Published:Updated:

`நான் அழகாக இல்லை, சுமார்தான் என்று அம்மா என்னிடமே கூறியிருக்கிறார்' - நினைவலைகளைப் பகிர்ந்த ராகுல்!

ராகுல் காந்தி

``என் அம்மா அப்படித்தான். என் அம்மா உங்களை உடனடியாக உங்களின் இடத்தில் வைத்துவிடுவார். என்னுடைய தந்தையும் அப்படித்தான். என்னுடைய முழு குடும்பமும் அப்படித்தான்..."

`நான் அழகாக இல்லை, சுமார்தான் என்று அம்மா என்னிடமே கூறியிருக்கிறார்' - நினைவலைகளைப் பகிர்ந்த ராகுல்!

``என் அம்மா அப்படித்தான். என் அம்மா உங்களை உடனடியாக உங்களின் இடத்தில் வைத்துவிடுவார். என்னுடைய தந்தையும் அப்படித்தான். என்னுடைய முழு குடும்பமும் அப்படித்தான்..."

Published:Updated:
ராகுல் காந்தி

`பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை பயணத்தைச் செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கினார் ராகுல் காந்தி. 150 நாள்களில் கன்னியாகுமரி முதல், காஷ்மீர் வரை 3,500 கி.மீ நடந்து செல்ல திட்டமிடப்பட்ட இந்த யாத்திரையில், இதுவரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தன்னுடைய பயணத்தை முடித்துள்ளார்.

பாரத் ஜோடோ யாத்ரா
பாரத் ஜோடோ யாத்ரா

இந்நிலையில், பாரத் ஜோடோ யாத்ரா பயணத்தின் இடையில் ராகுல் காந்தியிடம் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. அப்போது, `நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்’ எனப் பேட்டி எடுத்தவர் தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, ``நான் குழந்தையாக இருந்த போது, என்னுடைய அம்மாவிடம் சென்று, `அம்மா நான் அழகாக இருக்கிறேனா?’ என்று கேட்டேன்.

என் அம்மா என்னைத் திரும்பிப் பார்த்து, `இல்லை, நீ சுமாராகத் தான் இருக்கிறாய்!’ என்று பதிலளித்தார். என் அம்மா அப்படித்தான். என் அம்மா உங்களை உடனடியாக உங்களின் இடத்தில் வைத்துவிடுவார். என்னுடைய தந்தையும் அப்படித்தான். என்னுடைய முழுக் குடும்பமும் அப்படித்தான். 

சோனியா காந்தி
சோனியா காந்தி

நீங்கள் ஏதாவது ஒன்று சொன்னால், உடனடியாக அவர்கள் நம்மை எங்கே செல்ல வேண்டுமோ அங்கே அனுப்பி வைப்பார்கள். அதனாலேயே அவர், நீ மிகவும் சுமாராக இருக்கிறாய் என்று சொன்னார். அது என்னுடைய மனதில் பதிந்துவிட்டது.

அதோடு சிறுவயதில் எனக்கான காலணிகளை நானே வாங்கிக் கொள்வேன். சில சமயங்களில் என்னுடைய அம்மாவும், சகோதரியும் வாங்கித் தருவார்கள். அரசியல் நண்பர்கள் சிலரும் காலணிகளைப் பரிசளிப்பார்கள்’’ என்று தெரிவித்தார். 

அப்போது, `பா.ஜ.கா-வைச் சேர்ந்த யாராவது உங்களுக்குக் காலணிகளைக் கொடுத்திருக்கிறார்களா?’ என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, ``அவர்கள் என்மீது காலணிகளை வீசத்தான் செய்திருக்கிறார்கள்’’ எனக் கூறினார்.

ராகுல் காந்தி தன்னுடைய சிறு வயது நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டது, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.