Published:Updated:

இளையராஜா மேடையை இரவல் வாங்கியதா தமிழக அரசு? - விமர்சனத்தைக் கிளப்பிய விவகாரம்!

இளையராஜா

தமிழக அரசின் தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டுத் துறை கடந்த 21-ம் தேதி அன்று 'நம்ம ஊரு திருவிழா' என்கிற நிகழ்ச்சியை நடத்தியது. இதை வைத்துதான் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

இளையராஜா மேடையை இரவல் வாங்கியதா தமிழக அரசு? - விமர்சனத்தைக் கிளப்பிய விவகாரம்!

தமிழக அரசின் தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டுத் துறை கடந்த 21-ம் தேதி அன்று 'நம்ம ஊரு திருவிழா' என்கிற நிகழ்ச்சியை நடத்தியது. இதை வைத்துதான் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

Published:Updated:
இளையராஜா

இளையராஜா நடத்திய இசை விழாவின் மேடையையே தமிழக அரசு நடத்திய விழாவுக்குப் பயன்படுத்தியதாக சமூக வலைதளங்களில் தமிழக அரசைக் கிண்டலடித்து விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன.

தமிழ் இசை உலகின் முடிசூடா மன்னனாக உள்ள இசைஞானி இளையராஜா கடந்த 18-ம் தேதி அன்று சென்னை, தீவுத்திடலில் பிரமாண்ட இசைக்கச்சேரி ஒன்றை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரபல தனியார் நிறுவனம் ஒன்று செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கான மேடையை பிரமாண்டமாக, நவீனத் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய வகையில் அமைத்திருந்தனர்.

இளையராஜா இசை நிகழ்ச்சி மேடை
இளையராஜா இசை நிகழ்ச்சி மேடை

குறிப்பாக மேடையின் பின்புறம் இருந்த பிரமாண்ட எல்.இ.டி திரையில் இளைஞராஜாவின் உருவம் ஒளிப்பரப்பட்டது. அதிகமான கூட்டம் கூடும் என்பதால் அதற்கு ஏற்றாற்போல மிக நேரத்தியாக இந்த மேடை அமைக்கப்பட்டு, இளையராஜாவின் இசைக் கச்சேரியும் சிறப்பாக நடந்து முடிந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டுத் துறை சார்பில் கடந்த 21-ம் தேதி அன்று 'நம்ம ஊரு திருவிழா' என்கிற தமிழகத்தின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் நிகழ்ச்சியை நடத்த முடிவெடுக்கப்பட்டது. மானாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற நாட்டியங்கள், தெம்மாங்குப் பாடல்கள் எனப் பல வகையான நிகழ்ச்சிகளை நடத்தியது. இதற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே தமிழக அரசு செய்திருந்த நிலையில், தீவுத்திடலில் இந்த நிகழ்ச்சியை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது. 18-ம் தேதி அன்று இளையராஜாவின் இசைக்கச்சேரி நடந்த அதே இடத்தில் 'நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சியை நடத்த தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படியே நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இளையராஜாவின் இசைக்கச்சேரி நடந்த மேடை புகைப்படத்தையும், நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சியின் மேடை புகைப்படத்தையும் ஒன்றாகப் பதிவிட்டு, 'இளையராஜாவின் மேடையை இரவல் வாங்கியதா தமிழக அரசு' என்று சமூக வலைதளங்களில் கிண்டலடித்துள்ளார்கள். மேலும், 'கலைஞரின் வாரிசு நடத்திய கலைச் சங்கமம் நிகழ்ச்சியில் இளையராஜாவின் மேடையைத் திருடியது சரியா?' என்றெல்லாம் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்கள்.

நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் அதே மேடை
நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் அதே மேடை

இதுகுறித்து நிகழ்ச்சி நடத்திய அரசு அதிகாரிகளிடம் கேட்டால், “இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முழுவதும் கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் உயர் அதிகாரிகளே ஏற்பாடு செய்தார்கள். இளையராஜா நிகழ்ச்சி முடிந்து, இரண்டு நாள்களில் அடுத்த நிகழ்ச்சி என்பதால் புதிய மேடை அமைப்பதில் சிக்கல் இருந்தது. எனவே அந்த மேடையையே பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தார்கள். அதே சமயம், மேடை அமைத்த நிறுவனத்திற்கு அரசு சார்பில் உரிய வாடகை கொடுக்கப்பட்டுவிடும். அவசரத்திற்கான ஒரு ஏற்பாடுதான் இது" என்று பதிலளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism