Published:Updated:

`குவாரி' குமார் சினிமா தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆன கதை! - ரூ.1000 கோடி ஐ.டி ரெய்டின் பின்னணி!

எல்ரெட் குமார்

தேசிய நெடுஞ்சாலை திட்டத்தையே குளறுபடிகள் செய்யும் அளவுக்கு எல்ரெட் குமாரின் செல்வாக்கு உயர்ந்திருப்பதை மத்திய அரசு கண்காணித்து வந்தது.

`குவாரி' குமார் சினிமா தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆன கதை! - ரூ.1000 கோடி ஐ.டி ரெய்டின் பின்னணி!

தேசிய நெடுஞ்சாலை திட்டத்தையே குளறுபடிகள் செய்யும் அளவுக்கு எல்ரெட் குமாரின் செல்வாக்கு உயர்ந்திருப்பதை மத்திய அரசு கண்காணித்து வந்தது.

Published:Updated:
எல்ரெட் குமார்

`விண்ணைத்தாண்டி வருவாயா', `கோ' உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து தமிழக திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கிவருகிறது ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் எல்ரெட் குமாருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை நடந்துவருவது திரையுலகத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எல்ரெட் குமார் -ஐ.டி.ரெய்டு
எல்ரெட் குமார் -ஐ.டி.ரெய்டு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திரைப்படத் தயாரிப்பாளர் என பலரால் அறியப்படும் எல்ரெட் குமார் ஆரம்பத்தில் குவாரி சப்ளையராக இருந்திருக்கிறார். அவருக்கான நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்ததில் பல பகீர் தகவல்களைச் சொல்கிறார்கள். அவர்கள் கூறியது பின்வருமாறு;

எல்ரெட் குமார் திரையுலகத்தின் பலரும் அறிந்த வகையில் பிரபல தயாரிப்பாளர். ஆனால் அரசியல் புள்ளிகள் மத்தியிலும், அரசு அதிகாரிகள் மத்தியிலும் அவரது அடையாளமே குவாரி குமார். ஆம்! கல் குவாரிகள் மூலம் கோடிகளில் பணத்தைக் குவித்து அந்தப் பணத்தை திரைத்துறையில முதலீடு செய்து தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தவர். இராமேஸ்வரம் அருகே உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்த குமார். பல ஆண்டுகளுக்கு முன்பாக குவாரி தொழிலில் சப்ளையராக வேலையை தொடங்கியிருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மலையை உடைத்து அதை கற்களாக மாற்றி விற்பனை செய்யும் தொழிலில் வரும் லாபத்தைப் பார்த்தபிறகு, குவாரிகளை குத்தகைக்கு எடுத்து கற்களை விற்பனை செய்யும் ஒப்பந்தங்களை கையில் எடுத்தார். தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கல் குவாரிகளை எடுத்து அதன்மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டிவந்தார். அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதலாகக் கற்களை வெட்டியும், உடைத்தும் இவரது குவாரிகள் செயல்பட்டதால், அரசாங்கத்திற்கு செல்லவேண்டிய வருவாய்களில் பெரும்பகுதி இவர் வசம் சென்றது. தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகள் சங்கத்திற்கு பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார் எல்ரெட் குமார்.

இந்த நிலையில்தான் தென் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் சினமா தயாரிப்பு பக்கம் தலைகாட்ட அந்த தொழிலில் இவரும் இறங்கினார். பத்து ஆண்டுகளுக்கு முன்பாக திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து பல வெற்றித் திரைப்படங்களையும் தயாரித்தார்.குறிப்பாக விண்ணை தாண்டி வருவாயா, கோ உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது தயாரிப்புகளே. அதே போல் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது விடுதலை என்கிற திரைப்படத்தையும் இவரது தயாரிப்பு நிறுவனமே தயாரித்து வருகிறது.

