Published:Updated:

" 'இரட்டை இலைக்குத்தான் எங்க ஓட்டு'னு சொன்னாங்க. ஆனா தோத்துட்டோம் " குழப்பத்தில் நிர்மலா பெரியசாமி

வே.கிருஷ்ணவேணி

''நான் நேரடி அரசியலுக்கு வந்து ஏழு வருடங்கள் ஆகுது. முதன் முதலாக இப்படி ஒரு தோல்வியைப் பார்க்கிறேன்.'' என்கிறார் அ.தி.மு.க தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி

நிர்மலா பெரியசாமி
நிர்மலா பெரியசாமி
''அரவகுறிச்சியைக் கண்டிப்பாக வெற்றிகரமான தொகுதியாகத்தான் நினைத்தோம். தோல்வி அதிர்ச்சி என்பதைவிட ஆச்சர்யமாக இருந்தது''.
நிர்மலா பெரியசாமி
நிர்மலா பெரியசாமி
நிர்மலா பெரியசாமி

''பினராயி விஜயனின் கட்சி பா.ஜ.கவிற்கு எதிரானது. மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் அவர். அவருடைய சித்தாந்தமே வேறு. அவர் பிரதமரின் பதிவியேற்பு நிகழ்ச்சிக்கு போவார் என எதிர்பார்க்கமுடியாது. அதையும் மீறி கூப்பிட்டது பா.ஜ.கவின் பெருந்தன்மை.

என்னுடைய பார்வையில், மாநிலத்தின் முதல்வர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், நாங்க போகாமல் இருக்கவே முடியாது. நாங்கள் கூட்டணிக்கட்சி. எங்களுக்குள் நல்ல உறவு இருக்கு. அதைத்தான் அண்ணன் எடப்பாடி மற்றும் அண்ணன் பன்னீர் செல்வம் அதை சிறப்பாகப் பண்ணியிருக்காங்க. ஒரு நாட்டின் பிரதமர் மதித்து ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முதலமைச்சர்களுக்கும் தனது பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கும்போது, அதை மதித்து கலந்து கொள்வதுதான் ஜனநாயகத்தின் பண்பாடாகும்.

அதை கேரள அரசு மதிக்கத் தவறிவிட்டது. பினராயி விஜயன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து'' என்றவரிடம் தமிழகத்தில் பி.ஜே.பி தோல்வி மற்றும் அ.தி.மு.க தோல்வி பற்றி கேட்டேன்,

''எங்களுக்கே மிகப்பெரிய அதிர்ச்சிதான். 21 நாட்கள் அரவகுறிச்சித் தொகுதியில், சின்னதாராபுரம் பகுதியில் தென் சென்னை தெற்கு மாவட்டத்திற்காக வேலைப் பார்த்தோம். அமைச்சர் கே.சி.வீரமணி, செந்தில்நாதன் உடன் சேர்ந்து மீட்டிங், பிரசாரம் என சுறுசுறுப்பாக வேலைப் பார்த்தோம். வெயிலின் தாக்கத்தையும் தாண்டி கட்சி தோழர்கள், மக்களைப் பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.

' எதுக்கு மேடம் வர்றீங்க கேட்டாங்க. இரட்டை இலைக்குத்தான் எங்க ஓட்டு'னு சொன்னாங்க. ஆனால், நாங்க தோத்துட்டோம். ஜனங்க எல்லாம் என்ன மனசுக்குள்ள வச்சிருந்தாங்கன்னு தெரியல. அவங்க சொன்னதைப் பார்த்தப்போ நாங்க பெருவாரியான வெற்றிப் பெற்றிருப்போம்னு நினைச்சோம். அரவகுறிச்சி கண்டிப்பாக வெற்றிகரமான தொகுதியாகத்தான் நினைத்தோம்.

தோல்வி அதிர்ச்சி என்பதைவிட ஆச்சர்யமாக இருந்தது. திமுக அந்த தொகுதியில் பெரிதாக மக்களுக்கு செய்யலையே எப்படி அவங்களை மக்கள் நம்பினாங்க என்பதுதான் எனக்குப் புரியவில்லை''.

நிர்மலா பெரியசாமி
நிர்மலா பெரியசாமி

''நான் நேரடி அரசியலுக்கு வந்து ஏழு வருடங்கள் ஆகுது. முதன் முதலாக இப்படி ஒரு தோல்வியைப் பார்க்கிறேன். மக்கள் அதிருப்தி என்பதைவிடவும், எங்களுடைய கூட்டணி பிடிக்கலைனு நினைக்கிறோம். எங்களுடைய நியாயங்களை எடுத்து சொல்ல தவறிட்டோமோனு நினைக்கிறோம். அதுதான் மெயின் காரணம். ஆட்சி மீது அதிருப்தி மாதிரி தெரியல. நாடு முழுக்க மகத்தான வெற்றி பெற்ற கட்சிக்கு ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என அடிவாங்கியிருப்பதால் அடுத்து இன்னும் எச்சரிக்கையோடு பா.ஜ.க செயல்படும்''.

''இந்த தேர்தலில்16 சீட்டாவது பெறுவோம்னு நினைச்சோம். ஒரே ஒரு தொகுதிதான் கிடைத்திருப்பது வருத்தம்தான். இதற்கு முதல் காரணம் கூட்டணி கட்சிகள், இரண்டாவது தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிகள் கடந்த ஒன்றரை வருடங்களாக தொடர்ந்து செய்த பொய் பிரச்சாரம். நீட், மீத்தேன், நெடுவாசல், ஹைட்ரோ கார்பன், காவிரி, கட்சத்தீவு பிரச்னை என எல்லாப் பிரச்னைகளுக்கும் ஆரம்பம் முதல் நீர் ஊற்றி வளரவிட்டது, பரப்பிவிட்டது அவர்கள்தான்.

அது இன்னும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அதை எங்கள் கட்சியின் மீது திருப்பிவிட்டுவிட்டார்கள். ஆனால், அடுத்த முறை இப்படி கண்டிப்பாக இருக்காது. மக்களின் நன் மதிப்பை எங்கள் கட்சி பெற்றே தீரும்'' என்றார் நிர்மலா பெரியசாமி.