Published:Updated:

"உங்களின் தாய் மிகுந்த மகிழ்ச்சியடைவார்..." - அமைச்சரான உதயநிதிக்கு வாழ்த்துச் சொன்ன இளையராஜா

உதயநிதி, இளையராஜா
News
உதயநிதி, இளையராஜா

அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துச் சொன்ன இளையராஜா.

"உங்களின் தாய் மிகுந்த மகிழ்ச்சியடைவார்..." - அமைச்சரான உதயநிதிக்கு வாழ்த்துச் சொன்ன இளையராஜா

அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துச் சொன்ன இளையராஜா.

Published:Updated:
உதயநிதி, இளையராஜா
News
உதயநிதி, இளையராஜா
நேற்று டிசம்பர் 14-ம் தேதி தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், எம்.எல்.ஏ-வும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் முதல் முறையாக அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் இசையமைப்பாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான இளையராஜா, அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நெகிழ்ச்சியுடன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இளையராஜா
இளையராஜா

இது பற்றி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இளையராஜா, அதில், "மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களே... நீங்கள் பதவி ஏற்கும் இந்த நாளில் உங்களை வாழ்த்துவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்' என்று வள்ளுவர் சொன்னதைப்போல உங்களின் அம்மாவுக்குத்தான் நீங்கள் பதவி ஏற்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கும். வள்ளுவர் சொன்னது நிஜமாக நடக்கும்போது அம்மா மிகுந்த மகிழ்ச்சியடைவார் என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன், நானும் மகிழ்கிறேன். இந்த அமைச்சர் பதவியை நல்ல முறையில் பயன்படுத்தி மக்களுக்கு நீங்கள் சேவை செய்யவேண்டும். முன்பே அரசியலில் இறங்கிவிட்டீர்கள். இருப்பினும், அமைச்சர் பதவி ஏற்கும்போது உங்களின் பொறுப்பு இன்னும் கூடுதலாகிறது. இந்தப் பொறுப்பைச் சரியாகச் செய்து மக்களிடம் நல்ல பெயரும் புகழும் அடைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்" என்று பேசியுள்ளார்.