Published:Updated:

தடை தாண்டும் மெரினா புரட்சி

மெரினா புரட்சி
பிரீமியம் ஸ்டோரி
மெரினா புரட்சி

ஜல்லிக்கட்டுக்கு எதிரான நடிகை... ஓ.பி.எஸ். சீன் கட்... மத்திய அரசுக்கு ம்யூட்

தடை தாண்டும் மெரினா புரட்சி

ஜல்லிக்கட்டுக்கு எதிரான நடிகை... ஓ.பி.எஸ். சீன் கட்... மத்திய அரசுக்கு ம்யூட்

Published:Updated:
மெரினா புரட்சி
பிரீமியம் ஸ்டோரி
மெரினா புரட்சி

ல்லிக்கட்டுப் புரட்சி நடந்து மூன்று ஆண்டுகள் முடிவடையும் சூழலில், வரலாறு படைத்த அந்தப் போராட்டத்தை ‘மெரினா புரட்சி’ என செல்லுலாய்டில் செதுக்கியிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டுப் புரட்சியை ஒடுக்க அதிகாரவர்க்கம் நடத்திய முயற்சிகளைப்போலவே ‘மெரினா புரட்சி’ திரைப்படம் வெளியாவதிலும் எக்கச்சக்கச் சிக்கல்கள். பல்வேறு தடைகளைத் தாண்டி டிசம்பர் 13-ம் தேதி திரைக்கு வருகிறது ‘மெரினா புரட்சி’.

படத்தைப் பார்த்த சென்சார் போர்டு, காரணம் எதுவும் சொல்லாமல் மறுசீராய்வுக்கு அனுப்பிவிட்டது. அடுத்து நடிகை கவுதமி தலைமையிலான மறுசீராய்வுக் குழு, படத்தைப் பார்த்தது. அந்தக் குழுவும் காரணம் தெரிவிக்காமல் படத்துக்குத் தடை விதித்தது. இரண்டாவது மறுசீராய்வுக் குழுவுக்குப் படம் போனது. இதனால், நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார் படத்தின் இயக்குநர் எம்.எஸ்.ராஜ். ‘சென்சார் சர்ட்டிஃபிகேட்டுக்கு விண்ணப்பித்து 80 நாள்கள் ஆகியும் சான்றிதழும் தரவில்லை. அதற்கான காரணத்தையும் சொல்லவில்லை. அப்பீலுக்கான வாய்ப்பு களும் மறுக்கப்பட்டன’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தடை தாண்டும் மெரினா புரட்சி

‘தணிக்கைச் சான்றிதழ் தொடர்பாக ஏழு நாள்களுக்குள் தகுந்த பதில் அளிக்க வேண்டும்’ என சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். கடைசியில் நடிகை ஜீவிதா தலைமையிலான குழுவினர் படத்தைப் பார்த்துவிட்டு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். ‘மத்திய அரசு’ என்ற வார்த்தைகள் வரும் இடத்திலெல்லாம் ‘ம்யூட்’ கொடுத்திருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் வரும் காட்சி நீக்கப்பட்டிருக்கிறது. பீட்டா தொடர்பான காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார்கள். அதற்கான ஆவணங்களைக் காட்டிய பிறகு ஒருவழியாக ‘ஓகே’ சொல்லியிருக் கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் போராடிவரும் பீட்டா அமைப்பும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது; வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. `இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் கருத்தைச் சொல்ல உரிமை உண்டு’ என விளக்கம் கொடுத்திருக்கிறது படக்குழு. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ராஜேஸ்வர் விசாரணை கமிஷனும், படத்தின் இயக்குநருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டது. இதற்கிடையே நார்வே, கனடா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் அங்கு உள்ள தமிழர்களின் உதவியுடன் ‘மெரினா புரட்சி’ திரையிடப்பட்டது. அந்த நாடுகளும் படத்துக்குச் சான்றிதழ் வழங்கியிருந்தன. நார்வே திரைப்பட விழாவிலும் இந்தப் படத்துக்கு விருது வழங்கப்பட்டது.

தடை தாண்டும் மெரினா புரட்சி

ஆடல், பாடல் என தமிழ் சினிமாவின் வழக்கமான மசாலா மெனுவுக்குள் செல்லவில்லை இயக்குநர். நிஜம் மட்டுமே பேசப்பட்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்பதில் தொடங்கி, போராட்டத்தின் இறுதி நாள் கலவரம் வரை பதிவு செய்திருக்கிறார்கள். போராட்டத்தை திசைதிருப்ப மேற்கொள்ளப்பட்ட உள்ளடி வேலைகளும் தோலுரிக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டுத் தடையின் பின்னணியில் இருக்கும் அரசியலையும் பீட்டாவின் பின்னணியையும் அலசுகிறது.

ஜல்லிக்கட்டுப் புரட்சிக்கு முன்பு நடந்த பணமதிப்பிழப்பு, காவிரி மேலாண்மை வாரியம் போன்ற விஷயங்களும் இடம்பெற்றிருக்கின்றன. ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருந்த இரண்டு தமிழர்கள், ஒரு நடிகை, ஒரு கட்சி என அடையாளம் காட்டி புலனாய்வு செய்திருக்கிறார் இயக்குநர். மெரினாவில் போராட்டம் வலுத்த ஜனவரி 17-ம் தேதி, தமிழக அமைச்சர்கள் என்ன செய்துகொண்டிருந்தனர் என்பதையும் பதிவுசெய்திருக்கிறது படம்.

தடை தாண்டும் மெரினா புரட்சி

“இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பிறகு தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய போராட்டம் இது. எனவே, இதை வரலாற்று ஆவணமாகப் பதிவுசெய்ய வேண்டும் என விரும்பினோம். அதுவே ‘மெரினா புரட்சி’ படம். அமெரிக்காவில் இரட்டைக்கோபுரம் இடிக்கப்பட்ட விவகாரத்தில் ஒசாமா பின்லேடன் பெயர் அடிப்பட்டது. அந்தச் சம்பவத்தை `Fahrenheit 9/11 என்ற தலைப்பில் ஆவணப்படமாக எடுத்தார் மைக்கேல் மூர். அந்தச் சம்பவத்துக்குப் பின்னால் மறைந்துகிடந்த உண்மைகள், சூழ்ச்சிகள், பின்னணிகளை அவர் வெளிக் கொண்டுவந்தார். அதுதான் ‘மெரினா புரட்சி’ படத்தை எடுக்க உந்துதலாக இருந்தது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கான பொறி எங்கிருந்து ஆரம்பித்தது எனக் கண்டுபிடித்தேன். அந்த உண்மையை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என நினைத்தேன். 10 லட்சம் பேரைத் திரட்டிய

18 நபர்களை, படத்தில் அடையாளம் காட்டியுள்ளேன். வரலாறு படைத்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதுடன் அந்தப் போராட்டத்தை மீண்டும் ரீவைண்ட் செய்து பார்க்கும் வகையில் படத்தை எடுத்திருக்கிறோம்’’ என்றார் இயக்குநர் ராஜ்.

மெரினா புரட்சி... வரலாற்று ஆவணம்!