகுலுக்கி ஆசி வழங்கினாராம்.

 பனையூர்
பனையூர்

தேர்தலில் ஜெயித்த வயதான மூதாட்டி ஒருவர் நடிகர் விஜய்யைப் பார்த்து, ``ஐயா... உங்க உருவத்துல நான் எம்.ஜி.ஆரைப் பார்க்கிறேன். எப்பய்யா அரசியலுக்கு வருவீக?'' என்று பாசத்துடன் கேட்க... பதில் சொல்ல முடியாமல் திணறினார் நடிகர் விஜய். அருகில் இருந்தவர்கள், ``பாட்டி... இளைய தளபதிதான் வந்துட்டாரே?'' என்று கோஷம் போட்டனர். ஆளுக்கு ஓர் அரசியல் ஐடியாவைச் சொன்னார்கள். அனைத்தையும் காது கொடுத்து கேட்டுக்கொண்டார். பிறகு, நிர்வாகிகளிடம் பேசிய விஜய், ``உங்களுக்காக நான் சில திட்டங்களை சொல்லப்போகிறேன். மக்கள் மத்தியில் அதையெல்லாம் கொண்டு செல்லுங்கள். இடையில், தீபாவளிப் பண்டிகை வரப்போகிறது. உங்கள் வார்டுகளிலுள்ள பொதுமக்களிடம் தீபாவளி வாழ்த்துகள் சொல்வதோடு, குறைந்த பட்சம் ஒரு சாக்லேட் அல்லது ஸ்வீட் கொடுத்து சந்தோஷப்படுத்துங்கள்'' என்று சொன்னாராம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அரசியல்ரீதியாகப் பேசும்போது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரப்போவதை நினைவுபடுத்தியிருக்கிறார்கள். அதற்கு பதில் அளித்த புஸ்ஸி ஆனந்த், ``தேர்தல் கமிஷன் தரப்பில் அவ்வப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளைச் செய்ய முகாம் நடத்துவார்கள். அப்படி எப்போது நடந்தாலும், நம் இயக்கத்தினர் பொதுமக்களுக்கு உதவ வேண்டும். வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் இருக்கிறதா, இல்லையா என்பதை கவனித்து அவர்களுக்கு ஆலோசனை சொல்லி உதவ வேண்டும்'' என்றாராம்.

விஜய்
விஜய்

தமிழகம் முழுக்க நடக்கவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனிக்கட்சி முத்திரையுடன் போட்டியிட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்கள். அதையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டாராம் விஜய். பெரும்பாலானவர்கள் தேர்தலில் ஜெயித்துவிட்டோம். அடுத்த என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். இது மாதிரி கேட்பார்கள் என்பதை எதிர்பார்த்தே, விஜய் தன் கைப்பட எழுதி வைத்திருந்த வழிகாட்டுதல் பாயின்ட்டுகளை நிர்வாகிகளிடம் சொன்னாராம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இனி நீங்கள் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். அதை நடைமுறைப்படுத்தும் வகையில் உங்கள் அரசியல் நடவடிக்கை இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாராம். வழிகாட்டுதல் பாயின்ட்டுகளை சிறு சிறு நோட்டீஸ்களாகவும் கொடுத்தாராம். அதிலுள்ள முக்கிய விஷயங்கள்...

* ஏழை குழந்தைகளுக்கு விலை இல்லா ரொட்டி, பால் வழங்குதல்.

* மருத்துவ முகாம்.

* இரவு பாடசாலை,

* சுயதொழில் பயிற்சி

* தூய்மைப் பணித் திட்டம்

* தெரு விளக்கு அமைத்தல்

* 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்கள் நன்றாக படிக்கும் வகையில் பரிசுகளைக் கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும்.

* தவறாமல் மரம் நட வேண்டும்.

* கோலப் போட்டி மாதிரியான பாரம்பர்யமான விளையாட்டுகளை நடத்தி சிறுவர், சிறுமியர்களுக்கு பழைய காலத்து நிகழ்வுகளை நினைவுபடுத்த வேண்டும்.

* தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்க முன்னுரிமை தர வேண்டும். கோடைக்காலத்தில் தண்ணீர்ப் பந்தல் அமைத்து மக்களின் தாகத்தைப் போக்க வேண்டும்.

 பனையூர்
பனையூர்

தேர்தலில் ஜெயித்த சிலரிடம் மாற்று அரசியல் கட்சியினர் நிறைய சூழ்ச்சி செய்து ஜெயிக்கப் பார்த்தார்களே... எப்படிச் சமாளித்தீர்கள் என்று இயக்க நிர்வாகிகள் விசாரித்தார்களாம். அதற்கு அவர்கள் சொன்ன பதிலை நடிகர் விஜய் கேட்டுக்கொண்டிருந்தாராம். 'இது பற்றித் தனியாகப் பேசுவோம்' என்று சொல்லி விடை கொடுத்து அனுப்பினாராம்.