Published:Updated:

`சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட குரல் அது..!' - நடிகர் விஜய் கருத்தை ஆதரித்த கமல்

kamal
kamal

``யாரை எங்கு உட்கார வைக்கணுமோ... அவர்களை அங்கு உட்கார வைத்தால் நல்லா இருக்கும்.." என்ற விஜய்யின் அதிரடி பேச்சு, ஹாட் டாபிக்காக வலம் வருகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் `பிகில்' படத்தின் இசை வெளியீட்டுவிழா நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. `பேனர் வைக்கவேண்டாம்’ என்ற விஜய்யின் கோரிக்கையை ஏற்று, பேனர்கள் எதுவும் வைக்கப்படவில்லை. நிகழ்ச்சியில் விஜய்யின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபனா, `மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஆனந்தராஜ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இசை வெளியீட்டு விழாவின்போது பேசிய விஜய், ``லைஃப், ஃபுட்பால் கேம் மாதிரி. நாமெல்லாம் கோல் அடிக்க ஆசைப்படுவோம். அதைத் தடுக்க ஒருகூட்டம்வரும். நம்மகூட இருக்குறவனே சேம் சைடு கோல் போட்ருவான். யாரோட அடையாளத்தையும் எடுத்துக்கிடாதீங்க. உங்களுக்குன்னு ஒரு அடையாளத்தைக் கொண்டுவாங்க.

கமல் சொன்ன அந்தக் குட்டிக் கதையில் அழுகை மட்டுமல்ல, அரசியலும் புரிந்தது! #10YearsOfUnnaipolOruvan
vijay
vijay

புடிச்சா எடுத்துக்கோங்க; இல்லைனா விட்டுருங்க. உலகத்துலயே உழைச்சவனை மேடையில் ஏத்தி அழகு பார்க்குற முதலாளி, ரசிகன்தான். அரசியல்ல புகுந்து விளையாடுங்க; ஆனா விளையாட்டுல அரசியல் பாக்காதீங்க. சுபஸ்ரீ விவகாரத்தில் ட்விட்டரில் ஒரு ஹேஷ்டேக் கொண்டு வந்திருந்தா நல்லா இருந்திருக்கும். யார் மேல பழிபோடுறதுனு தெரியாம லாரி டிரைவர் மேலயும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுறாங்க. யாரை எங்கு உட்கார வைக்கணுமோ... அவர்களை அங்கு உட்கார வைத்தால் நல்லா இருக்கும்.." என்று அனல் பறக்கப் பேசினார்.

அவரது இந்தப் பேச்சு வைரலாகியது. விஜய்யின் கருத்துக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்கக் கூடாது. பொதுவான மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. விபத்தின் மூலம் கிடைத்த மொழி ஆங்கிலமாக இருந்தாலும் நன்மையாகவே அமைந்தது ஆங்கிலம். அடிமையாக இருந்தபோதிலும் ஆங்கிலத்தை வைத்து நாம் வேறு கருவி செய்துகொண்டோம்.

kamal
kamal

எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் 5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வுக்கு மூன்று ஆண்டு விலக்கு கொடுத்துள்ளனர். கல்வித்துறையில் சீரிய திட்டங்கள் கொண்டு வர வேண்டும்” என்றார்.

அப்போது செய்தியாளர்கள், `யாரைக் கைது செய்ய வேண்டுமோ அவரை விட்டுவிட்டு, பேனர் பிரின்ட் செய்த கடைக்காரரை கைது செய்கின்றனர்' என்று நடிகர் விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குக் கமல், ``சரியான நேரத்தில் சரியான மேடையைப் பயன்படுத்தி நியாயத்துக்காகக் குரல் கொடுத்த தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு