Published:Updated:

"உதயநிதி அமைச்சராவதால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை!"- இயக்குநர் அமீர்

அமீர்,  உதயநிதி ஸ்டாலின்
News
அமீர், உதயநிதி ஸ்டாலின்

‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் அமீர், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து விமர்சனம் செய்திருக்கிறார்.

"உதயநிதி அமைச்சராவதால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை!"- இயக்குநர் அமீர்

‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் அமீர், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து விமர்சனம் செய்திருக்கிறார்.

Published:Updated:
அமீர்,  உதயநிதி ஸ்டாலின்
News
அமீர், உதயநிதி ஸ்டாலின்

இயக்குநர் அமீர் நடிப்பில், மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்கி தயாரிக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’. அரசியல் கதைக்களம் கொண்ட இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் அமீரின் பிறந்தநாள் அன்று வெளியாகியிருந்தது. இந்நிலையில் இன்று இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அப்போது உதயநிதி ஸ்டாலின் நாளை (டிசம்பர் 14ம் தேதி) அமைச்சராகப் பொறுப்பேற்பது குறித்துப் பேசிய அமீர், "இது தி.மு.க தொண்டர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் எடுக்கும் முடிவு. அதில் நாம் தலையிட முடியாது. இதனால் நமக்கும், மக்களுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஒரு துறையைக் கவனிக்கக் கூடுதலாக ஒரு அமைச்சர் வந்திருக்கிறார் என்றுதான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கருத்து தெரிவித்தார்.

அமீர்
அமீர்

மேலும், "‘உயிர் தமிழுக்கு’ திரைப்படம் மொழிப் பிரச்னையைப் பற்றிப் பேசும் படம் அல்ல, நம் மொழியைப் பற்றிப் பேசும் படம். சமீபத்தில் தமிழுக்கு எதிராக நடக்கும் அநீதிகள், தமிழை அழிக்க நினைக்கிற முயற்சிகளைப் பார்க்கும்போது, இந்தப் பெயர் சரியாக இருக்கும் என்று தோன்றியது. நம் மொழியைப் பற்றி இப்போது பேசவில்லையென்றால் எப்போது பேசப்போகிறோம். இந்தித் திணிப்புத் தொடர்ச்சியாக இங்கு நடைபெற்று வருகிறது. இதை நாங்கள் முற்றிலும் வெறுக்கிறோம். அதனால் ‘உயிர் தமிழுக்கு’ என்று உரக்கச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது.

எங்களிடம் சினிமா என்கிற கலை இருக்கிறது, அதன் மூலமாக நாங்கள் சொல்ல நினைப்பதைச் சொல்ல விரும்புகிறோம். ‘உயிர் தமிழுக்கு’ என்று சொல்வதன் மூலம் என்னுடைய மொழி, பண்பாடு, கலாசாரம் பிரதிபலிப்பதாக உணர்கிறேன். இதன் காரணமாகத்தான் ‘உயிர் தமிழுக்கு’ என்று இத்திரைப்படத்திற்குப் பெயர் வைத்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.