கற்குவாரிகள்
கற்குவாரிகள்

இந்த நிலையில் கடந்த ஆட்சியில் முக்கிய பிரமுகர்களின் நட்பின் மூலம் பல குவாரிகளில் கணக்கு இல்லாத அளவுக்கு கற்களை வெட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே போல் 2016 - பணமதிப்பிழப்பு அறிவிப்பின்போது, அன்றைய மாண்புமிகுக்கள் இருவரிடம் பெரும் தொகையை வாங்கி குவாரியில் முதலீடு செய்திருக்கிறார். பின்னாட்களில் அந்தப் பணம் சம்பந்தப்பட்டவர்களுக்கு திரும்பிச் செல்லவில்லை. பெங்களுரு சென்னை இடையே எக்ஸ்பிரஸ் ஹைவே திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கான வழித்தடத்தில் எல்ரெட் குமார் மற்றும் அவரது நண்பரான ஜெயராமன் ஆகியேருக்கு சொந்தமான ஐம்பது குவாரிகளும் சிக்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த குவாரிகள் எல்லாம் மத்திய அரசு கையகப்படுத்த அறிவிப்பு வெளியிட்டது. தனது முதலுக்கு மோசம் வருவதை அறிந்த குமார், அன்றைக்கு ஆளும் கட்சிக்கு நெருக்கமான ஒருவரைப் பிடித்து, தேசிய நெடுஞ்சாலை பாதை திட்டத்தில் மாற்றம் கொண்டுவந்து தனது 50 குவாரிகளை காப்பாற்றித் தர வேண்டினார். ஆட்சியாளர்களையும் தக்க முறையில் கவனிப்பதாகக்கூற, மத்திய அரசிடம் தமிழக அரசு வேறு ஒரு பாதைக்கான வரைபடத்தைக் கொடுத்தது. இதனால் அந்த ஐம்பது குவாரிகளும் அப்போது தப்பியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்பிறகு தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் கட்டுமானப்பொருட்கள் விலையைக் கட்டுபடுத்த முதல்வர் தரப்பு உத்தரவிட்டது. அந்த அடிப்படையில் கற்குவாரிகளை நடத்தும் குமார், ஜெயராமன் உள்ளிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கட்டிடத்திற்கு தேவைப்படும் கற்கள் விலையைக் குறைத்து நிர்ணயம் செய்ய கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசு அதிகாரிகளிடமே “நாங்கள் நிறைய செலவு செய்துள்ளோம். நாங்கள் கொடுக்கும் விலையில் எந்த மாற்றமும் இருக்காது” என்று கறார் காட்ட அதிர்ந்து போனார்கள் அதிகாரிகள்.

விடுதலை
விடுதலை

மேலும் கற்குவாரிகளுக்கான லைசென்ஸ் கட்டணத்தையும் ஏற்ற விடாமல் தனியாக லாபி செய்தும் வந்தனர். இந்நிலையில் தான் சமீபத்தில் வேலுாரில் குவாரிகளை நடத்தி வந்த சாரதி என்பவருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையின்போது எல்ரெட் குமார் குறித்த ஆவணங்களும் சிக்கியுள்ளது. அரசாங்கத்திற்கு முறையாக கட்டணங்கள் செலுத்தாமல் குவாரிகள் இயக்கி வந்த விவரங்களை எல்லாம் வருமானவரித்துறை அள்ளியது.

அப்போதே எல்ரெட் குமார் மற்றும் கல்குவாரி அதிபர் ஜெயராமன் ஆகியோர் வீடுகளில் எப்போது வேண்டுமானாலும் ரெய்டு நடக்கலாம் என்கிற செய்தி பரவியது. அந்த செய்தியை இப்போது வருமான வரித்துறையினர் உண்மையாக்கியுள்ளனர். எல்ரெட் குமாருக்கு ஆளும் தி.மு.க வுக்கும் ஏற்பட்ட பூசலே ரெய்டுக்கு காரணம் என்று திரைத்துறையில் தரப்பில் ஒருதகவல் கசிந்தது.

ஆனால், கடந்த பல ஆண்டுகளாக முறையற்ற வகையில் குவாரிகளை நடத்தியதோடு, மத்திய அரசு கொண்டு வந்த தேசிய நெடுஞ்சாலை திட்டத்திலேயே குளறுபடிகள் செய்யும் அளவுக்கு எல்ரெட் குமாரின் செல்வாக்கு உயர்ந்திருப்பதை மத்திய அரசு கண்காணித்துவந்தது.

விடுதலை திரைப்பட போஸ்டர்
விடுதலை திரைப்பட போஸ்டர்

அதற்கேற்ப சாரதி வீட்டில் ஆவணங்கள் சிக்கியதும் இப்போது எல்ரெட் குமாரை வருமான வரித்துறை வளைத்துள்ளது. குவாரிகள் மூலம் கோடிகளை குவித்து அதனை வைத்து திரைத்துறைக்குள் சாம்ராஜ்யம் நடத்தியவருக்கு இனி எல்லாம் சிக்கலாகவே அமையும் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism