Published:Updated:

"ராமதாசும் திருமாவும் இணைந்தால் தமிழக அரசியலே மாறிவிடும்!" - இயக்குநர் தங்கர்பச்சான்

இயக்குநர் தங்கர்பச்சான்

பாசமலரே ஒரு வங்காள நாவலை வைத்து எடுக்கப்பட்டதுதான். எஸ்.பி.முத்துராமனே இதுபோல நிறைய படம் பண்ணியிருக்கிறார். ஆனால் அவையனைத்தும் வெறும் வணிக நாவலிலிருந்து படமாக எடுக்கப்பட்டது. யாரும் தீவிர நாவலைத் தழுவி எடுக்கவில்லை.

"ராமதாசும் திருமாவும் இணைந்தால் தமிழக அரசியலே மாறிவிடும்!" - இயக்குநர் தங்கர்பச்சான்

பாசமலரே ஒரு வங்காள நாவலை வைத்து எடுக்கப்பட்டதுதான். எஸ்.பி.முத்துராமனே இதுபோல நிறைய படம் பண்ணியிருக்கிறார். ஆனால் அவையனைத்தும் வெறும் வணிக நாவலிலிருந்து படமாக எடுக்கப்பட்டது. யாரும் தீவிர நாவலைத் தழுவி எடுக்கவில்லை.

Published:Updated:
இயக்குநர் தங்கர்பச்சான்
ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்ட பேராசிரியை பர்வீன் சுல்தானா, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த யூடியூப் தொடரில் இயக்குநர், எழுத்தாளர், ஒளிப்பதிவாளர் என தங்கர் பச்சானைச் சந்தித்து உரையாடினார். அந்த உரையாடலிலிருந்து...
இயக்குநர் தங்கர்பச்சான்
இயக்குநர் தங்கர்பச்சான்

உங்களுடைய ஒன்பது ரூபாய் நோட்டு படம் ஏற்கெனவே வந்த ஒரு பிரெஞ்சு நாவலின் தழுவல் என்கிறார்களே?

எந்த பிரெஞ்சு நாவலையும் நான் படித்ததில்லை. அதுவும் அந்த காலகட்டத்தில் நான் எதுவுமே படித்ததில்லை. அப்படிப்பட்ட வாழ்க்கை எல்லா இடங்களிலுமே இருக்கும். ஒரு விவசாயின் வாழ்க்கை மிக குறைந்த அளவில்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு விவசாயி வாழ்க்கையை யார் நாவலாக எழுதுகிறார்கள்? ஒரு கூட்டுக்குடும்பம், அந்தக் குடும்பத் தலைவர் எடுக்கிற தவறான முடிவால் எப்படி காணாமல் போகிறது? என்பதுதான் கதை. இது உண்மையாலுமே நான் என்னுடைய இளம் வயதில் என்னுடைய கிராமத்தில் பார்த்த கதை. அதில் வரும் சம்பவங்கள் அனைத்துமே என் இளவயதில் நடந்த சம்பவங்கள்தான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொதுவாக தங்கர் பச்சான் என்றால் காரசாரமாக விவாதிக்கக் கூடியவர். கருத்தியல் ரீதியாக விமர்சனம் வைப்பவர் என்று கடுமையானவராக அறியப்படக் காரணம் என்ன?

நான் எப்போதும் அமைதியாகத்தான் இருப்பேன். ஒன்றை எதிர்க்க வேண்டுமென்றால்தான் வேறு மாதிரி மாறிவிடுவேன். இது அனைவருக்குமே வரக்கூடிய ஒரு விஷயம்தான். இரண்டு நாளைக்கு முன் என் மூத்த மகன் என் தோளில் தட்டிக்கொடுத்து, 'இப்ப நல்ல பையனா இருக்கிங்க. பழைய தங்கர்லாம் இல்லியே. ஏதோ ஒன்னு கொறஞ்ச மாதிரி தெரியுது' என்று சொன்னான்.

இயக்குநர் தங்கர்பச்சான்
இயக்குநர் தங்கர்பச்சான்

நீங்களும் இராமதாஸும் ஆரம்ப காலத்தில் நெருக்கமாக இருந்தீர்கள். தற்போது உங்களுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறதே?

நானும் இராமதாஸும் ஐந்து நிமிடம் கூட தனியாக சந்தித்து உரையாடியிருக்க மாட்டோம். ஏதாவது விழாவில் பார்ப்பதோடு சரி. நீங்கள் தான் தவறாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள். அவர் விளிம்பு நிலை மக்களுக்கான ஒரு குரலாய் இருப்பவர். நாம் உடுத்தும் உடையிலிருந்து, உண்ணும் உணவு வரை அனைத்தும் விளிம்பு நிலை மக்களின் உழைப்பால் உருவானவையே. ஆனால் இன்னும் அவர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இராமதாஸும் திருமாவும் இணைந்தால் தமிழக அரசியலே மாறிவிடும். ஆனால் அவர்களைப் பிரித்தே வைத்திருப்பார்கள். இணைய விட மாட்டார்கள். ஜெய் பீம் படம் பார்க்கச் சொல்லி நான் சொன்ன போது என்னை அவ்வளவு விமர்சித்தார்கள். உழைக்கும் மக்களின் கைகளில் அரசியல் வந்தால் தான் எல்லாமே மாறும்.

சமீப காலங்களில் நாவல்களை தழுவி எடுக்கப்படும் திரைப்படங்கள் பெருமளவில் கொண்டாடப்படுகின்றன. இதை நீங்கள் எப்படி பாரக்கிறீர்கள்?

இது முற்றிலுமாக வரவேற்கக்கூடிய ஒரு விஷயம். இதை நாம் என்றோ செய்திருக்க வேண்டும். எப்போதும் கட்டுக்கதைகளையே படமாக எடுத்துக்கொண்டிருந்தோம். இப்போது நம்மை சுற்றியுள்ள வாழ்வியலைப் படமாக எடுக்கிறோம். ஆரம்ப காலக்கட்டத்தில் இது போன்ற முயற்சிகள் நடந்தன. பாசமலரே ஒரு வங்காள நாவலை வைத்து எடுக்கப்பட்டது தான். எஸ்.பி.முத்துராமனே இது போல நிறைய படம் பண்ணியிருக்கிறார். ஆனால் அவையனைத்தும் வெறும் வணிக நாவலிலிருந்து படமாக எடுக்கப்பட்டது. யாரும் தீவிர நாவலைத் தழுவி எடுக்கவில்லை.

5. சமூகத்தில் ஏற்படும் சிதைவுகளுக்கு சினிமா தான் காரணமா?

ஒரு கலைஞனுக்கு சமூகத்தில் ஒரு அடிப்படை பொறுப்பு இருக்கிறது. எதை நாம் பொது வெளியில் காட்ட வேண்டும். எதை நாம் பேச வேண்டுமென்று. நல்ல சினிமா எடுத்தால் உடனடியாக அதை பின்பற்றி போக மாட்டார்கள் தான். ஆனால் அதே சமயம் தவறான ஒரு விஷயத்தை நாம் காண்பிக்கும் போதும், அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மறுக்க முடியாது. ஒரு படம் ஒரு மனிதனோடு உரையாடுகிறது. அதனால் அதை சரியாக எடுக்க வேண்டும். சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கல்ல. அது ஒரு படிப்பு.