எதைப்பற்றி கருத்துக் கேட்டாலும் ஈயம் பூசியதுபோலவும்... பூசாதது போலவும் பேசிக் கொண்டிருப்ப வரை, `சிக்கன் பிரியாணி சுவையாக இருக்கும். ஆனால், கோழியைக் கொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது’ ரேஞ்சுக்கு இறங்கி அடிக்கிறார்கள். இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து தப்பிக்க, ஐடியா தருகிறான் அய்யனாரு!

எட்டு எட்டாய் மனித வாழ்வைப் பிரித்துக்கொள்ளச் சொன்ன ரஜினியை, ஏழரையாய் வந்து பிரித்தெடுப்பது விமான நிலையங்கள்தான். எப்போதெல்லாம் விமான நிலையத்தில் பேட்டியளிக்கிறாரோ, அப்போதெல்லாம் அவரைக் கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள். எனவே, விமானநிலைய பேட்டிகளில், `ஃப்ளைட்ல வந்தது தலைசுத்துது. பாருங்க... புளிப்பு மிட்டாய் சாப்பிட்டுட்டு இருக்கேன். அப்புறமா பேசுறேன் ஓகே’ என நாக்கை நீட்டி மிட்டாயைக் காட்டி நழுவலாம்.

அறிவியலின் துணையோடும் தீர்வுகட்டலாம். ‘வாயை மூடி பேசவும்’ படத்தில் வருவதுபோல, பதில் சொல்லும் மெஷின் ஒன்றைக் கண்டுபிடிக்கலாம். அதில் ‘நல்ல கேள்வி’, ‘அடுத்த கேள்வி’ மற்றும் ரஜினியின் ட்ரேட்மார்க் சிரிப்பு வருவதுபோல் மூன்று பொத்தான்கள் அமைக்கலாம். எந்தக் கேள்வி கேட்டாலும், மூன்றில் ஒரு பொத்தானை அழுத்தி, வாயையே திறக்காமல் பிரச்னையைத் தவிர்க்கலாம்!

‘முப்பதே நாளில், புரியாதபடி பேசுவது எப்படி?’ என்கிற வித்தையை தன் நண்பர் கமலிடம் கற்றுக்கொள்ளலாம். உதாரணமாக, சிக்கன் பிரியாணி பிரச்னை என வைத்துக்கொள்வோம்... `சிக்கன் பிரியாணி உண்ண, சிக்கன் பிரியனால் முடியாது; கிச்சன் பிரியனால் முடியும். சிக்கன் பிரியாணியில் முட்டை இருக்கும்... முட்டை பிரியாணியில் சிக்கன் இருக்குமா என்பதை மக்கள்தான் சிந்திக்க வேண்டும்’ என அடித்துவிடலாம். ஏதாவது புரிஞ்சது? புரியாது... உருட்டு அப்படி!

`பேட்டை’ ஆடியோ நிகழ்வில் `எக்ஸ்ட்ரா’ மந்திரத்தின் மகா உன்னதத்தைப் பற்றி சொற்பொழிவாற்றினார் ரஜினி. ``எக்ஸ்ட்ரா பேசக் கூடாது, எக்ஸ்ட்ரா திட்டக் கூடாது, எக்ஸ்ட்ரா அறிவுரை கூறக் கூடாது” என்பதுதான் அது. அதையே பேட்டியிலும் பயன்படுத்தலாம். `நான் எக்ஸ்ட்ரா பேசக் கூடாது, எக்ஸ்ட்ரா திட்டக் கூடாது, எக்ஸ்ட்ரா அறிவுரை கூறக் கூடாது’ என்று கையெடுத்துக் கும்பிடலாம்.