Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

இரண்டு அடியில் வாழ்க்கையையே விளக்கிய திருவள்ளுவருக்காக, இரண்டு குரூப்பாகப் பிரிந்து அடித்துக்கொள்கிறார்கள்.

ஐடியா அய்யனாரு!

இரண்டு அடியில் வாழ்க்கையையே விளக்கிய திருவள்ளுவருக்காக, இரண்டு குரூப்பாகப் பிரிந்து அடித்துக்கொள்கிறார்கள்.

Published:Updated:
ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

“திருவள்ளுவரே எங்காளுகதான்டா!” என்று ஒரு குரூப்பும், “கடைசியில, திருவள்ளுவரையே மதமாற்றம் செய்றீங்களேடா!” என்று மற்றொரு குரூப்பும் இணையகளத்தில் காற்று புக முடியாத அளவுக்கு கம்பு சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் அய்யன் வள்ளுவர் பார்த்திருந்தால், இன்றைய சூழலில் என்ன குறள் எழுதியிருப்பார் எனச் சிந்தித்துப்பார்க்கிறான் அய்யனாரு!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எட்டிசைன் யார்யார் ஷேர் செய்யினும்

அட்டிசைன் மெய்டிசைன் காண்பதறிவு

விளக்கவுரை: எட்டிசைன், அட்டிசைன் வார்த்தைகளையெல்லாம் நெட்டிசன்களைப் பார்த்து உருவாக்கியிருப்பார் வள்ளுவர். தனக்கு காவி நிறம் அடித்தாலும் சரி, கறுப்பு நிறம் அடித்தாலும் சரி, இவை இரண்டுமல்லாமல் ராமர் பச்சை நிறம் அடித்தாலும்கூட சரி, எதையும் நம்பாமல் என் உடையின் உண்மையான வண்ணம் என்ன என்பதை பத்தாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

துட்டின்றி அமையாது அரசு யார்யார்க்கும்

போட்டோஷாப்பின்றி நடக்காது பொழப்பு

விளக்கவுரை: ஓட்டுக்கு துட்டைக் கொடுத்து ஆட்சியில் அமர்கிறார்கள். ஆட்சியில் அமர்ந்த பிறகு, நிஜத்தில் எதையுமே செய்யாமல் போட்டோஷாப்பில் மட்டும் வெட்டி, ஒட்டி, வாட்ஸ் அப்பில் பரவவிட்டுப் பிழைப்பை ஓட்டுகிறார்கள். புது பிரச்னையைக் கிளப்ப வேண்டுமென்றாலும் சரி, பழைய பிரச்னையைத் திசைத்திருப்ப வேண்டுமென்றாலும் சரி, ஒரேயொரு போட்டோஷாப் போதும்.

ஐடியா அய்யனாரு!

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

இடியவே இடிக்கப் பார்த்தானுங்க

விளக்கவுரை: இதற்கு விளக்கமெல்லாம் தேவையில்லை. இடிக்கவே இடிக்கப் பார்த்தார்கள். எனக்கே விபூதி அடிக்கப் பார்த்தார்கள், அவ்வளவுதான்!

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

சிலையுடைப்பார் கல்லிழுத்துப் போட்டு

விளக்கவுரை: வீணாக வாய் பேசி வம்பு வளர்க்காதீர்கள். கடைசியில், அது சிலையின் தலையில்தான் வந்து விழுகிறது. உடைக்கும் மடையர்களாகப் பார்த்துத் திருந்தாவிட்டால், இந்த மடத்தனத்தையும் ஒழிக்க முடியாது. எனவே, மடையர்களிடம் வம்பு வளர்க்காமல் அன்புடையர்களிடம் அன்பு செலுத்துங்கள்.