Published:Updated:

ஐடியா அய்யனாரு!

புதிய கல்விக்கொள்கை குறித்து சூர்யா கொந்தளித்துப் பேசியதற்கு, பலரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

பிரீமியம் ஸ்டோரி

‘ஆ... என்ன எல்லாரும் அந்தப் பக்கம் திரும்புறாங்க’ என யோசித்த சுப்ரீம் ஸ்டார் உடனே, ``சூர்யா பேசினதுல எனக்கு உடன்பாடு இல்லை'' என்று யாரும் கேட்காமலேயே வான்ட்டடாக வண்டியில் ஏறியிருக்கிறார். இதில் கடைசியாக, ``ஆனா, நான் இன்னும் புதிய கல்விக்கொள்கை பத்திப் படிக்கல'' என்ற பிட்டு வேறு! இது போதாதென்று, ``இவர் சரத்குமார் அல்ல, சாதனைக்குமார்'' என தமிழிசையின் பாராட்டுப் பத்திரம் ஒரு பக்கம் கிச்சுகிச்சு மூட்டுகிறது. சுப்ரீம் ஸ்டாரின் லிஸ்ட் ஆஃப் குமார் பட்டங்கள் இதோ!

  • 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து அடையாத பெருமையை, ஒரே ஒரு சங்கத் தேர்தல் மூலம் கண்டடைந்த சாதனைக்குச் சொந்தக்காரர். ‘நடிகர் சங்கம்’ என ஒன்று இருக்கிறது என்பதை தன் ஸ்டன்ட் வித்தைகளால் வெளிக்கொண்டுவந்த ‘சங்கக்குமார்’ இவர்!

  • ‘சமத்துவ மக்கள் கட்சி’ தொடங்கியபோது கட்சியில் கூட்டம் கூட்டமாக இரண்டு பேர் இருந்தார்கள் என்பது உண்மைதான். அதில் ஒருவர், ‘போங்க தல, ரம்மி விளையாடக்கூட ஆள் பத்தல’ என வெளியேறியதிலிருந்து ஒற்றை பாகுபலியாய் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். நியாயமாய்‘ஒற்றைத் தலைமை’ பெருமை இவருக்கே! எனவே இவர் ‘சிங்கிள் சிங்கக்குமார்’.

  • ‘சங்கத் தேர்தலா? நான் ஃப்ரீயா இருக்கேன். வாங்க போட்டிபோடுறேன்!’, ‘ஓ... சி.எம் போஸ்ட்டா? எனக்கு வேணா கொடுங்களேன்!’ என அத்தனைக்கும் ஆசைப்படும் நல்ல உள்ளம். அவ்வளவு ஏன்? தேர்தல் சமயத்தில் கூட்டணிக்கு ஆள் தேடினால் முதல் ஆளாக வருவதும் இவர்தான். எனவே, இவர் ஒரு ‘நான்தான் இருக்கேன்ல குமார்'!

  • ‘எனக்கு மல்டி டாஸ்கிங் பிடிக்கும்’ எனப் பெருமையாகச் சொல்லி சைடில் புதுப்படம் தொடங்குவார். அப்படித் தொடங்கப்பட்ட ‘ரெண்டாவது ஆட்டம்’, ‘நல்லாசிரியர்’, ‘பாம்பன்’ போன்ற படங்களின் நிலை என்னவென்றே தெரியவில்லை. இப்படி புரியாத புதிராக இருப்பதால் இவரை ‘மிஸ்ட்ரி குமார்’ என்றும் அன்போடு அழைக்கலாம்.

  • ‘லோக் சபால தனியா போட்டிபோடுறோம், அதகளம் பண்றோம்’ என முதல் நாள் அறிவிப்பார். மறுநாளே ‘கூட்டணி வெச்சு போட்டிபோடுவோம்’ என்பார். மூணாவது நாள், ‘கூட்டணி வெச்சுக்கிட்டோம். ஆனா போட்டியில்ல’ என்பார். இப்படி கூட்டணிக்காகச் சகலவற்றையும் விட்டுக்கொடுக்கும் ‘கூட்டணிக் குமார்’ இவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு