சமூகம்
Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஐடியா அய்யனாரு!

தெலங்கானா மாநில ஆளுநராக அக்கா தமிழிசை நியமிக்கப்பட்டது, தமிழர்களாகிய நமக்கெல்லாம் பெருமைதான். இருந்தாலும், நாம் எந்தளவுக்கு அக்காவை மிஸ் செய்கிறோம் என நினைக்கும்போது, கொடுமையாகவும் இருக்கிறது. வாங்க சேர்ந்து ஃபீல் பண்ணுவோம்...

  • உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஓர் ஊராட்சியில் பா.ஜ.க வென்றால்கூட, பரபரப்பாய் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார் தமிழிசை. அதேநேரம், உள்ளூரில் ஊறவைத்து அடிக்கும்போதெல்லாம் `போனமுறை பத்து அடி அடிச்சீங்க... இந்த முறை எட்டு அடிதான். ஆக, எங்களுக்கு இரண்டு அடி லாபம். இது வெற்றிகரமான தோல்வி!’ என்று கூலாக பேட்டி தட்டுவார். அந்த பாசிட்டிவிட்டிக்காகவே தமிழிசையின் பேச்சை தினமும் கேட்கலாம். தமிழிசையை மிஸ் செய்வதன் வலி இப்போது புரிகிறதா?!

  • இனி மழைக்காலம் ஆரம்பம். `மழை வந்தால், சூரியன் மறையும்... குளம் நிறையும்... தாமரை மலரும்’ என உருகுவார். மழை வராவிட்டாலும், `செயற்கை மழையை வரவழைக்கும் விஞ்ஞானக் காலம் இது. ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க, செயற்கை மழைநீர் வரவைத்தேனும் குளங்களை நிரம்பவைத்து தாமரையை மலரச்செய்வோம்’ என வேதமும் விஞ்ஞானமும் கலந்துகட்டி கருத்து சொல்வார். இனி எங்கே போய்த் தேடுவோம் இப்படி ஒரு தமிழச்சியை? சகலகலாவல்லி தமிழிசை அவர்களை அவ்வளவு மிஸ் செய்கிறோம். தெலங்கானாவே... ஹெச்.ராஜாவை வெச்சிக்க, தமிழிசையைத் தந்துடு!

  • `பெண்பாடு; பண்பாடு’, `நீர்; போர்’ என வார்த்தை விளையாட்டுகளில் வித்தகம்புரிந்து, `சூரியன் உதிக்காமல் போகலாம்... இலை துளிர்க்காமல்போகலாம், மாம்பழம் பழுக்காமல்போகலாம், ரஜினிக்கு போர் வராமல்போகலாம்... ஆனால், தாமரை மலர்ந்தே தீரும்’, `மோடிக்குச் சொல்கிறார்கள் நமஸ்காரம்... வீட்டில் செய்கிறார்கள் பலகாரம்’ என புதுக்கவிதைகள் படைக்கும் கமலாலயத்துக் கவிதாயினி தமிழிசை அக்கா... நீங்க திரும்ப எப்ப வருவீங்க?!

ஐடியா அய்யனாரு!
  • பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவை உயரம் தாண்டுதலில் 1,800 மீட்டர் வரை உயரம் தாண்டியதாகக் கூறி வாழ்த்துச் சொல்லிப் பதறவைப்பதும், ‘தமிழக மீனவர்களைத் தாக்குவது இலங்கை ராணுவமல்ல, வேறு யாரோ’ எனச் சிதறவைப்பதும், `அது அவரின் சொந்தக் கருத்து’ என அறிக்கை தட்டுவதுமாக நியூஸ் சேனல்களில் தினமும் தமிழிசையைப் பார்க்கலாம். அரசியல்வாதி என்பதைத் தாண்டி சின்னத்திரை பிரபலமாகவும் அக்காவை மிஸ் செய்கிறார்கள் நம் இல்லத்தரசிகள்!