Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

- தமிழக அரசியலின் மிகப்பெரிய அதிர்ச்சி, அந்த நாளில் காத்திருந்தது. ‘இனி இவர்தான் எதிர்காலம்’ என டிரில்லியன் கணக்கான மக்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒப்பற்ற தலைவி தீபாம்மா, அரசியலில் இருந்து விலகுவதாகச் சொன்ன அந்த அறிவிப்பு, மாநிலம் முழுவதும் கண்ணீர் அலைகளை எழுப்பியது.

ஐடியா அய்யனாரு!

- தமிழக அரசியலின் மிகப்பெரிய அதிர்ச்சி, அந்த நாளில் காத்திருந்தது. ‘இனி இவர்தான் எதிர்காலம்’ என டிரில்லியன் கணக்கான மக்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒப்பற்ற தலைவி தீபாம்மா, அரசியலில் இருந்து விலகுவதாகச் சொன்ன அந்த அறிவிப்பு, மாநிலம் முழுவதும் கண்ணீர் அலைகளை எழுப்பியது.

Published:Updated:
ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

தீபாம்மா ஹேட்டர்ஸ், அதை ‘மக்கள் சிரித்துச் சிரித்துப் புரையேறிய நீர்’ என்பார்கள். ஆனால், தீபாம்மா விசுவாசிகளுக்குத்தான் தெரியும் - உண்மை என்னவென! தீபாம்மா எப்பேர்ப்பட்ட வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக் கிறார்?!

  • கழக வரலாற்றில் முதன்முறையாக, குடும்ப அரசியல் கூடாது என்பதில் தெளிவாக இருந்தவர் தீபாம்மா. அதனாலேயே கட்சியின் ஒரே உறுப்பினரான கணவர் மாதவன் தலைவர் ஆக ஆசைப்பட்டபோது, அவரைக் கட்சியிலிருந்து நீக்கி... தனியாளாக, தலைவராக அவரே கொள்கை வகுத்து... தொண்டராக அவரே அதை மீறி... வரலாறு காணாத விநோதங்களைச் செய்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
  • தி.மு.க - அ.தி.மு.க, காங்கிரஸ் - பி.ஜே.பி வரிசையில் அடுத்த பெரிய கட்சிகளாக தீபாம்மாவின் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையும், மாதவனின் எம்.ஜி.ஆர் ஜெ.ஜெ தி.மு.க-வுமே இருக்கும் என வானிலை வல்லுநர்கள் எல்லாம் கணிக்க, சட்டென தாய்க் கழகமான தீபா பேரவையையும் சைல்ட் கழகமான மாதவன் கட்சியையும் மொத்தமாகக் கலைத்து, தமிழக அரசியல் எதிர்காலத்தைக் குலைத்துப்போட்டிருக்கிறார்.

  • ஊர்ப் பக்கம் திருவிழாக்களில், ரஜினியை அழைத்துவரும் அளவுக்கு பட்ஜெட் இல்லாமல் டூப் ரஜினியை ஆடவிடுவார்கள். அதேபோலத்தான், பேட்டி தராமல் இருந்த ஜெ-வின் டூப் வெர்ஷனான தீபாவை வைத்து ஸ்ஃபூப் பேட்டிகள் எடுத்து பழகிக் கொண்டிருந்தார்கள் மீடியா ஆள்கள். இனிமேல் அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டதே... என்ன செய்வர்?

  • அரசியலுக்கு வந்த புதிதில் தம்பி தீபக்கோடு கைகோத்தார். இருவரும் தீபாவளிக்கு டப்பாசு வெடிக்கும் துப்பாக்கிபோல டுமீல் காட்டிக்கொண்டிருந்தார்கள். அதன் பிறகு தீபக் காணாமல்போனார். பிறகு, கைகோத்த கணவர் மாதவனும் பிரிந்துபோய் தனிக்கட்சித் தொடங்கினார். உடனே ஓ.பி.எஸ் பக்கம் தீபாம்மா செல்ல, செல்வாக்கு சரிந்து எடப்பாடியிடம் சரணடைந்தார் ஓ.பி.எஸ். இப்படி நூதனமுறையில் எதிரிகளை வீழ்த்தும் சாணக்யாவை இனி பார்க்கவே முடியாது.

  • பரபரப்பாகச் செல்லும் த்ரில்லர் சினிமாவில் ஹார்ட் பீட்டைத் தக்கவைக்க நடுநடுவே சிரிப்புக் காட்சிகள் வருவதுபோல, காட்டுக் குதிரையாக ஓடிக்கொண்டிருந்த தமிழக அரசியலில் கிச்சுகிச்சு மூட்டி ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருந்தார் தீபாம்மா. இனி, நடப்பதைப் பார்த்து மண்டை சூடாவதைத் தவிர தமிழனுக்கு வேறு வழி இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism