‘ரஜினி அரசியலுக்கு வருவார்; கமலுக்கும் ரஜினிக்கும் இடையிலான 40 ஆண்டுகால நட்பு அரசியலிலும் தொடரும்’ என்ற பேச்சுகள் எல்லாம் கொரோனா ஊரடங்கில் அடங்கிப்போயின.

கூடிவந்த நேரத்தில் கொரோனா செய்த இடையூறைவிட, இருவரும் சேரக் கூடாது என்பதில் சிலர் உறுதியாக இருப்பதாக மனம் திறக்கிறார்கள் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள்.

மய்யத்தின் முக்கிய நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசியபோது, ‘‘கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் 50-வது படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். நட்புக்காக ரஜினி ஒப்புக்கொண்டதை சிலர் திரித்து, ‘கமலுக்கு பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளதால், அவருக்கு உதவும் வகையில் ரஜினி இந்தப் படத்தில் நடிக்கிறார்’ என்று செய்தி பரப்பிவிட்டனர். இதை கேள்விப்பட்ட கமல், ‘அப்படி கஷ்டமிருந்தால் எனது நிறுவனத்தில் நானே நடித்து சரிசெய்ய மாட்டேனா? என்னையும் ரஜினியையும் பிரிக்க இரண்டு பெரிய கட்சிகள் பல முனைகளிலும் வேலைகள் செய்கின்றன’ என்று வருத்தப்பட்டார்’’ என்றார்கள்.

உண்மையில் படத் தயாரிப்பு விவகாரத்தில் நடந்ததே வேறு என்கிறார்கள், திரைத் துறையில் இருப்பவர்கள். ‘‘இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தான் இயக்கிய ‘கைதி’ திரைப்படத்தை ரிலீஸுக்கு முன்பே கமலிடம் போட்டுக் காட்டினார். படத்தைப் பார்த்து கமல் பாராட்டியிருக்கிறார். அத்துடன், ராஜ்கமல் நிறுவனத்துக்கு படம் செய்து கொடுக்குமாறு லோகேஷிடம் பேசி ஒப்பந்தம் போட்டுள்ளது கமல் தரப்பு.

அதே ‘கைதி’ திரைப்படத்தை ரஜினியும் பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜை அழைத்துப் பாராட்டியதோடு, ‘எனக்கு ஒரு படம் பண்ணித் தர முடியுமா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ராஜ்கமல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்ட விஷயத்தை ரஜினியிடம் லோகேஷ் சொல்லியிருக்கிறார். நீண்ட யோசனைக்குப் பிறகு கமலிடமே தொடர்புகொண்ட ரஜினி, லோகேஷ் இயக்கத்தில் தான் நடிக்க விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார். உடனே கமல் ‘என் நிறுவன தயாரிப்பில் நீங்களே நடியுங்கள். அடுத்த படத்தில் நான் நடித்துக் கொள்கிறேன்’ என்று சொல்லியிருக் கிறார். இதைத்தான் இப்படித் திரித்து விட்டிருக்கிறார்கள்’’ என்கின்றனர்.

கமல் கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளாகிவிட்டது. அவர் ஒரு தலைவராக உருவாகிவிட்டார். வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு எப்படியும் ரஜினியும் அரசியலுக்கு வந்துவிடுவார் என்று கமல் உறுதியாக நம்புகிறார். கொரோனா ஊரடங்கால் இது தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது. கொரோனாவுக்கு முன்பே தன் அரசியல் நிலைப்பாட்டை ஓரளவுக்கு விவரித்துவிட்டார் ரஜினி.

இந்தச் சூழ்நிலையில்தான், ரஜினியுடன் கமல் அரசியலில் கைகோப்பார் என்று தகவல்கள் பரவின. அதை உறுதிப்படுத்தும்வகையில், தற்போது ராஜ்கமல் நிறுவன தயாரிப்பில் ரஜினி நடிப்பது, இரண்டு பெரிய கழகங்களின் நிர்வாகிகளை கவலையடைய வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அவர்கள்தான், இரண்டு தரப்புக்கும் இடையில் பல தகவல்களைப் பரப்பி, இந்தக் கூட்டணி அமையக் கூடாது என்பதற்காக பல்வேறு வேலைகளையும் செய்வதாகச் சொல்கிறார்கள் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய கமலுக்கு நெருக்கமான நிர்வாகி ஒருவர், ‘‘ரஜினி முதல்வர் ஆகப்போவதில்லை என்றதும், அவர் அரசியலுக்கு வந்தால் யார் முதல்வர் என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்தது. ஒருவேளை கமல் கட்சியுடன் கூட்டணி ஏற்பட்டால் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், ‘கமல் முதல்வர் பதவிக்குக் குறிவைக்கிறார்’ என்று ரஜினியிடம் சிலர் இட்டுக்கட்டியுள்ளனர். அத்துடன், ‘கமலுக்கும் உங்களுக்கும் எந்த வகையிலும் சரிப்பட்டுவராது’ என்று கூறி, இருவரின் நட்பையும் உடைக்கப் பார்க்கின்றனர்.

எங்கள் தலைவரைப் பொறுத்தவரை தனியாக நின்று வாக்குகளைப் பிரிப்பதைவிட ரஜினியுடன் இணைந்தால் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைக்க முடியும் என நம்புகிறார். ரஜினியும் ‘பா.ஜ.க பக்கம் போகாமல் பிற சிறிய கட்சிகளை இணைத்து, திராவிடக் கட்சிகளை ஜெயிக்க வேண்டும்’ என நினைக்கிறார். அதனால், கமலுடன் இணைவதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இல்லை. தேர்தல் நேரத்தில் இவர்கள் இருவரும் இணைந்து களத்தில் இறங்கினால், ஊடக கவனம் முழுவதும் இவர்கள் பக்கம் திரும்பிவிடும். இரண்டு திராவிடக் கட்சிகளிலும் மக்களை ஈர்க்கும் தலைவர்கள் இல்லாத காரணத்தால், இந்தக் கூட்டணியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இருவரையும் அரசியல், சினிமா இரண்டிலும் சேரவிடாமல் தேவையற்ற தகவல்களைப் பரப்பி வருகின்றனர்’’ என்றனர்.

ரஜினி மன்றத்தைச் சேர்ந்த சிலரிடம் இதுபற்றிக் கேட்டதற்கு, ‘‘ரஜினி கட்சியே ஆரம்பிக்க மாட்டார் என்று இப்போதுவரை சிலர் ஆருடம் சொல்லிவருகின்றனர். ஆகஸ்ட் மாதம் அவர்களுக்கு பதில் கிடைக்கும். கமலுடன் ரஜினி அரசியலிலும் கூட்டணி சேர்ந்தால் ஆச்சர்யப்படுவதற் கில்லை. அதற்காக கமலை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவார் என்பதெல்லாம் அதீத கற்பனை. ரஜினியின் முடிவை யாராலும் யூகிக்க முடியாது. தேர்தலுக்கு முன்பாக நிச்சயமாக முதல்வர் வேட்பாளரை ரஜினி அறிவித்துவிடுவார். கமலின் பண நெருக்கடிக்காக ராஜ்கமல் நிறுவனப் படத்தில் ரஜினி நடிப்பதாகச் சொல்வதும் கட்டுக்கதைதான்’’ என்றனர்.

சினிமாவில் கமலும் ரஜினியும் கேட்காத கதைகள் இல்லை... அரசியலில் அவர்களுக்குச் சொல்லப்படும் கதைகள், அவர்களே எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டிருக்கின்றன.

தேர்தல் க்ளைமாக்ஸ் எப்படி அமையுமோ!