Published:Updated:

ஐடியா அய்யனாரு!

‘கட்சி நலனுக்காக சர்வாதிகாரியாகக்கூட செயல்படுவேன்’ என ஆக்ரோஷமாய் நாக்கைக் கடித்து அறிக்கைவிட்டிருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

பிரீமியம் ஸ்டோரி

‘கட்சி நலனுக்காக சர்வாதிகாரியாகக்கூட செயல்படுவேன்’ என ஆக்ரோஷமாய் நாக்கைக் கடித்து அறிக்கைவிட்டிருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அதைப் பார்த்து உடன்பிறப்புகள் எல்லாம் பதறி சிதறி கிடக்கிறார்கள். கட்சியின் நலனுக்காக, அவர் இன்னும் எப்படியெல்லாம் செயல்படலாம் என எக்ஸ்ட்ரா ஐடியா கொடுக்கிறான் இந்த அய்யனார்.

  • ஸ்டாலின் கொஞ்சநாள் ஃபேஸ்புக் ஃபேக் ஐடியாகச் செயல்படலாம். இணையதள உ.பி யாரிடமாவது ‘மூலப்பத்திரம் எங்கே’ என ஒரண்டை இழுத்து, அதனால் நிகழும் விளைவுகளைக் குறிப்பேட்டில் குறித்துவைத்துக்கொள்ளலாம். ஒரு புள்ளப்பூச்சி சிக்கிவிட்டால் இந்த இணைய உ.பி-க்கள் எப்படியெல்லாம் ஊமைக்குத்து குத்துகிறார்கள், முட்டுக்கொடுக்கிறேன் என மூளைக்காய்ச்சல் வரவைக்கிறார்கள், ‘ஓனர்னா ஓரமா போயா’ என தலைவரான தன்னையே எப்படி திண்ணையில் அமர்ந்துகொண்டு திட்டுகிறார்கள் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு, இ.உ.பி-க்களின் மனநிலையைக் கொஞ்சமாவது புரிந்துகொள்ளலாம். கட்சிக்கு நல்லது, சொல்லிப்புட்டேன். ஆமா!

  • மீம் க்ரியேட்டராகவும் சில நாள்கள் செயல்படலாம். இத்தனை நாளாக மேடையில் உளறியதையும் பழமொழிகளைப் பஞ்சாமிர்தம் ஆக்கியதையும் இந்த மீம் க்ரியேட்டர்கள் எப்படி கண்டுணர்ந்து கன்டென்ட் ஆக்கி கலாய்த்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ள இது உதவியாக இருக்கும். என்ன பேசினால் கலாய்க்கிறார்கள், எப்படி பேசினால் கலாய்க்கிறார்கள், எதற்கெல்லாம் பேசினாலே கலாய்க்கிறார்கள் என்ற டேட்டாபேஸை உருவாக்கி, கலாயிலிருந்து சாமார்த்தியமாகத் தப்பிக்கலாம். அதுவும் கட்சியின் நலனுக்காக!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐடியா அய்யனாரு!
  • சர்வாதிகாரி ஆவதைவிட, பிக்பாஸ் போட்டியாளாராக மாறுவது இன்னும் பெரிய பலனைத் தரும். ‘அன்பு ஒன்றுதான் அனாதை’ என்று பிரபலமான முகின், அன்புமணியையே அலறவைத்த ஓவியா என பிக்பாஸ் போட்டியாளர்கள் மக்கள் மனதில் பிடித்திருக்கும் இடத்தை யோசித்துப்பாருங்கள். அம்மா என்றால் ஜெயலலிதா, அக்கா என்றால் தமிழிசை, சின்னம்மா என்றால் சசிகலா, பேபிம்மா என்றால் தீபா எனத் தமிழக அரசியல்வாதிகள் பலருக்கும் குடும்ப உறவைக் குறிக்கும் பட்டப்பெயர் ஒன்றுண்டு. ஸ்டாலினுக்கு அது இல்லை. பிக்பாஸ் வீட்டுக்குள் போனால், சேரப்பா, சித்தப்பு, நைனா என அவர்களே ஒரு உறவை வைத்துவிடுவார்கள். பிறகு, ஊரே அதைச் சொல்லிதான் அழைக்கும். எப்பூடி! சீனி சர்க்கரை சித்தப்பா...

  • ஸ்டாலின் யூ-டியூப் பிரபலமாகவும் மாற முயற்சிக்கலாம். இணையத்தின் இளையக்குழந்தை மதன்கௌரி அண்ணா, மார்ஸ் கிரகத்தில்கூட சோர்ஸ் வைத்திருக்கும் மாரிதாஸ் ப்ரோ, சமுத்திரக்கனியை விஞ்சும் அறிவுரைகளை உதிர்க்கும் ட்விட்டர் உலகின் கன்ஃப்யூசியஸ் ‘இட் இஸ் பிரசாந்த்’ என யூ-டியூப் மூலம் ஊருக்குள் பெரிய தலைக்கட்டாக மாறியவர்கள் ஏராளம். இரண்டாவது, இந்த 2K கிட்ஸ் எல்லோரும் ‘ஸ்டீபன் வில்லியம் ஹாவ்கின்ஸைவிட மதன்கௌரி அண்ணாதான் அறிவாளி’ என்கிற அளவுக்குப் பேசிக்கொண்டிருக் கிறார்கள். இந்த அப்பாவி கூட்டத்தைக் கட்சிக்குள் கொத்தாக அள்ளிப்போட்டுக் கொண்டுவருவதற்கு யூ-டியூப்தான் ஒரே வழி. வாரத்துக்கு ஒரு வீடியோ பண்ணுங்க தளபதியாரே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு