Published:Updated:

வேளச்சேரியில் கமல்ஹாசன் போட்டி... மயிலாப்பூரில் ஶ்ரீப்ரியா?!

சமத்துவ மக்கள் கட்சிக்கும், இந்திய ஜனநாயக கட்சிக்கும் தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, மீதி 154 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் முதல்முறையாக 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி என இரு கட்சிகளுடன் இணைந்து இந்தத்தேர்தலை சந்திக்கிறது. இக்கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கும், இந்திய ஜனநாயக கட்சிக்கும் தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, மீதி 154 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது.

கமல்ஹாசன் சென்னை மயிலாப்பூரில் போட்டியிடுவார் என சொல்லப்பட்டு வந்தநிலையில், பின்னர் கோவையில் போட்டியிடுவார் எனசொல்லப்பட்டது. ஆனால், தமிழகம் முழுக்க தேர்தல் பிரசாரம் செய்யவேண்டியிருப்பதால் மூன்று நாட்களுக்குள் முழு தொகுதியிலும் பிரசாரம் செய்யக்கூடிய அளவிலான சிறு தொகுதியை பரிந்துரைக்குமாறு கட்சி நிர்வாகிகளிடம் கேட்டிருந்திருக்கிறார் கமல்ஹாசன். அதன்படி நிர்வாகிகள் கொடுத்த சிறு தொகுதிகளின் பட்டியலில் கமல்ஹாசன் வேளச்சேரி தொகுதியை டிக் அடித்திருக்கிறார்.

கமல் - சரத்குமார்
கமல் - சரத்குமார்

வேளச்சேரி தொகுதி கிட்டத்தட்ட 3 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதி. ஆனால், 2016 சட்டமன்றத் தேர்தலில் 1 லட்சத்து 75 ஆயிரம் வாக்குகளே பதிவாகின. இதில் திமுகவின் வேட்பாளர் நடிகர் சந்திரசேகர் 70,139 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இந்தத்தொகுதியில்தான் போட்டியிட முடிவெடுத்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட மயிலாப்பூர் தொகுதியில் நடிகை ஶ்ரீபிரியா போட்டியிடுவார் எனத்தெரிகிறது. அதேப்போல் நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு