Election bannerElection banner
Published:Updated:

ஓடிடி தளங்களுக்குக் கட்டுப்பாடுகள் இருக்கிறதா, இல்லையா... மத்திய அமைச்சர் சொல்வது என்ன?

OTT தளங்கள்
OTT தளங்கள் ( metamorworks )

அரசு சார்பில் வெளியிடப்பட்ட விதிமுறைகள் யாவும் ஓடிடி தளங்களுக்கு சுய-ஒழுங்குமுறையை ஊக்குவிக்கிறதே தவிரத் தணிக்கை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தெரிவிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே ஓடிடி தளங்கள் மீதான கட்டுப்பாடுகள் பேசுப்பொருளாகி இருக்கின்றன. அமேசான் ப்ரைமில் வெளியான 'தாண்டவ்' தொடரைத் தொடர்ந்து ஓடிடி தளங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற குரல் அரசுத்தரப்பில் இருந்து ஓங்கி ஒலித்து வருகிறது. தாண்டவ் தொடரில் இந்து மத நம்பிக்கைகள் புண்படுத்தப்பட்டதாகக் கூறி, அந்தத் தொடர் சார்ந்து பல வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கடந்த வாரம் புதிதாக அரசு வெளியிட்ட விதிமுறைகளில் ஓடிடி தளங்களுக்கும் சில வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

ஓடிடி தளங்கள் | OTT
ஓடிடி தளங்கள் | OTT

இதனைத் தொடர்ந்து தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஓடிடி பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை ஓர் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஓடிடி தளங்கள் எதுவும் அரசாங்கத்தில் பதிவு செய்யத் தேவையில்லை எனவும் விதிமுறையில் குறிப்பிட்டுள்ள சுய-ஒழுங்குமுறை அமைப்பில் அரசு சார்பில் பரிந்துரைக்கப்படும் பிரதிநிதிகள் இருக்கமாட்டார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லையா?"- `தாண்டவ்' பிரச்னை உணர்த்தும் பாடம் என்ன?
Prakash Javadekar
Prakash Javadekar

அரசு சார்பில் வெளியிடப்பட்ட விதிமுறைகள் யாவும் சுய-ஒழுங்குமுறையை ஊக்குவிக்கிறதே தவிரத் தணிக்கைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தெரிவிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெளிவுப்படுத்தியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயம் அரசுத்தரப்பில் இப்படித் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சில நாட்களுக்கு முன் 'தாண்டவ்' தொடர் தொடர்பான புகார் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் பூஷன், "தற்போது எந்த வித கட்டுப்பாடுகளும் இன்றி இயங்கி வரும் ஓடிடி தளங்களுக்கு, குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். என்ன மாதிரியான நிகழ்ச்சிகள் அந்தத் தளங்களில் இடம் பெறவேண்டும் என்பது குறித்த கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமேசான் ப்ரைமில் வெளியான 'தாண்டவ்' தொடர் யாரையேனும் புண்படுத்தியிருந்தால், தாங்கள் மன்னிப்பு கோருவதாக அந்நிறுவனம் சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு