Published:Updated:

சித்தார்த் முதல் பா.இரஞ்சித் வரை... மு.க.ஸ்டாலினுக்கு வித்தியாச வாழ்த்துகள் சொன்ன பிரபலங்கள்!

Celebrities | மு.க ஸ்டாலின் | AR Rahman
News
Celebrities | மு.க ஸ்டாலின் | AR Rahman

நடிகை பிரியா பவானி சங்கர் வாழ்த்து பதிவிற்கு சிலர் எதிர்வாதம் செய்ய, பவானியும் அவர்களுக்கு Seat குறித்த ஒரு விளக்கத்தைச் சொன்னார். இது தற்போது வைரலாகி வருகிறது.

தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க ஸ்டாலினுக்கு சினிமாத் துறையினர் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதில், சிலரின் வாழ்த்துகள் கவனத்தை ஈர்க்கும் விதம் வித்தியாசமாக அமைந்துள்ளது. அவற்றில் சில சுவாரஸ்யங்களை இங்கு தொகுத்திருக்கிறோம்.

யாரைச் சொல்கிறார் சித்தார்த்?!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

"ஜெயலலிதாவுக்குப் பிறகு நம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் முதல்வராகியுள்ளார். வாழ்த்துகள் ஸ்டாலின்” என்று நடிகர் சித்தார்த் ட்வீட் செய்திருந்தார். (எடப்பாடி பழனிசாமியை சூசகமாக சொல்கிறாரோ?!)

சாதி மத வேறுபாடுகளைக் கடந்து சமூக நீதியை நிலை நாட்ட!
பா.ரஞ்சித் | Pa.Ranjith
பா.ரஞ்சித் | Pa.Ranjith

இயக்குநர் பா.இரஞ்சித் தனது வாழ்த்துச் செய்தியில், ''தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கான, தங்களது தெளிவான நம்பிக்கையாக மு.க.ஸ்டாலினை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்! சாதி மத வேறுபாடுகளைக் கடந்து சமூக நீதியை நிலை நாட்ட தங்களது தலைமையிலான ஆட்சியில் சமரசமற்ற முன்னெடுப்புகள் அமைய வாழ்த்துகள்!" எனக் குறிப்பிட்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேன் போல இனித்திடும் வாக்குறுதி!
ஏ.ஆர்.ரஹ்மான் |  A.R.Rahman
ஏ.ஆர்.ரஹ்மான் | A.R.Rahman

"சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!" என்று ஏ.ஆர் ரஹ்மான் வாழ்த்துச் சொல்ல, நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும் என மு.க ஸ்டாலின் பதிலளித்தார். இதையடுத்து, ”கோவிட் பெருந்தொற்றால் அல்லல்படும் தமிழர்களுக்கு, தேன் போல இனித்திடும் வாக்குறுதி. இது பலித்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!” என்றார் ஏ.ஆர். ரஹ்மான்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்...

"நீண்ட காலத்துக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழிநடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன் எப்போதையும் விட பல மடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்துக்கொண்டிருக்குறோம் வாழ்த்துகள்" என எழுதியிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

பிரியா பவானி சங்கர் | Priya Bhavani Shankar
பிரியா பவானி சங்கர் | Priya Bhavani Shankar

இதற்கு பதிலளித்த ஒருவர், முதல்வரை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்க முடியாது எனச் சொல்ல, '' 'take a seat' என்றால் 'seat-அ தூக்கிக்கிட்டு நில்லு'ன்னு அர்த்தம் இல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்னா மக்கள் உட்கார்ந்து inky pinky போட்டு எடுத்தாங்கன்னு அர்த்தம் கிடையாது'' என அவருக்கு செம நக்கல் விளக்கத்தையும் சொல்லியிருக்கிறார் பவானி.

தமிழகம் சரியான திசையில் முன்னேறும்!

''மு.க ஸ்டாலினை சுற்றி அனைவரும் எவ்வளவு வருடங்கள், எவ்வளவுக் கடினமாக உழைத்தார்கள் என்பதை நான் தனிப்பட்ட முறையில் பார்த்திருக்கிறேன். மு.க ஸ்டாலின் தலைமையின் கீழ் தமிழகம் மக்களுக்கான, முற்போக்குக் கொள்கைகளைப் பார்க்கக் காத்திருக்கிறோம். உங்களது அட்டகாசமான வெற்றிக்கு வாழ்த்துக்கள் முக ஸ்டாலின் அவர்களே, உங்கள் தலைமையில் தமிழகம் செழிக்கும், சரியான திசையில் முன்னேறும் என்று நான் நம்பிக்கையாக இருக்கிறேன்'' என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

மாற்றத்தைப் பார்ப்பேன் நம்புகிறேன், விரும்புகிறேன்!

''உயரிய வெற்றி. வாழ்த்துக்கள் முக ஸ்டாலின். மாற்றத்துக்கான தீர்ப்பைத் தமிழக மக்கள் வழங்கியிருக்கின்றனர். மாற்றத்தைப் பார்ப்பேன் என்று நம்புகிறேன், விரும்புகிறேன். வாழ்த்துக்கள்'' என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

திரைத்துறைக்கு ஆக்ஸிஜன் கிடைக்கும்!
Vishal
Vishal

"நம் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்கிறேன். உடைந்து போயிருக்கும் நமது திரைத்துறைக்கும் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

வேளாண்மை, சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம்!

''மிக முக்கிய தருணத்தில், தமிழக முதல்வராகும் மு.க ஸ்டாலின் அவர்கள், நமது தனிப்பெரும் அடையாளங்களான சமூக நீதி, மத நல்லிணக்கம், கல்வி, மருத்துவம், சுகாதாரத்தோடு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து, மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தி.

"தனிப்பெரும் வெற்றி பெற்ற முதல்வர் ஐயா அவர்களுக்கு வணக்கம். மக்கள் பணி சிறக்க எமது வாழ்த்துக்கள்" என்று ட்வீட்டியிருக்கிறார் நடிகர் தனுஷ்.