Published:Updated:

"`கயல்' தொடரில் வரும் கயல்தான் நம்ம சின்னம்மா!"- சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேச்சு

கயல் - சசிகலா

"சாதாரண சாமானிய ஆட்கள் எல்லாம் இன்னைக்கு மந்திரி, எம்பி அங்க, இங்கெல்லாம் போனாங்க. அதுக்கு எல்லாம் ஏணி சின்னம்மாதான்!" - திவாகரன்

"`கயல்' தொடரில் வரும் கயல்தான் நம்ம சின்னம்மா!"- சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேச்சு

"சாதாரண சாமானிய ஆட்கள் எல்லாம் இன்னைக்கு மந்திரி, எம்பி அங்க, இங்கெல்லாம் போனாங்க. அதுக்கு எல்லாம் ஏணி சின்னம்மாதான்!" - திவாகரன்

Published:Updated:
கயல் - சசிகலா

சசிகலா கட்சியுடன் அண்ணா திராவிடர் கழகத்தை இணைத்த நிகழ்வு தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சசிகலாவின் சகோதரர் திவாகரன், சசிகலாவை 'கயல்' டிவி தொடரில் வரும் நாயகி கயலுடன் ஒப்பிட்டுப் பேசியதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.

தனது குடும்பத்திற்காக உழைத்து, குடும்பத்தை வழிநடத்தும் பெண்ணைச் சார்ந்த கதைக்களம் கொண்டதுதான் 'கயல்' நெடுந்தொடர். இந்தத் தொடரின் நாயகியாக சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி நடித்துக் கொண்டிருக்கிறார். மேடையில் திவாகரன் 'கயல்' கதாபாத்திரத்தோடு சசிகலாவை ஒப்பிட்டுப் பேசியிருப்பது சமூகவலைதளப் பக்கங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

சசிகலா - திவாகரன்
சசிகலா - திவாகரன்

திவாகரன் பேசும்போது, "இந்த நேரத்தில் நம்முடைய தொண்டர்களின் அரவணைப்பு அவருக்கு ரொம்ப அவசியம். நம்ம வீட்ல கேட்டு திறந்தவன் எல்லாம் பெரிய, பெரிய பதவிக்கு போனாங்க. நானும் சரி, என் அக்காவும் சரி எந்தப் பதவிக்கும் ஆசைப்படல. அ.இ.அ.தி.மு.க-வுடன் நாம இணைந்து பொதுச்செயலாளரான சின்னம்மாவிற்குக் கைகொடுக்க வேண்டும் என நினைத்திருந்தோம்.

சன் டிவியில் 'கயல்'ன்னு ஒரு சீரியல் ஒளிபரப்பாகுது. அதுல கயலா ஒரு அம்மா நடிக்குது. அந்தக் கயல் எப்படியோ அப்படித்தான் நம்ம சின்னம்மா. குடும்பத்தைப் பொறுத்தவரைக்கும் சரி, கட்சியை பொறுத்தவரைக்கும் சரி, சாதாரண சாமானிய ஆட்கள் எல்லாம் இன்னைக்கு மந்திரி, எம்பி அங்க, இங்கெல்லாம் போனாங்க. அதுக்கு எல்லாம் ஏணி சின்னம்மாதான்! அந்த நினைப்பு அவங்களுக்கெல்லாம் இருக்கா, இல்லையான்னு எனக்குத் தெரியாது. இது கலியுகம். இந்த யுகத்தில் அதை எதிர்பார்க்கக் கூடாது. எதையும் எதிர்பாராமதான் நீங்க எல்லாரும் இந்த ஐந்தாண்டு பயணித்து இருக்கீங்க. தன்மானம் காத்திருந்து இன்றைக்குச் சரியான தலைமையின் கீழ் சேர்ந்திருக்கீங்க!" என்று பேசினார்.